1. அகர வரிசையில் அமைந்துள்ளதைக் கண்டறிக
(அ) மனத்துயர், முந்நீர், மீமிசை, மேடுபள்ளம்
(ஆ) மனத்துயர், மீமிசை, முந்நீர், மேடுபள்ளம்
(இ) மீமிசை, முந்நீர், மனத்துயர், மேடுபள்ளம்
(ஈ) முந்நீர், மீமிசை, மேடுபள்ளம், மனத்துயர்
விடை: (ஆ) மனத்துயர், மீமிசை, முந்நீர், மேடுபள்ளம்
2. “குடிதழீஇக் கோல் ஓச்சும்” – எவ்வகை அளபெடை?
(அ) இன்னிசை அளபெடை
(ஆ) செய்யுளிசை அளபெடை
(இ) சொல்லிசை அளபெடை
(ஈ) ஒற்றளபெடை
விடை (இ) சொல்லிசை அளபெடை
3. கருவி, கருத்தா-இவ்விரண்டை மட்டும் உணர்த்தும் வேற்றுமை
(அ) இரண்டாம் வேற்றுமை
(ஆ) மூன்றாம் வேற்றுமை
(இ) நான்காம் வேற்றுமை
(ஈ) ஆறாம் வேற்றுமை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்: (ஆ) மூன்றாம் வேற்றுமை
4. திணைகளுக்குரிய ஊர்ப் பெயர்களைப் பொருத்துக:
(அ) குறிஞ்சி – 1. பாடி, சேரி
(ஆ) முல்லை – 2. பேரூர், மூதூர்
(இ) மருதம் – 3. பட்டினம், பாக்கம்
(ஈ) நெய்தல் – 4. சிறுகுடி
அ ஆ இ ஈ
அ. 4 1 2 3
ஆ. 2 1 4 3
இ. 2 4 3 1
ஈ. 3 1 4 2
விளக்கம்: அ. 4 1 2 3
5. பொருத்துக:
அ. கூழை – 1. 1,3,4 – ஆம் சீர்களில் வரும்
ஆ. மேற்கதுவாய் – 2. 1,2,3,4 – ஆம் சீர்களில் வரும்
இ. கீழ்க்கதுவாய் – 3. 1,2,3 – ஆம் சீர்களில் வரும்
ஈ. முற்று – 4. 1,2,4 – ஆம் சீர்களில் வரும்
அ ஆ இ ஈ
அ. 3 1 4 2
ஆ. 1 2 3 4
இ. 1 3 4 2
ஈ. 3 2 4 1
விளக்கம்: அ. 3 1 4 2
6. DUBBING, DIRECTOR-என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
(அ) படப்பிடிப்பு, இயக்குநர்
(ஆ) நகர்த்தும் வண்டி, இயக்குநர்
(இ) ஒலிச்சேர்க்கை, இயக்குநர்
(ஈ) படப்பிடிப்புக் கருவி, தயாரிப்பாளர்
விடை: (இ) ஒலிச்சேர்க்கை, இயக்குநர்
7. ஈற்றில் ஐகாரம் குறைந்து வந்த சொல்
(அ) வளையல்
(ஆ) ஐந்து
(இ) திண்ணை
(ஈ) ஏதுமில்லை
விளக்கம்: (இ) திண்ணை
8. கூகை-உரிய மரபுச் சொல்லை எழுது
(அ) கூவும்
(ஆ) கத்தும்
(இ) குழறும்
(ஈ) அகவும்
விளக்கம்: (இ) குழறும்
9. “SNACKS”- என்ற ஆங்கிலச் சொல்லிற்கு பொருத்தமான தமிழ்ச் சொல்லைத் தேர்க
(அ) சிற்றுண்டி
(ஆ) சிற்றுணா
(இ) சிற்றுணவு
(ஈ) சீரான உணவு
விடை: (ஆ) சிற்றுணா
10. மூன்றடிச் சிற்றெல்லையாய் பாடும் பா
(அ) வெண்பா
(ஆ) ஆசிரியப்பா
(இ) கலிப்பா
(ஈ) வஞ்சிப்பா
விளக்கம்: (ஈ) வஞ்சிப்பா
11. கீழ்வருவனவற்றுள் மரபுச் சொற்கள் இல்லாத தொடர் எது?
அ. சிங்கம்-முழங்கும் (ஆ) பூனை-கீச்சிடும் (இ) புறா-குனுகும் (ஈ) வண்டு-முரலும்
(அ) அ மற்றும் ஆ சரி
(ஆ) இ மற்றும் ஈ சரி
(இ) அ, இ மற்றும் ஈ சரி
(ஈ) ஆ, இ மற்றும் ஈ சரி
12. கலிங்கத்துப்பரணி பாடப்படும் பாவகை
(அ) சிந்துவிருத்தம்
(ஆ) கட்டளை கலித்துறை
(இ) ஆசிரிய விருத்தம்
(ஈ) கலித்தாழிசை
விளக்கம்: (ஈ) கலித்தாழிசை
13. கணவனைத் தேடி அலைந்த சங்ககாலப் பெண்பாற் புலவர்
(அ) காக்கைப்பாடினியார்
(ஆ) காரைக்காலம்மையார்
(இ) வெள்ளி வீதியார்
(ஈ) நப்பசலையார்
விளக்கம்: (இ) வெள்ளி வீதியார்
14. உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓர் ஓக் கும்மே – இப்பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்
(அ) புறநானூறு
(ஆ) அகநானூறு
(இ) ஐங்குநுறூறு
(ஈ) பரிபாடல்
விளக்கம்: (அ) புறநானூறு
15.”—- சிறு புல் நீர் நீண்ட
பனையளவு காட்டும் படித்தால்” – என்ற பாடலைப் பாடியவர்.
(அ) கபிலர்
(ஆ) கம்பர்
(இ) ஒளவையார்
(ஈ) பரணர்
விளக்கம்: (அ) கபிலர்
16. திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?
(அ) 100
(ஆ) 105
(இ) 107
(ஈ) 110
விளக்கம்: (இ) 107
17. “வருகைப் பருவம்” – என்பது
(அ) குழந்தையின் பத்தாம் திங்களில் நிகழ்வது
(ஆ) குழந்தையின் பன்னிரண்டாம் திங்களில் நிகழ்வது
(இ) குழந்தையின் இருபதாம் திங்களில் நிகழ்வது
(ஈ) குழந்தையின் பதின்மூன்றாம் திங்களில் நிகழ்வது
விளக்கம்: (ஈ) குழந்தையின் பதின்மூன்றாம் திங்களில் நிகழ்வது
18. “உலகு குளிர எமது மதியில் ஒழுகும் அமுதகிரணமே” – என்று தொடங்கும் பாடல் எந்தப் பருவத்தில் இடம் பெற்றுள்ளது?
(அ) செங்கீரைப் பருவம்
(ஆ) முத்தம் பருவம்
(இ) வருகைப் பருவம்
(ஈ) அம்புலிப் பருவம்
விளக்கம்: (இ) வருகைப் பருவம்
19. உமறுப்புலவரின் காலம்
(அ) கி.பி.இரண்டாம் நூற்றாண்டு
(ஆ) கி.பி பதினேழாம் நூற்றாண்டு
(இ) கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு
(ஈ) கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டு
விடை - (ஆ) கி.பி பதினேழாம் நூற்றாண்டு
20. “ஆபுத்திரன் நாடு அடைந்த காதை” மணிமேகலையில் ——— காதையாக உள்ளன.
(அ) இருபதாவது
(ஆ) இருபத்து நான்காவது
(இ) இருபத்தேழாவது
(ஈ) இருபத்தொன்றாவது
விடை: (ஆ) இருபத்து நான்காவது
21. சரியான பொருள் தருக. “ஆயம்”
(அ) செவிலியர் கூட்டம்
(ஆ) பாணன் கூட்டம்
(இ) தோழியர் கூட்டம்
(ஈ) அனைத்தும் சரி
விடை: (இ) தோழியர் கூட்டம்
22. தெய்வக் கவிஞர் என்றால் ———- என்று பொருள்படும்
(அ) திவ்வியகவி
(ஆ) அழகியமணவாளதாசர்
(இ) பிள்ளைப்பெருமாள் ஐங்கார்
(ஈ) குமரகுரபரர்
விடை: (அ) திவ்வியகவி
23. மூன்றாம் நந்திவர்மன் எந்நூலின் பாட்டுடைத் தலைவன்?
(அ) உலா
(ஆ) அந்தாதி
(இ) கலம்பகம்
(ஈ) பரணி
விடை : (இ) கலம்பகம்
24. பொருந்தாத இணையைக் கண்டறிக:
(அ) மேதி-எருமை
(ஆ) கேசரி-சிங்கம்
(இ) எண்கு-புலி
(ஈ) மரை-மான்
விடை: (இ) எண்கு-புலி
25. பொருந்தாத தொடரைக் கண்டறிக:
(அ) இழிந்த பிறப்பாய் விடும்
(ஆ) பிறப்பொழுக்கங் குன்றக்கெடும்
(இ) ஏதம் படுபாக் கறிந்து
(ஈ) செல்வத்துப் பயனே ஈதல்
விடை: (ஈ) செல்வத்துப் பயனே ஈதல்
26. “வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க்கபிலன்”
– எனக் கபிலரைப் புகழந்தவர் யார்?
(அ) நக்கீரர்
(ஆ) இளங்கீரனார்
(இ) பெருங்குன்றூர்க்கிழார்
(ஈ) நப்பசலையார்
விடை: (ஆ) இளங்கீரனார்
27. “வெஞ்சின விறல்வேற் காளையொ
டஞ்சி லோதியை வரக்கரைந் தீமே” – பாடியவர் யார்?
(அ) கபிலர்
(ஆ) பேயனார்
(இ) ஓரம்போகியார்
(ஈ) ஓதலாந்தையார்
விடை :(ஈ) ஓதலாந்தையார்
28. ———- மன்னன் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஆவார்.
(அ) சேர
(ஆ) சோழ
(இ) பாண்டிய
(ஈ) பல்லவ
விடை : (அ) சேர
யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்னும் சேரமன்னன், இன்பப் பொருளமைந்த அகப்பொருள் பாடல்கள் திணைக்கு நூறாய் ஐந்நூறு பாடல்களைக்கொண்ட நூல் ஒன்றை உருவாக்கித் தமிழ் உலகிற்கு அளிக்க விரும்பினான். தன் விருப்பத்தைக் கூடலூர்க் கிழார் என்னும் புலவரிடம் கூறினான். அவர் அவ்வவத் திணை பாடுதலில் வல்ல புலவர்களைக் கொண்டு நூறு நூறு பாடல்களைப் பாடச் செய்து “ஐங்குறுநூறு” என்ற நூலைத் தொகுத்தளித்தார்.
29. அகநானூறில் 6, 16 என்ற எண்களாக வரும் திணை
(அ) பாலை
(ஆ) குறிஞ்சி
(இ) நெய்தல்
(ஈ) மருதம்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) மருதம்
அகநானூறு பாடல்களில் எண் வைப்பு முறை
1,3,5,7, 9 …. பாடல்கள் – பாலைத் திணை.
2,8,12,18…. பாடல்கள்-குறிஞ்சித்திணை.
4,14,24,34 ….பாடல்கள்-முல்லைத்திணை.
6,16,26,36 ….. பாடல்கள்-மருதத்திணை.
10,20,30,40 ….. பாடல்கள்-நெய்தல் திணை
30. நல்லந்துவனார் நெய்தல் கலியில் பாடிய பாடல்கள்
(அ) பதிமூன்று
(ஆ) முப்பத்து மூன்று
(இ) பதினொன்று
(ஈ) நூறு
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) முப்பத்து மூன்று
கலித்தொகை
திணை பாடியவர் பாடல்கள்
குறிஞ்சி கபிலர் 29
முல்லை சோழன் நல்லுருத்திரன் 17
மருதம் மருதன் இளநாகனார் 35
நெய்தல் நல்லந்துவனார் 33
பாலை பெருங்கடுங்கோ 35
31. “ஆதிகவி” என்று போற்றப்பட்டவர்
(அ) கம்பர்
(ஆ) வான்மீகி
(இ) வியாசர்
(ஈ) ஒட்டக்கூத்தர்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) வான்மீகி
32. “தனயை” என்பது யாரைக் குறிக்கும்?
(அ) மருமகள்
(ஆ) மகள்
(இ) கொழுந்தி
(ஈ) மாமியார்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) மகள்
33. “யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்” கம்பரைப் புகழ்ந்து பாடியவர் யார்?
(அ) பாரதிதாசன்
(ஆ) பாரதியார்
(இ) சுரதா
(ஈ) வாணிதாசன்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) பாரதியார்
34. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
மரக்கலம்
(அ) வங்கம்
(ஆ) அம்பி
(இ) திமில்
(ஈ) புணரி
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) புணரி
புணரி – கடல்
35. “அறவுரைக்கோவை” என்றழைக்கப்படும் நூல்
(அ) முதுமொழிக்காஞ்சி
(ஆ) நான்மணிக்கடிகை
(இ) பழமொழிநானூறு
(ஈ) நாலடியார்
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) முதுமொழிக்காஞ்சி
36. ரஷ்ய நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர்
(அ) வால்ட் விட்மன்
(ஆ) லியோ டால்ஸ்டாய்
(இ) கலீல் கிப்ரான்
(ஈ) ஜான் பன்யன்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) லியோ டால்ஸ்டாய்
37. தொன்னூல் விளக்கம் என்னும் இலக்கண நூலை இயற்றியவர்
(அ) வீரமாமுனிவர்
(ஆ) பவணந்தி முனிவர்
(இ) அகத்தியர்
(ஈ)நச்சினார்க்கினினயர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) வீரமாமுனிவர்
தொன்னூல் விளக்கம்.
இந்நூலாசிரியர் வீரமாமுனிவர். எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து பிரிவுகளுடன் 370 பாக்களைக் கொண்டது இந்நூல்.
38. “ஒரு பைசாத் தமிழன்” என்ற இதழை வெளியிட்டவர் யார்?
(அ) அயோத்திதாசப் பண்டிதர்
(ஆ) திரு.வி.க
(இ) அரும்பத உரைகாரர்
(ஈ) ஜானகிராமன்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) அயோத்திதாசப் பண்டிதர்
எழுத்துச் சீர்திருத்தம், சமூக சீர்திருத்தம் ஆகியவற்றிற்காகப் பாடுபட்டவர் அயோத்திதாசப் பண்டிதர். இவரின் இயற்பெயர் காத்தவராயன். தன் குருவின் மீதிருந்த பக்தியால், குருவின் பெயரையே தன் பெயராக (அயோத்திதாசர்) மாற்றிக் கொண்டார். இவருடைய காலம் 1845 முதல் 1914 வரையாகும். அன்றைய காலணா விலையில் “ஒரு பைசாத் தமிழன்” என்ற பத்திரிகையை நடத்தினார். இவர் “இந்திரதேச சரித்திரம்” என்ற நூலை எழுதியுள்ளார்.
39. உலகம் தோன்றியபோதே தோன்றிய தமிழை அதன் தொன்மைக் கருதி “என்றுமுள தென்தமிழ்” எனக் கூறியவர்.
(அ) திருநாவுக்கரசர்
(ஆ) தொல்காப்பியர்
(இ) கம்பர்
(ஈ) திருவள்ளுவர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) கம்பர்
கம்பராமாயணம்-ஆரண்ய காண்டம்.
நின்றவனை வந்த நெடியோன் அடி பணிந்தான்
அன்று அவனும் அன்பொடு தழீஇ அழுத கண்ணால்
நன்று வரவு என்று பல நல்உரை பகர்ந்தான்
என்றுமுள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான்
-கம்பர்.
பொருள்: அங்கே நின்று கொண்டிருந்த அகத்தியனின் கால்களில் விழுந்து நெடியோனாகிய ராமன் வணங்கினான். அப்போது எக்காலத்திலும் நிலைத்து நிற்கும் இனிய தமிழுக்கு இலக்கண நூல் இயற்றிப் புகழ் பெற்றவனாகிய அகத்தியன் ராமனை அன்போடு அணைத்து, ஆனந்தக் கண்ணீர் விட்டு, உன் வரவு நல்வரவாகுக என்று பல உபசார மொழிகளைப் பகர்ந்தான். உலகம் தோன்றிய போதே தோன்றிய தமிழை அதன் தொன்மையைக் கருதி “என்றுமுள தென்தமிழ்” என்று கம்பர் கூறியுள்ளார்.
40. “திரைக்கவித் திலகம்” என் சிறப்புப் பெயர் பெற்றவர்
(அ) கண்ணதாசன்
(ஆ) வாலி
(இ) வைரமுத்து
(ஈ) மருதகாசி
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஈ) மருதகாசி
41. வானம்பாடி இயக்கம் தமிழ்நாட்டில் எங்கு செயல்பட்டது?
(அ) சென்னை
(ஆ) மதுரை
(இ) கோவை
(ஈ) திருச்சி
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) கோவை
42. பாவலரேறு என அழைக்கப்படுபவர்
(அ) தேவநேயபாவாணர்
(ஆ) பெருஞ்சித்திரனார்
(இ) சுப்புரத்தினதாசன்
(ஈ) வெ.இராமலிங்கனார்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) பெருஞ்சித்திரனார்
பாவலரேறு என அழைக்கப்பட்டவர் பெருஞ்சித்திரனார் ஆவார். அவருடைய இயற்பெயர் துரை.மாணிக்கம். இவர் பாரதிதாசனின் தலை மாணாக்கர் ஆவார். உலகத் தமிழர்களிடையே தமிழுணர்வை வளர்ப்பதில் பெரும் பங்காற்றியவர். இவருடைய படைப்புகள் கனிச்சாறு, ஐயை, கொய்யாக் கனி, பாவியக் கொத்து, பள்ளிப் பறவைகள், நூறாசிரியம் முதலியன.
43. “சமுதாயமெனும் மரத்தின் வேரைச் சாதிப்புழுக்கள் அரித்துவிடாமல் தடுத்த நச்சுக் கொல்லி மருந்தாக இருந்தவர்”
(அ) அண்ணல் காந்தியடிகள்
(ஆ) அம்பேத்கர்
(இ) தந்தை பெரியார்
(ஈ) பாரதியார்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) அம்பேத்கர்
44. இந்தியாவிலுள்ள காடுகளின் அளவைக் குறிக்கவும்.
(அ) ஆறில் ஒரு பங்கு
(ஆ) எட்டில் ஒரு பங்கு
(இ) நான்கில் ஒரு பங்கு
(ஈ) மூன்றில் ஒரு பங்கு
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) எட்டில் ஒரு பங்கு
45. களிமண் பலகைகளில் எழுதப்பட்ட நூல்களின் தொகுப்பு எங்கு கண்டெடுக்கப்பட்டது?
(அ) ஆம்பூர்
(ஆ) நிப்பூர்
(இ) மேப்பூர்
(ஈ) அரியலூர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) நிப்பூர்
பாபிலோனியாவில் உள்ள நிப்பூர் என்ற ஊரில் கி.மு.2000 ஆண்டிற்கு முந்தைய சுமார் 2500 களிமண் பலகைகளில் எழுதப்பட்டிருந்த நூல்களின் தொகுப்பு கண்டெடுக்கப்பட்டது.
46. “திராவிட” என்னும் சொல்லை முதன் முதலில் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தவர்
(அ) கால்டுவெல்
(ஆ) ஈ.வெ.ரா
(இ) மறைமலையடிகள்
(ஈ) ஹீராஸ் பாதிரியார்
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) கால்டுவெல்
47. “ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுளர் ஆகி உலகியல் நடத்த வேண்டும்” எனப் பாடியவர்
(அ) பெருந்தேவனார்
(ஆ) பாரதியார்
(இ) பாரதிதாசன்
(ஈ) வள்ளலார்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) வள்ளலார்
“கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெலாம் மண்மூ டிப்போக ஓத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுளர்ஆகிஉல கியல் நடத்தல் வேண்டும்” – வள்ளலார்.
48. கண்ணதாசன் பணியாற்றாத இதழ் பெயர்
(அ) தென்றல்
(ஆ) முல்லை
(இ) குயில்
(ஈ) தமிழ் மலர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) குயில்
பாரதிதாசன் நடத்திய இதழ் “குயில்”
49. இலக்கண நூல்களுள் மிகப் பழமையானது எது?
(அ) யாப்பருங்கலக் காரிகை
(ஆ) தண்டியலங்காரம்
(இ) தொல்காப்பியம்
(ஈ) நன்னூல்
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) தொல்காப்பியம்
50. மாதானுபங்கி என அழைக்கப்படுபவர் யார்?
(அ) கம்பர்
(ஆ) பாரதியார்
(இ) வீரமாமுனிவர்
(ஈ) திருவள்ளுவர்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஈ) திருவள்ளுவர்
51. “அடவிமலை யாறெல்லாம் கடந்து போகித் திண்ணமுறு நடந்தோளும் உளமுங் கொண்டு” – அடிக்கோடிட்ட சொற்களுக்கு பொருத்தமான இலக்கணக் குறிப்பைக் கண்டறிதல்.
(அ) உவமைத்தொகை, உரிச்சொற்றொடர்
(ஆ) உம்மைத்தொகை, உருவகம்
(இ) அடுக்குத்தொடர், வினைத்தொகை
(ஈ) உம்மைத்தொகை, உரிச்சொற்றொடர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) உம்மைத்தொகை, உரிச்சொற்றொடர்
“உம்” என்ற விகுதி மறைந்து வருவது உம்மைத் தொகையாகும். அடவியும், மலையும், ஆறும் என்ற சொற்களிலுள்ள “உம்” விகுதி மறைந்து வந்துள்ளது. எனவே அச்சொற்றொடர் உம்மைத் தொகையாகும். தடந்தோள்-உரிச்சொல்.
52. இளமைப் பெயர்களைப் பொருத்துக:
அ. மான் – 1. குருளை
ஆ. கீரி – 2. குஞ்சு
இ. கோழி – 3. கன்று
ஈ. சிங்கம் – 4. பிள்ளை
அ ஆ இ ஈ
அ. 1 4 2 3
ஆ. 3 4 1 2
இ. 3 4 2 1
ஈ. 4 3 2 1
விடை மற்றும் விளக்கம்
விடை: இ. 3 4 2 1
53. பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?
(அ) கண்ணன் காலையில் நாஷ்டா சாப்பிட்டான்
(ஆ) அலுவலகத்தில் அனுமதி பெற்று உள்ளே வர வேண்டும்
(இ) கோயிலில் தெய்வத்திற்கு வழிபாடு நடந்தது
(ஈ) பெரியவர்களிடம் மணமக்கள் ஆசிர்வாதம் பெற்றனர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) கோயிலில் தெய்வத்திற்கு வழிபாடு நடந்தது
பிறமொழிச்சொல் தமிழ்ச்சொல்
நாஷ்டா காலைச்சிற்றுண்டி
அனுமதி இசைவு
ஆசீர்வாதம் வாழ்த்து
54. சரியான இலக்கணக்குறிப்பைப் பொருத்துக
அ. மடக்கொடி – 1. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஆ. தேரா மன்னா – 2. பண்புத்தொகை
இ. செங்கோலன் – 3. வினைத்தொகை
ஈ. செய்கொல்லன் – 4. அன்மொழித்தொகை
அ ஆ இ ஈ
அ. 4 2 1 3
ஆ. 2 3 1 4
இ. 3 1 2 4
ஈ. 4 1 2 3
விடை மற்றும் விளக்கம்
விடை: ஈ. 4 1 2 3
55. பொருத்துக:
பட்டியல் – I பட்டியல் II
அ. தெலுங்கு – 1. வடமொழி
ஆ. தமிழ் – 2. வடதிராவிட மொழி
இ. மால்தோ – 3. தென்திராவிட மொழி
ஈ. சமஸ்கிருதம் – 4. நடுதிராவிட மொழி
அ ஆ இ ஈ
அ. 2 4 1 3
ஆ. 3 2 4 1
இ. 1 2 4 3
ஈ. 4 3 2 1
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
ஈ. 4 3 2 1
தென்திராவிட மொழிகள்: தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு, தோடா, கோத்தா, கொரகா, இருளா. நடுத்திராவிட மொழிகள்: தெலுங்கு, கோண்டி, கோயா, கூயி, கூவி, கோலாமி, பர்ஜி, கதபா, கோண்டா, நாயக்கு, பெங்கோ, முண்டா. வடதிராவிட மொழிகள்: குரூக், மால்தோ, பிராகுய். வடமொழி: சமஸ்கிருதம்
56. கீழ்க்கொடுக்கப்பட்டவற்றுள் இயல்புப் புணர்ச்சி சொல்லைத் தேர்க:
(அ) வாழைப்பழம்
(ஆ) பொற்குடம்
(இ) பாசிலை
(ஈ) பொன்வளையல்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) பொன்வளையல்
பொன்+வளையல்-பொன்வளையல். இயல்பாகப் புணர்ந்தது. வாழை+பழம்-வாழைப்பழம். “ப்” தோன்றியதால் இது “தோன்றல்” வகைப் புணர்ச்சியாகும். பொன்+குடம்-பொற்குடம். “ன்”, “ற்” ஆகத் திரிந்ததால் இது “திரிதல்” வகைப் புணர்ச்சியாகும். பசுமை+இலை-பாசிலை. இது பண்புப்பெயர் புணர்ச்சியாகும். ஈறுபோதல் விதிப்படி “மை” விகுதி கெட்டு பசு+இலை என்றானது. பின்னர், ஆதி நீடல் விதிப்படி பாசு+ இலை என்றானது. “உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி பாச்+இலை என்றானது. பின்னர் “உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி, “பாசிலை” என்றானது.
57. “ஆடுவாயா” என்ற வினாவிற்குப் “பாடுவேன்” என்று விடையளித்தல்
(அ) நேர்விடை
(ஆ) இனமொழி விடை
(இ) உற்றது உரைத்தல் விடை
(ஈ) உறுவது கூறல் விடை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) இனமொழி விடை
ஒரு வினாவிற்கு “இல்லை” என்ற பதிலைக் கூறாமல், அதற்கு இனமான வேறொரு பதிலைக் கூறுவது இனமொழி விடையாகும்.
58. “கார் அறுத்தான்” – எவ்வகை ஆகுபெயரைச் சார்ந்தது?
(அ) சினையாகுபெயர்
(ஆ) தொழிலாகுபெயர்
(இ) பண்பாகுபெயர்
(ஈ) காலவாகுபெயர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) காலவாகுபெயர்
கார்காலம் என்பதைக் குறிக்காமல் கார்கால பயிரைக் குறித்ததால் இது காலவாகு பெயராகும்.
59. பொருளறிந்து பொருத்துக:
அ. அரசன் வந்தது – 1. பால் வழு
ஆ. கபிலன் பேசினாள் – 2. எண் வழு
இ. குயில்கள் கூவியது – 3. இட வழு
ஈ. கமலா சிரித்தாய் – 4. திணை வழு
அ ஆ இ ஈ
அ. 4 1 3 2
ஆ. 4 1 2 3
இ. 1 4 3 2
ஈ. 3 2 1 4
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
ஆ. 4 1 2 3
அரசன் வந்தான்-உயர்திணை. “வந்தது” எனக் குறித்ததால் இது திணை வழுவாகும். கபிலன் பேசினான்- ஆண்கால். ‘பேசினாள்’ எனப் பெண்பாலைக் குறித்தால் இது பால் வழுவாகும்.
குயில்கள் கூவின-பன்மை. “கூவியது” என ஒருமையில் குறித்ததால் இது எண் வழுவாயிற்று. கமலா சிரித்தாள்-படர்க்கை. “சிரித்தாய்” என முன்னிலையில் குறித்ததால் இஃது இடவழுவாயிற்று.
60. கீழ்வரும் சொற்றொடர்களில் உரிச்சொற்றொடரை எழுதுக
(அ) விரிகடல்
(ஆ) கடிமுரசு
(இ) முகத்தாமரை
(ஈ) கரகமலம்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) கடிமுரசு
சால, உறு தவ, நனி, கூர், கழி, கடி, மா, தட முதலியவை உரிச்சொற்களாகும். கடிமுரசு-உரிச்சொல். விரிகடல்-வினைத்தொகை. முகத்தாமரை, கரகமலம்-உருவகங்கள்.
61. ஐந்தடி முதல் பன்னிரெண்டடி வரை வரும் பா
(அ) குறள் வெண்பா
(ஆ) சிந்தியல் வெண்பா
(இ) இன்னிசை வெண்பா
(ஈ) பஃறொடை வெண்பா
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) பஃறொடை வெண்பா
குறள் வெண்பா-இரண்டு அடிகள். சிந்தியல் வெண்பா-மூன்று அடிகள். இன்னிசை வெண்பா-நான்கு அடிகள். பஃறொடை வெண்பா-5 முதல் 12 அடிகள் வரை.
62. ஒருதலைக் காமம் என்பது
(அ) அன்பின் ஐந்திணை
(ஆ) பாடாண் திணை
(இ) கைக்கிளை
(ஈ) பெருந்திணை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) கைக்கிளை
அன்பின் ஐந்திணை: குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை. பாடாண்திணை: ஒருவனுடைய புகழ், கல்வி, ஈகை முதலியவற்றைப் புகழ்ந்து பாடுதல். கைக்கிளை: ஒருதலைக் காமம். பெருந்திணை-பொருந்தாக் காமம்.
63. கீழ்வருவனவற்றுள் காலவாகு பெயரைக் கண்டறிக:
(அ) திசம்பர் பூ பூத்தது
(ஆ) இந்தியா வென்றது
(இ) வெள்ளை அடித்தான்
(ஈ) பொங்கல் உண்டான்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) திசம்பர் பூ பூத்தது
காலவாகு பெயர்: அவள் திசம்பர் சூடினாள். (திசம்பர் என்பது ஒருவகை மலரைக் குறிக்கிறது) இந்தியா வென்றது-இடவாகுபெயர் வெள்ளை அடித்தான்-பண்பாகு பெயர்; பொங்கல் உண்டான்-தொழிலாகு பெயர்.
64. உமறுப்புலவர் யாருடைய வேண்டுகோளின்படி சீறாப்புராணத்தை எழுதத் தொடங்கினார்?
(அ) அப்துல் காதிர் மரைக்காயர்
(ஆ) அபுல் காசிம்
(இ) காதிர் முகைதீன்
(ஈ) கடிகை முத்துப்புலவர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) அப்துல் காதிர் மரைக்காயர்
இராமநாதபுரத்தின் மன்னர் சேதுபதியின் அமைச்சராக இருந்தவர் அப்துல்காதிர் என்ற சீதக்காதி மரைக்காயர். அவரின் வேண்டுகோளின்படி உமறுப்புலவர் சீறாப்புரணத்தை எழுதத் தொடங்கினார். ஆனால் நூல் முடிவடையும் முன்பாகவே சீதக்காதி மறைந்து விட்டார். அவருக்குப் பின் அபுல்காசிம் என்ற வள்ளலின் உதவியால் சீறாப்புராணம் நிறைவுற்றது. கடிகை முத்துப் புலவர், உமறுப்புலவரின் தமிழாசிரியர் ஆவார்.
65. “ஒன்றுகொலாம்” என்னும் திருப்பதிகம் பாடி இறந்த பிள்ளையை எழுப்பியவர்.
(அ) ஞானசம்பந்தர்
(ஆ) திருநாவுக்கரசர்
(இ) சுந்தரர்
(ஈ) மாணிக்கவாசகர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) திருநாவுக்கரசர்
திங்களுர் அப்பூதியடிகளின் மகன் மூத்த திருநாவுக்கரசு அரவம் தீண்டி இறந்து விட்டான். “ஒன்றுகொலாம்” என்ற திருப்பதிகத்தைப் பாடி திருநாவுக்கரசர் இறந்த பிள்ளையை உயிர் பிழைக்க வைத்தார்.
66. உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் எனத் திரு.வி.க. கூறுவது.
(அ) கம்பராமாயணம்
(ஆ) சிலப்பதிகாரம்
(இ) பெரியபுராணம்
(ஈ) மகாபாரதம்
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) பெரியபுராணம்
67. மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை – இவ்வடி இடம்பெற்ற நூல்
(அ) பரிபாடல்
(ஆ) நற்றிணை
(இ) மதுரைக்காஞ்சி
(ஈ) நெடுநல்வாடை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) பரிபாடல்
மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவோடு புரையுஞ் சீரூர் பூவில் இதழகத் தனைய தெருவம் இதழகத்து அரும்பொருட் டனைத்தே அண்ணல் கோயில் – பரிபாடல். பொருள்: மதுரை மாநகரின் நடுவே அமைந்துள்ள அண்ணல் கோயிலும் அதனைச் சுற்றி முறையாக அமைந்திருந்த தெருக்களும் தாமரை மலரும் அதனைச் சுற்றியுள்ள அடுக்கடுக்கான இதழ்களையும் போலக் காட்சியளித்தன.
68. “காயும் வில்லினன், கல்திரள் தோளினான்” – எனப் போற்றப்படுபவன்
(அ) இராமன்
(ஆ) அர்ஜீனன்
(இ) குகன்
(ஈ) கர்ணன்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) குகன்
கம்பராமாயணம்-குகப்படலம் ஆய காலையின் ஆயிரம் அம்பிக்கு நாய கன்போர்க் குகன் எனும் நாமத்தான் தூய கங்கைத் துறைவிடும் தொன்மையான் காயும் வில்லினன் கல்திரள் தோளினான் – கம்பர். பொருள்: போர்க்குணம் மிக்க குகனானவன் ஆயிரம் படகுகளுக்குத் தலைவன்; கங்கையாற்றுத் தோணித்துறைக்குத் தொன்றுதொட்டு உரிமையுடையவன்; பகைவர்களை அழிக்கும் வில்லாற்றல் பெற்றவன்; மலை போன்ற திரண்ட தோள்களை உடையவன்.
69. “மணநூல்” எனப் புகழப் பெற்றது
(அ) சிலப்பதிகாரம்
(ஆ) சீவகசிந்தாமணி
(இ) கம்பராமாயணம்
(ஈ) குண்டலகேசி
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) சீவகசிந்தாமணி
70. மதுரை மீனாட்சியம்மையிடம் முத்துமணி மாலையைப் பரிசாக வாங்கியவர் யார்?
(அ) பரஞ்சோதி முனிவர்
(ஆ) குமரகுரபரர்
(இ) நக்கீரர்
(ஈ) சீத்தலைச் சாத்தனார்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) குமரகுரபரர்
71. பத்துப்பாட்டில் பாண்டிய நெடுஞ்செழியனை தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட நூல்கள் எவையெவை?
(அ) திருமுரகாற்றுப்படை மற்றும் மதுரைக்காஞ்சி
(ஆ) மலைபடுகடாம் மற்றும் பட்டினப்பாலை
(இ) நெடுநெல்வாடை மற்றும் மதுரைக்காஞ்சி
(ஈ) முல்லைப்பாட்டு மற்றும் குறிஞ்சிப்பாட்டு
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) நெடுநெல்வாடை மற்றும் மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை: இந்நூலை இயற்றியவர் நக்கீரர். 188 அடிகளை உடையது. இந்நூலின் பாட்டுடைத் தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன். மதுரைக்காஞ்சி: இந்நூலை இயற்றியவர் மாங்குடி மருதனார். 782 அடிகளை உடையது. இந்நூலின் பாட்டுடைத் தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.
72. பொருந்தாத தொடரைக் குறிப்பிடுக:
(அ) உலா ஐந்துவகைப் பருவம்
(ஆ) கலம்பகம் பதினெட்டு உறுப்புகள்
(இ) பிள்ளைத்தமிழ் பத்துப் பருவங்கள்
(ஈ) பரணி ஐநூற்றி ஒன்பது தாழிசைகளைக் கொண்டது
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) உலா ஐந்துவகைப் பருவம்
உலா-ஏழுவகைப் பருவங்கள். பாட்டுடைத் தலைவன் வீதியில் உலா வர, ஏழு வகைப் பருவ மகளிரும் கண்டு காதல் கொள்வதைக் கூறுவது “உலா” என்னும் சிற்றிலக்கியம் ஆகும். ஏழு வகைப் பருவங்கள்: பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண்.
73. எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை தமிழாசிரியராக எவ்வூரில் பணியாற்றினார்?
(அ) தூத்துக்குடி
(ஆ) சாயர்புரம்
(இ) திருநெல்வேலி
(ஈ) நாகலாபுரம்
விடை மற்றும் விளக்கம்
(ஆ) சாயர்புரம்
74. மடப்பிடி யார்?
(அ) சீதை
(ஆ) பாஞ்சாலி
(இ) மாதவி
(ஈ) கண்ணகி
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) பாஞ்சாலி
பாஞ்சாலி சபதம் – விதுரனைத் தூதுவிடல் இந்திர மாநகர் சார்ந்தவர் தம்பால் “கொம்பினை யொத்த மடப்பிடி யோடும் கூடியிங் கெய்தி விருந்து களிக்க நம்பி அழைத்தனன் கௌரவர் கோமான் நல்லதோர் நுந்தை” யெனவுரை செய்வாய் – பாரதியார். பொருள்: பாஞ்சாலியோடு பாண்டவரைத் தாம் விருந்துக்கு அழைத்த செய்தியை அவர்களிடம் கூறி, அழைத்து வருமாறு திருதாராட்டினன் தன் தம்பி விதுரனை பணித்தான்.
75. பொருள் தருக: சதுரங்கச்சேனை
(அ) யானைப்படை
(ஆ) குதிரைப்படை
(இ) தேர்ப்படை
(ஈ) நால்வகைப்படை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) நால்வகைப்படை
சதுர்-நான்கு. சேனை-படை. சதுரங்கச் சேனை-நால்வகைப்படை. நால்வகைப்படை-தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை.
76. “பெருமாள் திருமொழி”, “முகுந்தமாலை” – இந்நூல்கள் எழுதப்பட்ட மொழி.
(அ) தமிழ், வடமொழி
(ஆ) வடமொழி, ஆங்கிலம்
(இ) இலத்தீன், கிரீக்
(ஈ) தமிழ், இலத்தீன்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) தமிழ், வடமொழி
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர் குலசேகர ஆழ்வார். இவர் தமிழ், வடமொழி ஆகிய இரண்டிலும் புலமை பெற்றிருந்தார். இவருடைய தமிழ்ப் பாசுரங்கள் “பெருமாள் திருமொழி” என வழங்கப்படுகின்றன. இப்பாசுரங்கன் நாலாயிரத்திவ்யப் பிரபந்தங்களுள் ஒன்றாக அமைந்துள்ளன. இவர் வடமொழியில் “முகுந்தமாலை” என்ற நூலினை இயற்றியுள்ளார்.
77. அப்பூதியடிகள் பிறந்த ஊர்
(அ) திருவழுந்தூர்
(ஆ) திருவாதவூர்
(இ) திங்களுர்
(ஈ) திருநாவலூர்
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) திங்களுர்
78. உரிய விடையைத் தேர்ந்தெழுதுக. ‘அடிகள் நீரே அருளுக’ என்றவர் யார்?
(அ) சீத்தலைச் சாத்தனார்
(ஆ) இளங்கோவடிகள்
(இ) திருத்தக்கத் தேவர்
(ஈ) நாதக்குத்தனார்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) சீத்தலைச் சாத்தனார்
கண்ணகியின் வரலாற்றை சீத்தலைச் சாத்தனார் கூறக் கேட்ட இளங்கோவடிகள். “சிலப்பதிகாரம்” என்னும் பெயரால் நாட்டுதும் யாம் ஒர் பாட்டுடைச் செய்யுள்” என்று கூறினார். அதற்கு சீத்தலைச் சாத்தனார். “முடிகெழுவேந்தர் மூவர்க்கும் உரியது அடிகள் நீரே அருளுக” என்றார்.
79. “சூலை” என்பது
(அ) கண் நோய்
(ஆ) வயிற்று நோய்
(இ) இதய நோய்
(ஈ) கழுத்து நோய்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) வயிற்று நோய்
“சூலை” என்பது வயிற்று நோய். திருநாவுக்கரசர் சில காலம் “தருமசேனர்” என்ற பெயரில் சமண மதத்தைத் தழுவியிருந்தார். அவரை ஆட்கொள்ள நினைத்த இறைவன் (சிவபெருமான்) நாவுக்கரசருக்கு “சூலை” எனப்பட்ட வயிற்று நோயைக் கொடுத்தார். சூலை நோய் நீங்க தமக்கையாரின் அறிவுரைப்படி அதிகை வீரட்டானக் கோயிலுக்குச் சென்று
“கூற்றாயினவாறு விலக்கிலீர்” என்ற பதிகத்தைப் பாடி சிவபெருமானை வணங்கினார். பாமலையை செவிமடுத்த இறைவன் இவரின் சூலை நோயை நீக்கி “நாவுக்கரசு” என்ற பெயரை வழங்கினார். நாவுக்கரசரின் இயற்பெயர் மருள்நீக்கியார்.
80. துள்ளல் ஓசையைக் கொண்ட நூல் எது?
(அ) பரிபாடல்
(ஆ) கலித்தொகை
(இ) நற்றிணை
(ஈ) குறுந்தொகை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) கலித்தொகை
கலிப்பா துள்ளல் ஓசையுடையது. கலித்தொகை கலிப்பாவினால் ஆன நூலாகும்.
81. ஜி.யூ.போப் அவர்களுக்கு தமிழ் மீது பற்று உண்டாவதற்குக் காரணமாக இருந்த நூல் எது?
(அ) அகநானூறு
(ஆ) புறநானூறு
(இ) ஐங்குநுறூறு
(ஈ) பரிபாடல்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) புறநானூறு
82. ‘சான்றோர் பாலர் ஆப சாலார் சாலார் பாலர் ஆகுபவே” இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
(அ) நற்றிணை
(ஆ) குறுந்தொகை
(இ) புறநானூறு
(ஈ) அகநானூறு
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) புறநானூறு
புறநானூறு
பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய மாமலை பயந்த காமரு மணியும் இடைப்படச் சேய ஆயினும் தொடை புணர்ந்து அருவிலை நன்கலம் அமைக்கும் காலை ஒருவழித் தோன்றி யாங்கு என்றும் சான்றோர் சான்றோர் பாலர் ஆப சாலார் சாலார் பாலர் ஆகுபவே – கண்ணகனார். பொருள்: பொன்னும் பவளமும் முத்தும் நிலைத்த பெருமலையில் பிறக்கும் மாணிக்கமும் தோன்றும் இடங்களால் ஒன்றுக்கொன்று தொலைவில் இருப்பினும், மாலையாகக் கோர்த்து மதிப்பு மிக்க அணிகலனாக அமைக்கும் போது தம்முள் ஒருங்கு சேரும். அதுபோல, சான்றோர் என்றும் சான்றோர் பக்கமே இருப்பர். சான்றாண்மை இல்லாதவர் தீயவர் பக்கமே சேருவர்
83. பொருத்துக:
(அ) அரி – 1. பனையோலைப் பெட்டி
(ஆ) செறு – 2. புதுவருவாய்
(இ) யாணர் – 3. வயல்
(ஈ) வட்டி – 4. நெற்கதிர்
அ ஆ இ ஈ
அ. 4 3 2 1
ஆ. 1 2 4 3
இ. 3 4 1 2
ஈ. 4 2 3 1
விடை மற்றும் விளக்கம்
விடை: அ. 4 3 2 1
84. கம்பராமாயணம் ———– நூல்.
(அ) முதல்நூல்
(ஆ) நாடக நூல்
(இ) வழிநூல்
(ஈ) மொழிபெயர்ப்பு நூல்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) வழிநூல்
கம்பராமாயணம் வழி நூலாகும். வால்மீகி முனிவர் எழுதிய இராமாயணம் முதல் நூலாகும். அந்நூலைத் தழுவி கம்பரால் எழுதப்பட்ட ராமாயணம் வழி நூலாகும்.
85. “குலனுடைமையின் கற்புச் சிறந்தன்று” இடம் பெற்றுள்ள நூல் எது?
(அ) நாலடியார்
(ஆ) ஏலாதி
(இ) திரிகடுகம்
(ஈ) முதுமொழிக்காஞ்சி
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) முதுமொழிக்காஞ்சி
முதுமொழிக்காஞ்சி – சிறந்த பத்து
ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் ஓதலில் சிறந்தன்(று) ஒழுக்கம் உடைமை காதலில் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல் மேதையில் சிறந்தன்று கற்றது மறவாமை வண்மையில் சிறந்தன்று வாய்மை யுடைமை இளமையில் சிறந்தன்று மெய்பிணி யின்மை நலனுடை மையின் நானுச் சிறந்தன்று குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று செற்றாரைச் செறுத்தலில் தற்செய்கை சிறந்தன்று முன்பெரு கலின்பின் சிறுகாமை சிறந்தன்று – மதுரைக் கூடலூர்க்கிழார்.
86. “கல்லார் அறிவிலாதார்” என்று கூறும் நூல்
(அ) நாலடியார்
(ஆ) திருக்குறள்
(இ) இன்னா நாற்பது
(ஈ) ஏலாதி
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) திருக்குறள்
87. ———— என்ப உளவோ கருவியாற் காலம் அறிந்து செயின்.
(அ) அருவினை
(ஆ) நல்வினை
(இ) தீவினை
(ஈ) தன்வினை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) அருவினை
அருவினை என்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின் – திருக்குறள் 483; அதிகாரம் – காலமறிதல்
88. ஏலாதி —- வெண்பாக்களைக் கொண்டுள்ளது
(அ) எழுபத்தொரு
(ஆ) எண்பத்தொரு
(இ) ஐம்பத்தொரு
(ஈ) முப்பத்தொரு
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) எண்பத்தொரு
ஏலாதியில் தற்சிறப்புப் பாயிரம் மற்றும் கடவுள் வாழ்த்து ஆகியவற்றைத் தவிர்த்து 80 பாடல்கள் உள்ளன.
89. “கண்வனப்புக் கண்ணோட்டம், கால்வனப்புச் செல்லாமை” இடம் பெற்றுள்ள நூல்
(அ) திரிகடுகம்
(ஆ) நாலடியார்
(இ) நான்மணிக்கடிகை
(ஈ) சிறுபஞ்சமூலம்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) சிறுபஞ்சமூலம்
சிறுபஞ்சமூலம்: கண்வனப்புக் கண்ணோட்டம், கால்வனப்புச் செல்லாமை எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல் – பண்வனப்புக் கேட்டார் நன்றென்றல், கிளர்வேந்தன் தன்னாடு வாட்டான்நன் றென்றல் வனப்பு – காரியாசான். பொருள்: கண்ணுக்கு அழகு இரக்கம் கொள்ளல்; காலுக்கு அழகு பிறரிடம் இரந்து செல்லாமை; ஆராய்ச்சிக்கு அழகு தமது முடிவை துணிந்துரைத்தல், இசைக்கு அழகு அதனைக் கேட்போர் நன்றெனப் புகழ்தல்; அரசனுக்கு அழகு குடிமக்களை வருத்தாமல் காப்பவன் என்று பிறர் அவனைப் புகழ்ந்துரைத்தல்
90. குருதிக் கொடை தருபவர்களுக்கு, அக்குருதி மீண்டும் ———- நாட்களுக்குள் உடலில் சுரந்து விடும்
(அ) 30 நாட்கள்
(ஆ) 25 நாட்கள்
(இ) 3 மாதங்கள்
(ஈ) 21 நாட்கள்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஈ) 21 நாட்கள்
91. சாகித்திய அகாதமி பரிசு பெற்ற கண்ணதாசன் புதினம்
(அ) ஆட்டனத்தி ஆதிமந்தி
(ஆ) மாங்கனி
(இ) சேரமான் காதலி
(ஈ) அங்கயற்கண்ணி
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) சேரமான் காதலி
92. “கீழ்க்காண்பவற்றுள் கம்பர் எழுதாத நூல் எது?
(அ) சடகோபரந்தாதி
(ஆ) சரஸ்வதி அந்தாதி
(இ) திருக்கை வழக்கம்
(ஈ) தொன்னூல்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) தொன்னூல்
தொன்னூல் விளக்கம் வீரமாமுனிவர் இயற்றிய நூலாகும்.
93. பாரதியார் வசன கவிதை எழுத உந்துதலாய் இருந்த அமெரிக்கக் கவிஞர்
(அ) வால்ட் விட்மன்
(ஆ) வேர்ட்ஸ்வொர்த்
(இ) கீட்ஸ்
(ஈ) ஷேக்ஸ்பியர்
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) வால்ட் விட்மன்
94. தமிழர்களின் தற்காப்பு விளையாட்டுகளில் ஒன்று
(அ) சிலம்பாட்டம்
(ஆ) ஒயிலாட்டம்
(இ) ஏறுதழுவுதல்
(ஈ) கபடி ஆட்டம்
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) சிலம்பாட்டம்
95. “முக்கூடற்பள்ளு” எந்த மாவட்டத்தின் பேச்சு வழக்கைக் கொண்டுள்ளது?
(அ) தஞ்சாவூர்
(ஆ) மதுரை
(இ) ஈரோடு
(ஈ) திருநெல்வேலி
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) திருநெல்வேலி
“முக்கூடல்” என்னும் ஊர் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வடகிழக்கில் தண்பொருநை, சிற்றாறு, கோதண்டராம ஆறு ஆகிய மூன்று ஆறுகள் கூடுமிடத்தில் உள்ளது. அங்கு உழவுத் தொழிலை மேற்கொண்டு வாழ்ந்த பள்ளர்களின் வாழ்க்கையைப் பற்றி இந்நூல் கூறுவதால் “முக்கூடற்பள்ளு” என வழங்கப்பெற்றது. இந்நூலின் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.
96. “மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு” என்னும் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
(அ) பழமொழி
(ஆ) திருக்குறள்
(இ) தேவாரம்
(ஈ) திருவாசகம்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) திருக்குறள்
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின் – திருக்குறள் 942. பொருள்: ஒருவன் முன்பு உண்ட உணவு செரித்த தன்மையைத் தெளிவாக அறிந்து அதன் பின்னர் தக்க அளவு உண்பானானால், அவன் உடம்பிற்கு மருந்து என்னும் ஒன்று தேவையில்லை.
97. “திருவள்ளுவர் தோன்றியிராவிட்டால், தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது” என்று கூறியவர்.
(அ) கி.ஆ.பெ.விசுவநாதம்
(ஆ) இ.ரா.கிருஷ்ணமூர்த்தி
(இ) ந.மு.வேங்கடசாமி நாட்டார்
(ஈ) பரிமேலழகர்
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) கி.ஆ.பெ.விசுவநாதம்
98. “வீரமாமுனிவரைப் போல் எழுத்துச் சீர்திருத்தம் செய்தவர்”
(அ) பண்டிதமணி கதிரேசன் செட்டியார்
(ஆ) பாண்டித்துரை தேவர்
(இ) அயோத்திதாசப் பண்டிதர்
(ஈ) பேரறிஞர் அண்ணா
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) அயோத்திதாசப் பண்டிதர்
99. எள் செடியின் விதையில் இருந்து நெய் கண்டுபிடித்த திருநாளே இத்திருநாள்
(அ) கார்த்திகை தீபத் திருநாள்
(ஆ) தமிழர் திருநாள்
(இ) விசாகத் திருநாள்
(ஈ) தீபாவளி
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) தீபாவளி
என் செடியின் விதையிலிருந்து எண்ணெய் எடுக்கப்பட்ட நாளே “தீபாவளித் திருநாள்” என்று கூறியவர் அயோத்திதாசப் பண்டிதர். மேலும் ஜப்பான் நாட்டில் நுகர்பொருள் கண்டுபிடிப்புத் திருநாளாகத்தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது என்று ஆதாரத்துடன் கூறினார்.
100. “சித்திரகாரப் புலி” என அழைக்கப்படுபவர்
(அ) நரசிம்மவர்ம பல்லவன்
(ஆ) முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்
(இ) இரண்டாம் குலோத்துங்கன்
(ஈ) இராசராச சோழன்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்
கி.பி.7-ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னனாக இருந்த முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் ஓவியக்கலை உன்னத நிலையை எட்டியது. இம்மன்னனே சிறந்த ஓவியனாகப் புகழ் பெற்றிருந்தான். “சித்திரகாரப்புலி” எனப் புகழப்பட்டான். “தட்சிண சித்திரம்” என்ற ஓவிய இலக்கண நூலுக்கு இம்மன்னன் உரை எழுதியுள்ளான்.