12th Tamil Unit 8

 1) மயிலை சீனி.வேங்கடசாமி கீழ்க்காணும் எந்த எந்த மொழியை ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளார்?

A) தமிழ் -ஆங்கிலம்

B) தமிழ்- சமஸ்கிருதம்

C) தமிழ்- மலையாளம்

D) தமிழ் – துளு

விளக்கம்: துளு மொழியையும் தமிழ்மொழியையும் ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளார் மயிலை சீனி.வேங்கடசாமி. இவர் சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் முதலிய இலக்கியத் தரவுகளைக் கொண்டு ‘தமிழ்நாட்டு வரலாறு’ என்னும் நூலை எழுதியுள்ளார்.

2) ..கரவாது

நட்டோர் உவப்ப நடைப் பரிகாரம் – என்ற வரியில் உவப்ப என்ற சொல்லின் பொருள் என்ன?

A) மகிழ

B) நட்பு கொள்ள

C) எதிர்க்க

D) கொடுக்க

விளக்கம்: உவப்ப – மகிழ.

நள்ளி என்னும் வள்ளல், தன்னிடம் உள்ள பொருட் செல்வத்தை இல்லையென்னாது நட்புக் கொண்டவர் உள்ளம் மகிழ்ச்சி அடையுமாறு இனிய வாழ்விற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் குறிப்பறிந்து வழங்கும் பெரிய கைகளை உடையவர்.

3) கூற்று: மயிலை சீனி. வேங்கடசாமி வரலாற்றாய்வாளர் ஆவார்.

காரணம்: தந்தையின் சித்தமருத்துவப் பின்புலம், தமையனாரின் தமிழ்ப் பின்புலம்

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: மயிலை சீனி. வேங்கடசாமியின் தந்தை சீனிவாசன் ஒரு சித்த மருத்துவர் ஆவார். அவரின் தமையனார் கோவிந்தராசன் தமிழாசிரியர் ஆவார். இதுவே மயிலை சீனி. வேங்கடசாமியை வரலாற்றாய்வாளராக உருவாக்கிறது.

4) சுகந்தி சுப்பிரமணியன் என்பவரின் கவிதைகள் மற்றும் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு கீழ்க்காணும் எந்த பெயரில் வெளிவந்தன?

A) மீண்டெழுதலின் ரகசியம்

B) புதையுண்ட வாழ்க்கை

C) சுகந்தி சுப்பிரமணியம் படைப்புகள்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: சுகந்தி சுப்பிரமணியன் கவிதைகளும் சில சிறுகதைகளும் ‘சுகந்தி சுப்பிரமணியன் படைப்புகள்’ என்ற பெயரில் வெளிவந்துள்ளன.

5) சுகந்தி சுப்பிரமணியன் எங்கு பிறந்தார்?

A) கோவை

B) சென்னை

C) திருநெல்வேலி

D) தூத்துக்குடி

விளக்கம்: தமிழின் நவீன பெண் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் சுகந்தி சுப்பிரமணியன். இவர் கோயம்புத்தூர் மாவட்ட புறநகரின் ஆலாந்துறை என்னும் சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் பள்ளிப்படிப்பை முழுமை செய்யாத நிலையில் திருமணமாகி, கணவர் தந்த நம்பிக்கையில் எழுதத் தொடங்கினார்.

6) திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த ‘நற்போதகம்’ எனும் ஆன்மீக மாத இதழில் கீழ்க்காணும் எந்த நூல் 13 ஆண்டுகள் தொடராக வெளிவந்தது?

A) இரட்சணிய யாத்திரிகம்

B) ஏசு காவியம்

C) இரட்சணிய மனோகரம்

D) மலைக்கள்ளன்

விளக்கம்: திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த ‘நற்போதகம்’ எனும் ஆன்மீக மாத இதழில் இராட்சணிய யாத்திரிகம் 13 ஆண்டுகள் தொடராக வெளிவந்தது.

7) பாசம்என உன்னலிர் பிணித்தமை பகைத்த – என்ற வரியில் பிணித்தமை என்ற சொல்லின் பொருள் என்ன?

A) நோய் வந்தது

B) கட்டியமை

C) எண்ணாமை

D) கூறாமை

விளக்கம்: பிணித்தமை – கட்டியமை

மேற்காணும் வரிகள் இடம்பெற்ற நூல் இரட்சணிய யாத்திரிகம் ஆகும். இறைமகன் தன்னைப் பிறர் கயிற்றால் கட்டும்போது அதற்கு உடன்பட்டு நின்றார். அச்செயலானது, இயல்பாக மனிதர்களிடம் காணப்படுகிற சாதாரண அன்புச்செயல் என்று கருத வேண்டியதில்லை என்பது மேற்காணும் வரியின் பொருள்.

8) நோதகச் சினந்தோர் மாற்ற நுவன்றிலர் கரும நோக்கி – என்ற வரியில் நுவன்றிலர் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) இகழ்ந்தார்

B) கூறவில்லை

C) கொடியவர்கள்

D) முரட்டுத் தன்மையுள்ளவர்.

விளக்கம்: நுவன்றிலர் – கூறவில்லை.

இயேசுபிரான் தம்மைத் துன்புறுத்துகிறவர்கள் மீது சினந்து வருந்தத்தக்க ஒரு மறுசொல்லும் கூறாமல் நின்றார் என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிக பாடலின் பொருள் ஆகும்

9) நீசமனு மக்களை நினைந்து உருகும் அன்பின் – என்ற வரியில் நீச என்ற சொல்லின் பெர்ருள் என்ன?

A) அன்பு

B) வெறுப்பு

C) கோபம்

D) இழிந்த

விளக்கம்: நீச – இழிந்தத. தம்மீது பகை கொண்டு தனக்கு இழிவான செயல்களைச் செய்த இம்மனிதர்கள் தாங்கள் வாழும் காலம் முழுவதும் துன்பத்தில் இருப்பார்களோ என்று எண்ணி அவர்களுக்காக இரக்கப்படுகிற தன்மை என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிக பாடலின் பொருள் ஆகும்.

10) மயிலை சீனி. வேங்கடசாமியின் தமையனார் பெயர் என்ன?

A) விபுலானந்த அடிகள்

B) கா.சுப்பிரமணியர்

C) சற்குணர்

D) மேற்காணும் யாருமில்லை

விளக்கம்: மயிலை சீனி. வேங்கடசாமியின் தமையனார் கோவிந்தராசன் ஆவார். இவர் ஒரு தமிழாசிரியராக விங்கியமையால், மயிலை சீனி. வேங்கடசாமி இளமையிலேயே தமிழின்மீது தணியாத பற்றும், நுணுகி ஆராயும் திறனும் பெற்றார்.

11) மீண்டெழுதலின் ரகசியம் என்ற கவிதை தொகுப்பை எழுதியவர் யார்?

A) சிற்பி பாலசுப்பிரமணியம்

B) சுகந்தி சுப்பிரமணியன்

C) மயிலை சீனி.வேங்கடசாமி

D) மேற்காணும் யாருமில்லை

விளக்கம்: சுகந்தி சுப்பிரமணியன் உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முழுமை செய்யாத நிலையில் திருமணமாகி, கணவர் தந்த நம்பிக்கையில் எழுதத் தொடங்கினார். தனித்து விடப்பட்ட பெண்ணின் அனுபவங்களால் நிரம்பியுள்ள இவருடைய படைப்புகள் புதையுண்ட வாழ்க்கை, மீண்டெழுந்த ரகசியம் ஆகிய இரு கவிதை தொகுப்புகளாக வந்துள்ளன.

12) இரட்சணிய யாத்திரிகம் என்னும் நூல் பில்கிரிம்ஸ் புரோகிரஸ் என்னும் நூலின் தழுவல் ஆகும். பில்கிரிம்ஸ் புரோகிரஸ் என்ற நூலின் ஆசிரியர் யார்?

A) உமர்கய்யாம்

B) ஜான் பன்யன்

C) ஜி.யூ.போப்

D) வீரமாமுனிவர்

விளக்கம்: ஜான் பன்யன் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய பில்கிரிம்ஸ் புரோகிரஸ் எனும் ஆங்கில நூலின் தழுவலாக இரட்சணிய யாத்திரிகம் எழுதப்பட்டது

13) தடக்கை என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?

A) உவமைத்தொகை

B) உரிச்சொற்றொடர்

C) அன்மொழித்தொகை

D) ஆகுபெயர்

விளக்கம்: தடக்கை – உரிச்சொற்றொடர்

தட என்பது சொல் உரிசொல் ஆகும். இது சேர்ந்து வரும் சொல் உரிசொற்றொடர் ஆகும்.

14) இரட்சணிய யாத்திரிகம் எத்தனை பருவங்களை கொண்ட ஒரு காப்பியம்?

A) 4

B) 5

C) 6

D) 7

விளக்கம்: இரட்சணிய யாத்திரகம் என்பது 5 பருவங்களைக் கொண்ட ஒரு பெரும் காப்பியம் ஆகும்.அவை,

1. ஆதி பருவம்

2. குமார பருவம்

3. நிதான பருவம்

4. ஆரணிய பருவம்

5. இரட்சணிய பருவம்

15) நேச எனும் வல்லியதை நீக்க வசம் இன்றி – என்ற வரியில் நேசம் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) அன்பு

B) இழிந்த

C) உறவினர்

D) நண்பர்

விளக்கம்: நேசம் – அன்பு.

அன்பு என்னும் உறுதியான கட்டிலிருந்து விடுபட முடியாமை என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிக பாடல் வரியின் பொருள் ஆகும்.

16) கோபல்ல கிராமம் என்ற நூலை எழுதியவர் யார்?

A) அரு.ராமநாதன்

B) அப்துல் ரகுமான்

C) கி.ராஜநாராயணன்

D) கண்ணதாசன்

விளக்கம்: இயேசு காவியம் – கண்ணதாசன்

கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்

பால்வீதி – அப்துல் ரகுமான்

வீரபாண்டிய கட்டபொம்மன் – அரு.ராமநாதன்

17) Stamp pad என்ற சொல்லின் தமிழாக்கம் என்ன?

A) மை குப்பி

B) மை பொதி

C) கைரேகை மை

D) அஞ்சல் மை

விளக்கம்: Stamp pad – மை பொதி.

18) இரட்சணிய யாத்திரிகம், எந்த ஆண்டு மே திங்களில் முதல் பதிப்பாக வெளியிடப்பட்டது?

A) 1813

B) 1894

C) 1893

D) 1879

விளக்கம்: திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த ‘நற்போதகம்’ எனும் ஆன்மீக மாத இதழில் இராட்சணிய யாத்திரிகம் 13 ஆண்டுகள் தொடராக வெளிவந்தது. இரட்சணிய யாத்திரிகம், 1894-ஆம் ஆண்டு மே திங்களில் முதல் பதிப்பாக வெளியிடப்பட்டது.

19) எந்த திராவிட மொழியியல் கழகத்தில் முதுபேராய்வாளராகப் பணியாற்றியபோது வ.சுப.மாணிக்கம் ‘தமிழ் யாப்பியல் வரலாறும் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஆய்வு மேற்கொண்டார்?

A) டெல்லி

B) திருவனந்தபுரம்

C) சென்னை

D) மைசூர்

விளக்கம்: திருவனந்தபுரம் திராவிட மொழியியல் கழகத்தில் முதுபேராய்வாளராகப் பணியாற்றியபோது வ.சுப.மாணிக்கம் ‘தமிழ் யாப்பியல் வரலாறும் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஆய்வு மேற்கொண்டார்

20) அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமன் – என்ற வரியில் குறிப்பிடப்படுபவர் யார்?

A) பேகன்

B) பாரி

C) நள்ளி

D) ஆய்

விளக்கம்: அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் – என்ற வரி சிறுபாணாற்றுப்படையில் இடம்பெற்ற வரியாகும்.

பேகன் வலிமை வாய்ந்த ஆவியர் குலத்தில் தோன்றியவர் என்பது மேற்காணும் வரியின் பொருளாகும்.

21) நேச எனும் வல்லியதை நீக்க வசம் இன்றி – என்ற வரியில் வல்லியதை என்ற சொல்லின் பொருள் என்ன?

A) அன்பை

B) இழிந்த தன்மையை

C) உறுதியை

D) கட்டியமை

விளக்கம்: வல்லியதை – உறுதியை.

அன்பு என்னும் உறுதியான கட்டிலிருந்து விடுபட முடியாமை என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிக பாடல் வரியின் பொருள் ஆகும்.

22) Rubber Stamp என்பதன் தமிழாக்கம் என்ன?

A) இழுவை முத்திரை

B) நெகிழி முத்திரை

C) அஞ்சல் முத்திரை

D) முத்திரை பொதி

விளக்கம்: Rubber Stamp – இழுவை முத்திரை.

23) ஈசன்மகன் நின்றனர் ஓர் ஏழையென ஓர்மின் – என்ற வரியில் ஓர்மின் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) ஆராய்ந்து பாருங்கள்

B) வலிமை பெறுங்கள்

C) குற்றமில்லாத

D) இழிந்த

விளக்கம்: ஓர்மின் – ஆராய்ந்து பாருங்கள்.

எந்த உதவியும் பெற முடியாத ஓர் ஏழையைப் போல அமைதியுடன் நின்றார். இதை நீங்கள் எண்ணிப் பாருங்கள் (ஏசு பிரானை கயிற்றால் கட்டியபோது கூறியது). என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிக பாடலின் பொருள் ஆகும்.

24) வ.சுப.மாணிக்கம் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. அழகப்பா கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகவும் முதல்வராகவும் பணியாற்றினார்.

2. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகச் சிறப்புடன் செயலாற்றியபோது பல்கலைக்கழக நடைமுறைகள் தமிழில் இருக்க வேண்டும் என ஆணை பிறப்பித்ததுடன் அங்குத் தமிழாய்வு நடைபெறவும் வழிவகுத்தார்;

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: அழகப்பா கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகவும் முதல்வராகவும் பணியாற்றினார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகச் சிறப்புடன் செயலாற்றியபோது பல்கலைக்கழக நடைமுறைகள் தமிழில் இருக்க வேண்டும் என ஆணை பிறப்பித்ததுடன் அங்கு தமிழாய்வு நடைபெறவும் வழிவகுத்தார்.

25) சந்தம் பூசி உலர்ந்த தோள்களை உடையவர், ஆர்வத்துடன் இனிமையான மொழிகளைப் பேசுபவர் யார்?

A) ஆய்

B) நள்ளி

C) பேகன்

D) அதியமான்

விளக்கம்: ஆய் – சந்தம் பூசி உலர்ந்த தோள்களை உடையவர், ஆர்வத்துடன் இனிமையான மொழிகளைப் பேசுபவர்.

26) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

A) Stapler – கம்பி தைப்புக் கருவி

B) Folder – கோப்புத் தொகுப்பு

C) File – கோப்பு

D) Eraser – அழிப்பான்

விளக்கம்: Stapler – கம்பி தைப்புக் கருவி

Folder – மடிப்புத்தாள்

File – கோப்பு

Eraser – அழிப்பான்

27) புதையுண்ட வாழ்க்கை; என்ற கவிதை தொகுப்பை எழுதியவர் யார்?

A) சிற்பி பாலசுப்பிரமணியம்

B) சுகந்தி சுப்பிரமணியன்

C) மயிலை சீனி.வேங்கடசாமி

D) மேற்காணும் யாருமில்லை

விளக்கம்: சுகந்தி சுப்பிரமணியன் உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முழுமை செய்யாத நிலையில் திருமணமாகி, கணவர் தந்த நம்பிக்கையில் எழுதத் தொடங்கினார். தனித்து விடப்பட்ட பெண்ணின் அனுபவங்களால் நிரம்பியுள்ள இவருடைய படைப்புகள் புதையுண்ட வாழ்க்கை, மீண்டெழுந்த ரகசியம் ஆகிய இரு கவிதை தொகுப்புகளாக வந்துள்ளன.

28) பொருத்துக

அ. உன்னலிர் – 1. குற்றமில்லாத

ஆ. ஏதமில் – 2. எண்ணாதீர்கள்

இ. நேசம் – 3. அன்பு

ஈ. மாற்றம் – 4. சொல்

A) 1, 2, 3, 4

B) 2, 1, 3, 4

C) 1, 3, 4, 2

D) 1, 3, 2, 4

விளக்கம்: உன்னலிர் – எண்ணாதீர்கள்

ஏதமில் – குற்றமில்லாத

நேசம் – அன்பு

மாற்றம் – சொல்.

29) பாதகர் குழுமிச் சொற்ற பழிப்புரை என்னும் கொள்ளி – என்ற வரியில் பாதகர் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) எதிரி

B) சுற்றத்தார்

C) உடுத்தினர்

D) கொடியவர்

விளக்கம்: பாதகர் – கொடியவர்.

கொடியோர் ஒன்றுகூடிக் கூறிய இகழ்ச்சி மொழி, கொடிய தீக்கொள்ளி என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிப் பாடலின் பொருள் ஆகும்.

30) ஒருதான் தாங்கிய உரனுடைய நோன்தாள் – இவ்வரியில் உரன் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) வலிமை

B) பாரம்

C) வள்ளல்

D) உதவு

விளக்கம்: உரன் – வலிமை.

ஒருதான் தாங்கிய உரனுடைய நோன்தாள் – ஏழு வள்ளல்கள் ஈகை என்னும் பாரத்தை இழுத்துச் சென்றனர். ஆனால் நல்லியக்கோடன், தானே தனியொருவனாக இருந்து அந்த ஈகையின் பாரத்தைத் தாங்கி இழுத்துச் செல்லும் வலிமை உடையவர்.

31) “ஏட்டுச்சுவடிகளை எடுத்துப் புரட்டிப் பார்த்தேன். எதுவும் புரியாது. பின்னால் இவற்றையெல்லாம் படித்து ஆராய வேண்டும் என்னும் எண்ணம் எழும்” – என்று கூறியவர் யார்?

A) திரு.வி.க

B) மயிலை.சீனி வேங்கடசாமி

C) உ.வே.சா

D) கோவிந்தராசன்

விளக்கம்: “தமிழ்ப்பற்று முன்னோர்வழியாக எனக்குக் கிடைத்த சீதனம். எங்கள் வீட்டில் இராமாயணம், மகாபாரதம் போன்றவையும், ஏட்டுச்சுவடிகளும் நிறைய இருந்தன. ஏட்டுச்சுவடிகளை எடுத்துப் புரட்டிப் பார்த்தேன். எதுவும் புரியாது. பின்னால் இவற்றையெல்லாம் படித்து ஆராய வேண்டும் என்னும் எண்ணம் எழும். பின்னால் நான் செய்யப் புகுந்த இலக்கிய வரலாற்றுக் கல்வெட்டு ஆராய்ச்சிகளுக்கு அன்றே என் மனத்தில் வித்தூன்றிவிட்டேன் – மயிலை சீனி. வேங்கடசாமி

32) ‘திட்டம்’ என்னும் தலைப்பில் ‘வரங்கள் சாபங்கள் ஆகுமென்றால் இங்கே தவங்கள் எதற்காக?’ என்று எழுதப்பட்டுள்ள கவிதையில் ‘வரம் எதற்குக் குறியீடாகிறது?

A) அமுதசுரபி

B) ஆதிரைப்பருக்கை

C) திட்டம்

D) பயனற்ற விளைவு

விளக்கம்: வரங்கள்

சாபங்கள்

ஆகுமென்றால் இங்கே

தவங்கள் எதற்காக? – அப்துல் ரகுமான்

திட்டங்கள், தீட்டினாலும் அவை நாட்டு நலனுக்குப் பயன்படாமல், எதிராகப் போய்விடுவதை இக்கவிதை உணர்த்துகிறது. வரம் திட்டத்திற்குக் குறியீடாகிறது. சாபம் அதன் பயனற்ற விளைவுக்குக் குறியீடாகிறது.

33) பொருத்துக.

அ. வல்லியதை – 1. கட்டியமை

ஆ. ஊன்ற – 2. இழிந்த

இ. பிணித்தமை – 3. உறுதியை

ஈ. நீச – 4. அழுந்த

A) 1, 2, 3, 4

B) 3, 4, 1, 2

C) 1, 4, 3, 2

D) 3, 2, 1, 4

விளக்கம்: பிணித்தமை – கட்டியமை

நீச – இழிந்த

வல்லியதை – உறுதியை

ஊன்ற – அழுந்த

34) கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய – என்ற வரியில் கலிங்கம் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) ஆடை

B) மயில்

C) பேகன்

D) வண்டு

விளக்கம்: கலிங்கம் – ஆடை. பேகன் மயில் குளிரால் நடுங்குகிறதோ என்று எண்ணித் தன் மனத்தில் சுரந்த அருளினால் தன்னுடைய ஆடையைக் கொடுத்தான் என்பது மேற்காணும் வரியின் பொருளாகும்.

35) இயேசு காவியம் என்ற நூலை எழுதியவர் யார்?

A) அரு.ராமநாதன்

B) அப்துல் ரகுமான்

C) கி.ராஜநாராயணன்

D) கண்ணதாசன்

விளக்கம்: இயேசு காவியம் – கண்ணதாசன்

கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்

பால்வீதி – அப்துல் ரகுமான்

வீரபாண்டிய கட்டபொம்மன் – அரு.ராமநாதன்

36) கூற்றுகளை ஆராய்க

1. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றினார் வ.சுப.மாணிக்கம்

2. திருவனந்தபுரத்தின் திராவிட மொழியியல் கழகத்தில் முதுபேராய்வாளராகப் பணிபுரிந்தபோது ‘தமிழ் யாப்பியல் வரலாறும் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஆய்வு மேற்கொண்டார்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றினார் வ.சுப.மாணிக்கம்

2. திருவனந்தபுரத்தின் திராவிட மொழியியல் கழகத்தில் முதுபேராய்வாளராகப் பணிபுரிந்தபோது ‘தமிழ் யாப்பியல் வரலாறும் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஆய்வு மேற்கொண்டார்

37) மயிலை சீனி. வேங்கடசாமியின் ஆய்வுக்கட்டுரைகள் கீழ்க்காணும் எந்த இதழில் வெளியாகவில்லை?

A) குடியரவு

B) ஊழின்

C) செந்தமிழச்செல்வி

D) ஆரம்பதமிழாசிரியன்

விளக்கம்: மயிலை சீனி.வேங்கடசாமியின் ஆய்வுக்கட்டுரைகள் குடியரசு, ஊழின், செந்தமிழ்ச்செல்வி, ஆரம்பாசிரியன், லஷ்மி முதலான இதழ்களில் வெளியாகின.

38) கூற்றுகளை ஆராய்க

1. திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த ‘நற்போதகம்’ எனும் ஆன்மீக மாத இதழில் இராட்சணிய யாத்திரிகம் 13 ஆண்டுகள் தொடராக வெளிவந்தது.

2. இரட்சணிய யாத்திரிகம், 1899 ஆம் ஆண்டு மே திங்களில் முதல் பதிப்பாக வெளியிடப்பட்டது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த ‘நற்போதகம்’ எனும் ஆன்மீக மாத இதழில் இராட்சணிய யாத்திரிகம் 13 ஆண்டுகள் தொடராக வெளிவந்தது. இரட்சணிய யாத்திரிகம், 1894 ஆம் ஆண்டு மே திங்களில் முதல் பதிப்பாக வெளியிடப்பட்டது.

39) பாதகர் குழுமிச் சொற்ற பழிப்புரை என்னும் கொள்ளி – என்ற வரியில் சொற்ற என்ற சொல்லின் பொருள் என்ன?

A) சொற்கள்

B) கூறிய

C) உடுத்திய

D) கொடிய

விளக்கம்: சொற்ற – கூறிய

கொடியோர் ஒன்கூடிக் கூறிய இகழ்ச்சி மொழி, கொடிய தீக்கொள்ளி என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிப் பாடலின் பொருள் ஆகும்.

40) சுகந்தி சுப்பிரமணியன் பற்றிய கூற்றுகளை ஆராய்க

1. தனித்து விடப்பட்ட பெண்ணின் அனுபவங்களால் நிரம்பியுள்ள இவருடைய படைப்புகள் புதையுண்ட வாழ்க்கை, மீண்டெழுதலின் ரகசியம் ஆகிய இரு கவிதைத் தொகுப்புகளாக வெளிவந்துள்ளன.

2. இவரின் கவிதைகளும் சில சிறுகதைகளும் சுகந்தி சுப்பிரமணியன் படைப்புகள் என்ற பெயரில் வெளிவந்துள்ளன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. தனித்து விடப்பட்ட பெண்ணின் அனுபவங்களால் நிரம்பியுள்ள இவருடைய படைப்புகள் புதையுண்ட வாழ்க்கை, மீண்டெழுதலின் ரகசியம் ஆகிய இரு கவிதைத் தொகுப்புகளாக வெளிவந்துள்ளன.

2. இவரின் கவிதைகளும் சில சிறுகதைகளும் சுகந்தி சுப்பிரமணியன் படைப்புகள் என்ற பெயரில் வெளிவந்துள்ளன.

41) கூற்றுகளை ஆராய்க. (மயிலை சீனி. வேங்கடசாமி)

1. இனவரலாற்றை இலக்கியம், தொல்லியல், கல்வெட்டு, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தரவுகளைத் தேடி எழுதிய ஆளுமைகளில் முக்கியமானவர்.

2. பள்ளி ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், இதழ் ஆசிரியராக பணியாற்றி எழுதி முடித்த புத்தகங்களே, தமிழர் தம் பழம்பெருமையை உணர உதவும் புதையல்களாக விளங்குகின்றன

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. இனவரலாற்றை இலக்கியம், தொல்லியல், கல்வெட்டு, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தரவுகளைத் தேடி எழுதிய ஆளுமைகளில் முக்கியமானவர்.

2. இதழ் ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியபடியே எழுதி முடித்த புத்தகங்களே, தமிழர் தம் பழம்பெருமையை உணர உதவும் புதையல்களாக விளங்குகின்றன

42) வ.சுப.மாணிக்கம் எந்த பல்கலைக்கழகத்தில் தமிழாய்வு நடைபெற வழிவகுத்தார்?

A) மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

B) அழகப்பா பல்கலைக்கழகம்

C) அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

D) பாரதியார் பல்கலைக்கழகம்

விளக்கம்: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகச் சிறப்புடன் செயலாற்றியபோது பல்கலைக்கழக நடைமுறைகள் தமிழில் இருக்க வேண்டும் என ஆணை பிறப்பித்ததுடன் அங்குத் தமிழாய்வு நடைபெறவும் வழிவகுத்தார்.

43) மலைதல் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?

A) பண்புத்தொகை

B) உரிச்சொல்

C) தொழிற்பெயர்

D) வினைத்தொகை

விளக்கம்: மலைதல் – தொழிற்பெயர்

அல், தல் என்று ஒரு சொல் முடிந்தால் அது தொழிற்பெயராகும்.

44) பால்வீதி என்ற நூலை எழுதியவர் யார்?

A) அரு.ராமநாதன்

B) அப்துல் ரகுமான்

C) கி.ராஜநாராயணன்

D) கண்ணதாசன்

விளக்கம்: இயேசு காவியம் – கண்ணதாசன்

கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்

பால்வீதி – அப்துல் ரகுமான்

வீரபாண்டிய கட்டபொம்மன் – அரு.ராமநாதன்

45) நோதகச் சினந்தோர் மாற்ற நுவன்றிலர் கரும நோக்கி – என்ற வரியில் மாற்ற என்ற சொல்லின் பொருள் என்ன?

A) இகழ

B) கூற

C) மாற்றம் செய்ய

D) சொல்

விளக்கம்: மாற்ற – சொல்.

இயேசுபிரான் தம்மைத் துன்புறுத்துகிறவர்கள் மீது சினந்து வருந்தத்தக்க ஒரு மறுசொல்லும் கூறாமல் நின்றார் என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிக பாடலின் பொருள் ஆகும்.

46) உன்னலிர் என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு என்ன?

A) ஏவல் ஒருமை வினைமுற்று

B) ஏவல் பன்மை வினைமுற்று

C) முன்னிலை ஒருமை வினைமுற்று

D) முன்னிலை பன்மை வினைமுற்று

விளக்கம்: உன்னலிர் – முன்னிலைப் பன்மை வினைமுற்று. இர் என்பது முன்னிலை பன்மை வினைமுற்று விகுதி.

47) முகங்களுடன் முகம்

எனது முகம் காணவில்லை

தேடுகிறேன் இன்னமும்

எனக்குள்ளே என்னைத் தொலைத்தபின் – என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) சுகந்தி சுப்பிரமணியம்

B) நா.காமராசன்

C) தி.சு.நடராசன்

D) மீரா

விளக்கம்: முகங்களுடன் முகம்

எனது முகம் காணவில்லை

தேடுகிறேன் இன்னமும்

எனக்குள்ளே என்னைத் தொலைத்தபின்

எனது முகம் முகவரியற்றுப் போனது.

முகத்தைத் தொலைத்தபின்

என் உடல் என்னை மறந்து போனது – சுகந்தி சுப்பிரமணியம்

48) மலாடு என்ற மலை கீழ்க்காணும் எந்த வள்ளலுடன் தொடர்புடையது?

A) நள்ளி

B) ஓரி

C) காரி

D) பேகன்

விளக்கம்: காரி (மலையமான் திருமுடிக்காரி)-யின் நாடு மலையமான் நாடு ஆகும். இது மருவி ‘மலாடு’ எனப்பட்டது. இது விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருக்கோவிலூரும் (திருக்கோயிலூர்) அதைச் சூழ்ந்துள்ள பகுதிகளுமாகும்.

49) பாதகர் குழுமிச் சொற்ற பழிப்புரை என்னும் கொள்ளி – என்ற வரியில் பழிப்புரை என்ற சொல்லின் எதிர்ச்சொல் என்ன?

A) நற்சொல்

B) இகழ்ச்சி மொழி

C) ஆராய்ந்த சொல்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: பழிப்புரை – இகழ்ச்சி மொழி.

கொடியோர் ஒன்றுகூடிக் கூறிய இகழ்ச்சி மொழி, கொடிய தீக்கொள்ளி என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிகப் பாடலின் பொருள் ஆகும்.

50) கூற்றுகளை ஆராய்க (மயிலை சீனி.வேங்கடசாமி).

1. மயிலை சீனி.வேங்கடசாமி 14.12.1900 ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் பிறந்தார்.

2. இவரின் தந்தை ஒரு தமிழாசிரியராகவும், தமையனார் கோவிந்தராசன் சித்த மருத்துவராக விளங்கியமையால், இளமையிலேயே தமிழின்மீது தணியாத பற்றும் நுணுகி ஆராயும் திறனும் பெற்றவராகத் திகழ்ந்தார்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: மயிலை சீனி.வேங்கடசாமி 16.12.1900 ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் பிறந்தார் மயிலை சீனி.வேங்கடசாமி. தந்தை சீனிவாசன் ஒரு சித்தமருத்துவராகவும், அவருடைய தமையனார் கோவிந்தராசன் தமிழாசிரியராகவும் விளங்கியமையால், இளமையிலேயே தமிழின்மீது தணியாத பற்றும் நுணுகி ஆராயும் திறனும் பெற்றவராகத் திகழ்ந்தார். தந்தையின் சித்தமருத்துவப் பின்புலம், தமையனாரின் தமிழ்ப் பின்புலம் ஆகியவை தன்மை வரலாற்றாய்வாளராக உருவாக்கியது என்றார்.

51) ஏதமில் கருணைப் பொம்மான் இருதயத்து ஊன்ற ஊன்ற – என்ற வரியில் ஏதமில் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) இழிந்த

B) குற்றமில்லாத

C) அழுந்த

D) கூறவில்லை

விளக்கம்: ஏதமில் – குற்றிமில்லாத.

மாசில்லாத அருள்நிறைந்த இறைமகன் இதயத்தில் (கொடியோர் ஒன்றுகூடிக் கூறிய இகழ்ச்சி மொழிகள்) அழுந்தியது என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திர வரியின் பொருளாகும்.

52) என்கொல் மேதினி கீண்டு வெடித்திலது என்பார் – என்ற வரியில் மேதினி என்ற சொல்லின் பொருள் என்ன?

A) எருமை

B) மோதிரம்

C) உலகம்

D) கடல்

விளக்கம்: மேதினி – உலகம்.

மக்கள் ‘இத்தனை கொடுமைகளுக்குப் பிறகும் இவ்வுலகம் பிளந்து வெடிக்கவில்லையே’என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிக பாடல் வரியின் பொருளாகும்.

53) கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய என்ற தொடருடன் தொடர்புடையவர் யார்?

A) நள்ளி

B) பேகன்

C) அதிகன்

D) ஓரி

விளக்கம்: மயிலுக்கு தன் ஆடையைக் கொடுத்தவன் பேகன். இதுவே மேற்காணும் சிறுபாணாற்றுப் படை வரியில் குறிப்பிடப்படுகிறது.

54) சிறுபாணாற்றுப்படையை எழுதியவர் யார்?

A) கடியலூர் உருத்திருக்கண்ணனார்

B) நல்லூர் நத்தத்தனார்

C) கோப்பெருஞ்சோழன்

D) குமணன்

விளக்கம்: சிறுபாணாற்றுப்படை என்பது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும். இதனை எழுதியவர் நல்லூர் நத்தத்தனார்.

55) ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ என்னும் நூலை எழுதியவர் யார்?

A) மயிலை சீனி.வேங்கடசாமி

B) புலவர் குழந்தை

C) தமிழ்நதி

D) நா.காமராசன்

விளக்கம்: சங்க காலத்துக்குப் பிற்பட்ட காலத்தல் தமிழகத்தைக் களப்பிரர்கள் என்ற மன்னர்கள் ஆட்சி புரிந்தனர். இக்காலம் தமிழர்களின் வரலாற்றில் இருண்ட காலம் என்று மரபுவழிப்பட்ட வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டிருந்தனர். இம்மன்னர்கள் குறித்த ஆய்வை வேங்கடசாமி விரிவாக மேற்கொண்டு களப்பிரர் குறித்த புதிய கண்ணோட்டத்தைக் ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ என்னும் நூல்மூலம் வெளிப்படுத்தினார்.

56) எப்போது நடைபெற்ற மாநாட்டில் ச.த.சற்குணர், கிறித்துவமும் தமிழும் என்ற பொருள் குறித்து உரையாற்றியனார்?

A) 1934

B) 1937

C) 1940

D) 1945

விளக்கம்: 1934இல் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ச.த.சற்குணர், கிறித்துவமும் தமிழும் என்ற பொருள் குறித்து உரையாற்றினார்.

57) சாவந் தாங்கிய, சாந்துபுலர் திணிதோள் – இவ்வரியில் சாந்து என்ற சொல்லின் பொருள் என்ன?

A) சந்தனம்

B) பொட்டு

C) வில்

D) வலிமை

விளக்கம்: சாந்து – சந்தனம்.

ஆய் – வில் ஏந்தியவர், சந்தனம் பூசிய உலர்ந்த தோள்களை உடையவர். ஆர்வத்துடன் இனிமையான மொழிகளைப் பேசுபவர்.

58) விரிபெரு தமிழர் மேன்மை

ஓங்கிடச் செய்வ தொன்றே

உயிர்ப்பணியாகக் கொண்டோன் – இவ்வரியில் குறிப்பிடப்படுபவர் யார்?

A) மயிலை சீனி.வேங்கடசாமி

B) பாரதிதாசன்

C) சிற்பி பாலசுப்பிரமணியம்

D) பாரதியார்

விளக்கம்: தாங்கெட நேர்ந்த போதும்

தமிழ்கெட லாற்றா அண்ணல்

வேங்கடசாமி என்பேன்

விரிபெரு தமிழர் மேன்மை

ஓங்கிடச் செய்வ தொன்றே

உயிர்ப்பணியாகக் கொண்டோன்

வீங்கிட மாட்டான் கல்வி

விளம்பரம் விழைதல் இல்லான் – பாவேந்தர் பாரதிதாசன்.

மேற்காணும் பாடல் வரிகள் மயிலை சீனி.வேங்கடசாமி பற்றியதாகும்.

59) கூற்றுகளை ஆராய்க

1. ஆசிரியர் பயிற்சி பெற்றுத் தொடக்கப் பள்ளியில் 25 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.

2. விபுலானந்த அடிகள், கா.சுப்பிரமணியர், திரு.வி.க, தொ.பொ.மீ, ச.த.சற்குணர் ஆகிய அறிஞர் பெருமக்களிடம் நட்பு கொண்டிருந்தார்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1.ஆசிரியர் பயிற்சி பெற்றுத் தொடக்கப் பள்ளியில் 25 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.

2. விபுலானந்த அடிகள், கா.சுப்பிரமணியர், திரு.வி.க, தொ.பொ.மீ, ச.த.சற்குணர் ஆகிய அறிஞர் பெருமக்களிடம் கொண்டிருந்த தொடர்பு காரணமாக அவரது ஆய்வுக்கட்டுரைகள் குடியரசு, ஊழியன், செந்தமிழ்ச்செல்வி, ஆரம்பாசிரியன், லஷ்மி முதலான இதழ்களில் வெளியாகின.

60) கிறித்துவக் கம்பர் என அழைக்கப்படுபவர் யார்?

A) வீரமாமுனிவர்

B) ஜி.யூ.போப்

C) எச்.ஏ.கிருட்ணனார்

D) கால்டுவெல்

விளக்கம்: இரட்சணிய யாத்திரிகம் என்ற நூலை எழுதியவர் எச்.ஏ. கிருட்டிணனார். இவரின் பிற நூல்கள்: போற்றித் திருஅகவல், இரட்சணிய மனோகரம். இவரைக் கிறித்துவக் கம்பர் எனறு போற்றுவர்.

61) ஓர்மின் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?

A) ஏவல் ஒருமை வினைமுற்று

B) ஏவல் பன்மை வினைமுற்று

C) முன்னிலை ஒருமை வினைமுற்று

D) முன்னிலை பன்மை வினைமுற்று

விளக்கம்: ஓர்மின் – ஏவல் பன்மை வினைமுற்று. மின் என்பது – ஏவல் பன்மை வினைமுற்று விகுதி.

62) ஒண்ணுமோ வறுங் கூவலுக்கு உததியை ஒடுக்க – என்ற வரியில் உததி என்ற சொல்லின் பொருள் என்ன?

A) கிணறு

B) கடல்

C) ஆறு

D) ஏரி

விளக்கம்: உததி – கடல்.

வற்றிய சிறிய கிணறு தனக்குள் கடலை அடக்கிக்கொள்ள முடியுமா? முடியாது என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிக வரியின் பொருளாகும்.

63) ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்ற கொள்கையைப் பறைசாற்றுவதற்காக வ.சுப. மாணிக்கம் மேற்கொண்ட முயற்சி என்ன?

A) தமிழில் இதழ் நடத்தினார்

B) தமிழாசிரியராக பணியாற்றினார்

C) தமிழ்வழிக் கல்வி இயக்கம் என்ற அமைப்பை நிறுவினார்

D) தனது பெயரை தனித்தமிழாக்கினார்

விளக்கம்: ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்ற கொள்கையைப் பறைசாற்றுவதற்காகத் ‘தமிழ்வழிக் கல்வி இயக்கம்’ அமைப்பை நிறுவித் தமிழ்ச் சுற்றுலா மேற்கொண்டார்.

64) எனக்குள்ளே என்னைத் தொலைத்தபின்

எனது முகம் முகவரியற்றுப் போனது.

முகத்தைத் தொலைத்தபின்

என் உடல் என்னை மறந்து போனது – என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) சுகந்தி சுப்பிரமணியம்

B) நா.காமராசன்

C) தி.சு.நடராசன்

D) மீரா

விளக்கம்: முகங்களுடன் முகம்

எனது முகம் காணவில்லை

தேடுகிறேன் இன்னமும்

எனக்குள்ளே என்னைத் தொலைத்தபின்

எனது முகம் முகவரியற்றுப் போனது.

முகத்தைத் தொலைத்தபின்

என் உடல் என்னை மறந்து போனது – சுகந்தி சுப்பிரமணியம்

65) பிரான்மலை என்பது கீழ்க்காணும் எந்த வள்ளலுடன் தொடர்புடையது?

A) பாரி

B) ஓரி

C) காரி

D) நள்ளி

விளக்கம்: பாரியின் நாடு: பறம்பு மலையும், அதைச் சூழ்ந்திருந்த முந்நூறு ஊர்களும் ஆகும். பறம்பு மலையே பிறம்பு மலையாகி, தற்போது பிரான்மலை எனப்படுகிறது. இம்மலை சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ளது.

66) எழு பெருவள்ளல்கள் என்ற நூலை எழுதியவர் யார்?

A) மயிலை சீனி.வேங்கடசாமி

B) சிபி கே.சாலமன்

C) கி.வ.ஜகந்நாதன்

D) புலவர் சே.சுந்தரராசன்

விளக்கம்: தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் – மயிலை சீனி. வேங்கடசாமி

மாறுபட்டுச் சிந்திக்கலாமா? – சிபி.கே. சாலமன்

எழு பெருவள்ளல்கள் – கி.வ.ஜகந்நாதன்

இரட்சணிய யாத்திரிகம் – புலவர் சே.சுந்தரராசன்.

67) கூற்று: ‘பௌத்தமும் தமிழும்’, ‘சமணமும் தமிழும்’ ஆகிய நூல்களை மயிலை சீனி.வேங்கடசாமி எழுதினார்.

காரணம்: 1934இல் தொ.பொ.மீனாட்சி சுந்தரனார் சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ச.த.சற்குணர் ஆற்றிய உரை.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: தமிழின் தொல் இலக்கியம், தொல் கலை, தொல்லெழுத்து ஆகியவற்றில் கொண்ட ஈடுபாடு காரணமாக, ‘பௌத்தமும் தமிழும்’, ‘சமணமும் தமிழும்’ ஆகிய நூல்களை மயிலை சீனி.வேங்கடசாமி எழுதினார்.

68) ஏதமில் கருணைப் பொம்மான் இருதயத்து ஊன்ற ஊன்ற – என்ற வரியில் கருணைபொம்மான் என்று குறிப்பிடப்படுபவர் யார்?

A) அல்லா

B) இயேசுபிரான்

C) எச்.ஏ.கிருட்டிணனார்

D) உமறுப்புலவர்

விளக்கம்: கருணைபொம்மான் – இயேசு பிரான்.

மாசில்லாத அருள்நிநை;த இறைமகன் இதயத்தில் (கொடியோர் ஒன்றுகூடிக் கூறிய இகழ்ச்சி மொழிகள்) அழுந்தியது என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிக வரியின் பொருளாகும்.

69) இலங்கை குறித்த வரலாறு-ஐ எழுதியவர் யார்?

A) மயிலை சீனி.வேங்கடசாமி

B) நா.காமராசன்

C) பாரதிதாசன்

D) தமிழ்நதி

விளக்கம்: கொங்குநாட்டு மன்னர்கள், துளு நாட்டு மன்னர்கள், களப்பிரர்கள் மற்றும் இலங்கை குறித்த வரலாறு ஆகியவற்றை மயிலை சீனி வேங்கடசாமி எழுதியுள்ளார்.

70) இரட்சணிய யாத்திரிகம் ஐந்து பருவங்களை கொண்ட ஒரு பெரும் காப்பியம். இதில் பொருந்தாதது எது?

A) ஆதி பருவம்

B) குழந்தை பருவம்

C) நிதான பருவம்

D) ஆரணிய பருவம்

விளக்கம்: இரட்சணிய யாத்திரகம் என்பது 5 பருவங்களைக் கொண்ட ஒரு பெரும் காப்பியம் ஆகும்.அவை,

1. ஆதி பருவம்

2. குமார பருவம்

3. நிதான பருவம்

4. ஆரணிய பருவம்

5. இரட்சணிய பருவம்

71) எந்த ஆண்டு தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் இராயபுரத்தில் அமைக்கப்பட்டது?

A) 1853

B) 1854

C) 1855

D) 1856

விளக்கம்: 1856இல் தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் இராயபுரத்தில் அமைக்கப்பட்டது.

72) “யதார்த்த நிகழ்வைப் படைப்பாளுமையுடன் வெளிப்படுத்துவதே ஆவணப்படம்” என்றவர் யார்?

A) சார்லி சாப்ளின்

B) தாதாசாகிப்

C) கிரியோர்சன்

D) மேற்காணும் யாருமில்லை

விளக்கம்: “யதார்த்த நிகழ்வைப் படைப்பாளுமையுடன் வெளிப்படுத்துவதே ஆவணப்படம்” என்கிறார் கிரியோர்சன்.

73) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க

A) மால்வரை – பெரிய மலை

B) கரவாது – மறைக்காது

C) போது – பொழுது

D) கஞலிய – நெருங்கிய

விளக்கம்: போது – மலர்.

…………….நளிசினை

நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்து.

செறிவான கிளைகளில் மணம் வீசும் மலர்கள் நிறைந்த, சுரபுன்னை மரங்கள் சூழ்ந்த சிறிய மலை நாட்டைக் கூத்தர்க்குப் பரிசாக வழங்கியவர் ஓரி என்னும் வள்ளல்.

74) மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் முதல் நூல் எது?

A) பௌத்தமும் தமிழும்

B) சமணமும் தமிழும்

C) கிறித்துவமும் தமிழும்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: 1934-இல் தொ.பொ.மீனாட்சி சுந்தரனார் சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ச.த.சற்குணர், கிறித்துவமும் தமிழும் என்ற பொருள் குறித்து உரையாற்றினார். அவ்வுரையைக் கேட்டுப் பெற்ற ஆர்வத்தினால் ‘கிறித்துவமும் தமிழும்’ என்னும் நூலை மயிலையார் எழுதினார். இதுவே அவருடைய முதல் நூலாகும்.

75) வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்

மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்

கானவர்கள் விழியெறிந்து வானவரை யழைப்பர்

கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார் – என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) புலவர் குழந்தை

B) காளமேகப் புலவர்

C) மயிலை சீனி.வேங்கடசாமி

D) திரிகூடராசப்ப கவிராயர்.

விளக்கம்: வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்

மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்

கானவர்கள் விழியெறிந்து வானவரை யழைப்பர்

கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார் – திரிகூடராசப்ப கவிராயர்.

76) மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய கலை தொடர்பான எந்த நூல் தமிழக அரசின் முதல் பரிசை பெற்றது.

A) இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்

B) நுண்கலைகள்

C) இசைவாணர் கதைகள்

D) தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்

விளக்கம்: ‘தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்’ என்னும் நூல், கவின்கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முழுமையான முதல்நூல் ஆகும். இந்நூல் தமிழக அரசின் முதற்பரிசைப் பெற்றது

77) தவறான ஒன்றை தெரிவு செய்க. (பேகன் பற்றிய கூற்றுகளில்).

A) வலிமை வாய்ந்த ஆவியர் குலத்தில் தோன்றியவர்

B) பெரிய மலை நாட்டுக்கு உரியவர்

C) வலிமையும் பெருந்தன்மையும், நற்பண்பும் கொண்டவர்

D) பறம்பு மலைக்குத் தலைவர்.

விளக்கம்: பேகன் – வலிமை வாய்ந்த ஆவியர் குலத்தில் தோன்றியவர், பெரிய மலை நாட்டுக்கு உரியவர், வலிமையும் பெருந்தன்மையும், நற்பண்பும் கொண்டவர், பொதினி மலைக்குத் தலைவர்.

பாரி – வெள்ளிய அருவிகளைக் கொண்ட பறம்புமலையின் தலைவன்

78) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

A) வளமலை – வளமான மலை

B) கவாஅன் – மலைப்பக்கம்

C) கலிங்கம் – ஆடை

D) அருந்திறல் – வலிமை குன்றிய

விளக்கம்: அருந்திறல் – வலிமை வாய்ந்த.

அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் – என்ற வரி சிறுபாணாற்றுப்படையில் இடம்பெற்ற வரியாகும்.

பேகன் வலிமை வாய்ந்த ஆவியர் குலத்தில் தோன்றியவர் என்பது மேற்காணும் வரியின் பொருளாகும்.

79) என் முகம் எப்படியென

எனக்குத் தெரியாது

ஆனாலும்

என் முகத்தை நான் தேடியாக வேண்டும்

இப்பொழுதேனும் – என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) கவிமணி

B) நா.காமராசன்

C) சுகந்தி சுப்பிரமணியன்

D) சிற்பி பாலசுப்பிரமணியம்

விளக்கம்: என் முகம் எப்படியென

எனக்குத் தெரியாது

ஆனாலும்

என் முகத்தை நான் தேடியாக வேண்டும்

இப்பொழுதேனும் – சுகந்தி சுப்பிரமணியன்

80) எந்த இதழில் இரட்சணிய யாத்திரகம் 13 ஆண்டுகள் தொடராக வெளிவந்தது?

A) நற்போதனை

B) நல்லறிவு

C) நற்சிந்தனை

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த ‘நற்போதகம்’ எனும் ஆன்மீக மாத இதழில் இராட்சணிய யாத்திரிகம் 13 ஆண்டுகள் தொடராக வெளிவந்தது.

81) பழங்காலத் தமிழர் வணிகம் என்ற நூலை எழுதியவர் யார்?

A) சிற்பி பாலசுப்பிரமணியம்

B) சுகந்தி சுப்பிரமணியம்

C) மயிலை சீனி.வேங்கடசாமி

D) பா.ஜீவானந்தம்

விளக்கம்: மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய நூல்கள்:

1. சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள்

2. பழங்காலத் தமிழர் வணிகம்

3. களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

4. கொங்கு நாட்டு வரலாறு

5. தமிழ்நாட்டு வரலாறு – சங்ககாலம் (அரசியல்.)

82) நூல்கள் வாங்கும் அறிவுப் பழக்கத்தை மக்களிடம் பரப்ப வேண்டும் என்று கூறியவர் யார்?

A) உ.வே.ச

B) மு.வ

C) வ.சுப.மாணிக்கம்

D) பாரதியார்

விளக்கம்: “ஐந்து கோடித் தமிழர் தொகை இருந்தும், ஆயிரம் படிகள் விற்பதற்கு மாமாங்கம் ஆகின்றது. வாங்காற்றல் மக்களிடம் இல்லை என்று சொல்லுதற்கில்லை. எத்துணையோ புதுக்கோலங்கட்கும் கேளிக்கைகட்கும் தலைகால் தெரியாமல் செலவு செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள். நூல்கள் வாங்கும் அறிவுப் பழக்கத்தை மக்களிடம் பரப்ப வேண்டும்” – வ.சுப.மாணிக்கம்.

83) ‘ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்ற பட்டம் பெற்றவர் யார்?

A) தமிழ்நதி

B) மயிலை சீனி.வேங்கடசாமி

C) புலவர் குழந்தை

D) நா.காமரான்

விளக்கம்: தமது ஓயாத தேடலினாலும் கடுமையான உழைப்பாலும் அரிய ஆய்வு முடிவுகளைக் கொணர்ந்த மயிலை சீனி.வேங்கடசாமிக்கு அறிஞர்கள் கூடிச் சென்னை கோகலே மண்படபத்தில் மணிவிழா எடுத்து ‘ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்ற பட்டத்தை வழங்கினர்.

84) சிறுபாணாற்றுப்படை எத்தனை அடிகளில் எழுதப்பட்ட நூல் ஆகும்?

A) 269

B) 271

C) 279

D) 292

விளக்கம்: சிறுபாணாற்றுப்படைய இயற்றிவர் நல்லூர் நத்தத்தனார். இது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று. ஓய்மாநாட்டு மன்னனான நல்லியக்கோடனைப் பாட்டுடைத் தலைவனாக் கொண்டு 269 அடிகளில் எழுதப்பட்ட நூல்.

85) கடையெழு வள்ளல்களின் வரிசையைச் சாராத மன்னர்கள் யார்?

A) ஆய் ஆண்டிரனும் அதிகனும்

B) நல்லியக்கோடனும் குமணனும்

C) நள்ளியும் ஓரியும்

D) பாரியும் காரியும்

விளக்கம்: தவறானது நல்லியக்கேடனும் குமணனும். குமணணன் என்பவர் கடையெழு வள்ளல்களில் ஒருவர் இல்லை.

கடையெழு வள்ளல்கள்:

1. பேகன்

2. பாரி

3. காரி

4. ஆய்

5. அதியமான்

6. நள்ளி

7. ஓரி

86) பொருத்துக.

அ. மேதினி – 1. கடல்

ஆ. கீண்டு – 2. வற்றாதது

இ. வாரிதி – 3. உலகம்

ஈ. சுவறாது – 4. பிளந்து

A) 1, 2, 3, 4

B) 3, 4, 1, 2

C) 3, 2, 1, 4

D) 1, 4, 3, 2

விளக்கம்: மேதினி – உலகம்

கீண்டு – பிளந்து

வாரிதி – கடல்

சுவறாதது – வற்றாதது

87) நடுவண் அரசு எப்போது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்தது?

A) 2005 டிசம்பர் 2

B) 2005 டிசம்பர் 25

C) 2005 டிசம்பர் 23

D) 2005 டிசம்பர் 27

விளக்கம்: நடுவண்அரசு 2005ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்தது.

88) இந்த

ஆதிரைப் பருக்கைகள் வீழ்ந்ததும்

பூமிப்பாத்திரம்

அமுதசுரபி – என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) நா.காமரசன்

B) மயிலை சீனி.வேங்கடசாமி

C) புலவர் குழந்தை

D) அப்துல் ரகுமான்

விளக்கம்: இந்த

ஆதிரைப் பருக்கைகள் வீழ்ந்ததும்

பூமிப்பாத்திரம்

அமுதசுரபி – அப்துல் ரகுமான் (பால்வீதி).

89) பின்னிய முள்முடி சிரத்துப் பெய்தனர் – என்ற வரியில் சிரம் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) நெற்றி

B) தலை

C) ஆடை

D) அங்கி

விளக்கம்: சிரம் – தலை.

துன்பம் தரும் கூர்மையான முள் செடியினால் பின்னப்பட்ட ஒரு முடியை (கிரீடம்) அவருடைய தலையில் வைத்து இரத்தம் பீறிட்டு ஒழுகுமளவு அழுத்தினர் என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிக வரியின் பொருளாகும்.

90) துளிமழைபொழியும்வளிதுஞ்சு நெடுங்கோட்டு – என்ற வரியில் வளி என்ற சொல்லின் பொருள் என்ன?

A) பாதை

B) காற்று

C) மழை

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: வளி – காற்று

நள்ளி – காலந்தவறாமல் பெய்யும் மழை போன்றவன். போர்த் தொழிலில் வல்லமையுடையவன். மழைக்காற்று எப்போதும் இருக்கக்கூடிய உயர்ந்த மலை நாட்டை உடையவன்.

91) 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியவியல் என்ற வட்டத்திற்கு பேசப்பட்ட தமிழகத்தின் வரலாற்றை, அதிலிருந்து மீட்டுத் திராவிட இயலாக அடையாளப்படுத்தியதில் யாருடைய பங்கு குறிப்பிடத்தக்கது?

A) மயிலை சீனி.வேங்கடசாமி

B) பாரதியார்

C) பாரதிதாசன்

D) கவியோகி

விளக்கம்: தமிழர் பண்பாட்டிலும் தமிழர் வரலாற்றிலும் ஆழ்ந்த அக்கறை கொண்ட மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் தமிழர் பண்பாட்டின் தனித்தன்மையை நிறுவுவதில் உறுதியான பார்வை கொண்டவர். 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியவியல் என்ற வட்டத்திற்குள் பேசப்பட்ட தமிழகத்தின் வரலாற்றை, அதிலிருந்து மீட்டுத் திராவிட இயலாக அடையாளப்படுத்தியதில் இவருடைய பங்கு குறிப்பிடத்தக்கது. அதன் பயனாக இன்று திராவிட இயல் தமிழியலாக வளர்ந்துள்ளது.

92) யார் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ச.த.சற்குணர் கிறித்துவமும் தமிழும் என்ற பொருள் குறித்து உரையாற்றினார்?

A) திரு.வி.க

B) தெ.பொ.மீனாட்சி சுந்தனார்

C) மயிலை சீனி.வேங்கடசாமி

D) விபுலானந்த அடிகள்

விளக்கம்: 1934இல் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் சிந்தாதிரிப் பேட்டை உயர்நிலைப் பள்ளியில் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ச.த.சற்குணர் கிறித்துவமும் தமிழும் என்ற பொருள் குறித்து உரையாற்றினார். அவ்வுரையைக் கேட்ட ஆர்வத்தினால் ‘கிறித்துவமும் தமிழும்’ என்னும் நூலை மயிலையார் எழுதினார்.

93) வ.சுப.மாணிக்கம் என்பவர் எந்த பல்கலைக்கழகத்தில் தமிழத்துறைத் தலவராகப் பணியாற்றினார்?

A) அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

B) பாரதியார் பல்கலைக்கழகம்

C) பாரதிதாசன் பல்கலைக்கழகம்

D) அழகப்பா பல்லைக்கழகம்

விளக்கம்: அழகப்பா கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகவும் முதல்வராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றினார் வ.சுப.மாணிக்கம்.

94) ‘ராஜா வந்திருக்கிறார்’ என்ற நூலை எழுதியவர் யார்?

A) புலவர் குழந்தை

B) கண்ணதாசன்

C) நா.காமராசன்

D) கு.அழகிரிசாமி

விளக்கம்: ‘ராஜா வந்திருக்கிறார்’ என்ற நூலை எழுதியவர் – கு.அழகிரிசாமி.

95) குடும்பம் என்ற சொல் முதன் முதலில் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

A) தொல்காப்பியம்

B) சிலப்பதிகாரம்

C) மணிமேகலை

D) திருக்குறள்

விளக்கம்: குடும்பம் என்ற சொல் முதன்முதலில் திருக்குறளில்தான் இடம் பெற்றுள்ளது.

96) தேனருவித் திரையெழும்பி வானின்வழி யொழுகும்

செங்கதிரோன் பரிகாலுந் தேர்க்காலும் வழுகும்

கூனலிளம் பிறைமுடித்த வேணியலங் காரர்

குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே – என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) கி.ராஜநாராயணன்

B) அரு.ராமநாதன்

C) காளமேகப்புலவர்

D) திரிகூட ராசப்பக் கவிராயர்

விளக்கம்: தேனருவித் திரையெழும்பு வானின்வழி யொழுகும்

செங்கதிரோன் பரிகாலுந் தேர்க்காலும் வழுகும்

கூனலிளம் பிறைமுடித்த வேணியலங் காரர்

குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே – திரிகூட ராசப்பக் கவிராயர்.

97) வெய்துறத் தலைமிசை அடித்து வேதனை – என்ற வரியில் மிசை என்ற சொல்லின் பொருள் என்ன?

A) தலை

B) கோல்

C) மேல்

D) கீழ்

விளக்கம்: மிசை – மேல்

இறைமகனை கோலினால் முள்முடி சூட்டப்பட்ட அவர் தலையின்மேல் வன்மையாக அடித்து வேதனை செய்தனர் என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிகப் பாடலின் பொருளாகும்.

98) வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற நூலை எழுதியவர் யார்?

A) அரு.ராமநாதன்

B) அப்துல் ரகுமான்

C) கி.ராஜநாராயணன்

D) கண்ணதாசன்

விளக்கம்: இயேசு காவியம் – கண்ணதாசன்

கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்

பால்வீதி – அப்துல் ரகுமான்

வீரபாண்டிய கட்டபொம்மன் – அரு.ராமநாதன்

99) பொருத்துக.

அ. கூவல் – 1. கடல்

ஆ. உததி – 2. கிணறு

இ. ஆக்கிணை – 3. முடியுமோ

ஈ. ஒண்ணுமோ – 4. தண்டனை

A) 2, 1, 4, 3

B) 1, 2, 3, 4

C) 1, 3, 4, 2

D) 2, 3, 4, 1

விளக்கம்: கூவல் – கிணறு

உததி – கடல்

ஆக்கணை – தண்டணை

ஒண்ணுமோ – முடியுமோ.

100) ஊன்ற ஊன்ற என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?

A) இரட்டைக் கிளவி

B) அடுக்குத்தொடர்

C) அன்மொழித்தொகை

D) வினையெச்சம்

விளக்கம்: ஊன்ற ஊன்ற – அடுக்குத்தொடர்.

அடுக்குத்தொடர்: 1. சொற்களை பிரித்தால் பொருள் தர வேண்டும்.

2. இரண்டிற்கும் மேற்பட்ட முறை சொற்கள் வரும்

101) பாதகர் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?

A) பண்புத்தொகை

B) வினைத்தொகை

C) விணையாலணையும் பெயர்

D) வினையெச்சம்

விளக்கம்: பாதகர் – வினையாலணையும் பெயர்.

வினையாலணையும் பெயர் – சொல் செயலை குறிக்காமல் செயல் செய்பவரைக் குறிக்கும்.

102) பொருத்துக.

அ. பொதினி– 1. அதியமான்

ஆ. பிறம்பு – 2. பேகன்

இ. தகடூர் – 3. பாரி

ஈ. ஊட்டி – 4. நள்ளி

A) 2, 3, 1, 4

B) 2, 1, 3, 4

C) 1.2, 3, 4

D) 2, 3, 1, 4

விளக்கம்: பேகன் – பொதினி

பாரி – பிறம்பு

அதியமான் – தகடூர்

நள்ளி – ஊட்டி

103) கூற்று: மயிலை சீனி.வேங்கடசாமி ‘கிறித்துவமும் தமிழும் என்ற நூலை எழுதினார்.

காரணம்: 1934இல் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் சிந்தாதிரிப் பேட்டை உயர்நிலைப் பள்ளியில் நடத்திய மாநாடு

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: 1934இல் தொ.பொ.மீனாட்சி சுந்தரனார் சிந்தாதிரிப் பேட்டை உயர்நிலைப்பள்ளியில் நடத்தி தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ச.த.சற்குணர் கிறித்துவமும் தமிழும் என்ற பொருள் குறித்து உரையாற்றினார். அவ்வுரையைக் கேட்டுப் பெற்ற ஆர்வத்தினால் ‘கிறித்துவமும் தமிழும்’ என்னும் நூலை மயிலையார் எழுதினார்.

104) பொல்லாத யூதர்களும் போர்ச்சேவ கர்குழுவும்

வல்லானை எள்ளிப் புறக்கணித்து வாய்மதமாய் – என்ற வரிகளில் வல்லானை என்ற சொல் யாரை குறிக்கிறது?

A) போந்தியு பிலாந்து என்னும் ஆளுநர்

B) பீலியாத்து

C) இறைமகன்

D) எச்.ஏ.கிருட்டிணனார்

விளக்கம்: வல்லான் – இறைமகன்.

பொல்லாத யூதர்களும் போர்ச் சேவகர் கூட்டமும் எல்லாம் வல்ல இறைமகனை இகழ்ந்து பேசியும் புறக்கணித்தும் வாயில் வந்தபடி சொல்லத் தகாத பழிமொழிகளைக் கூறினர்.

105) தமிழின் செல்வாக்கினாலேயே வடமொழியில் குறிப்புப் பொருள் கோட்பாடு உருவானது என்று குறிப்பிட்டவர் யார்?

A) பொதலேர்

B) ரைம்போ

C) வெர்லேன்

D) ஹார்ட்

விளக்கம்: தமிழின் செல்வாக்கினாலேயே வடமொழியில் குறிப்புப் பொருள் கோட்பாடு உருவானது என்று ஹார்ட் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் குறியீட்டு மரபு இன்றைய புதுக்கவிதைகளில் மிகுதியாகக் காணப்படுகிறது.

106) “நான் கதைகளையும் நவீனங்களையும் எழுதுகிறவன் அல்லன். வரலாற்று ஆராய்ச்சி நூல்களையும் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி நூல்களையும் எழுதுகிறவன்” என்று கூறியவர் யார்?

A) மயிலை சீனி.வேங்கடசாமி

B) மு.வ

C) உ.வே.ச

D) பாரதியார்

விளக்கம்: “நான் கதைகளையும் நவீனங்களையும் எழுதுகிறவன் அல்லன். வரலாற்று ஆராய்ச்சி நூல்களையும் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி நூல்களையும் எழுதுகிறவன். ஆராய்ச்சி நூல்களைப் பெரும்பான்மையோர் படிப்பதில்லை. இதை மிகச் சிறுபான்மையோரே படிக்கின்றனர் என்பதை நன்றாகத் தெரிந்தே எழுதுகிறேன்” என்று வேங்கடசாமி வருந்தி எழுதியுள்ளார்.

107) ஒண்ணுமோ வறுங் கூவலுக்கு உததியை ஒடுக்க – என்ற வரியில் கூவல் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) கிணறு

B) கடல்

C) ஆறு

D) ஏரி

விளக்கம்: கூவல் – கிணறு.

வற்றிய சிறிய கிணறு தனக்குள் கடலை அடக்கிக்கொள்ள முடியுமா? முடியாது என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிக வரியின் பொருளாகும்.

108) அண்ணலைத் தனி நிறுவவும், ஆக்கினைத் தீர்ப்புப் – என்ற வரியில் ஆக்கினை என்ற சொல்லின் பொருள் என்ன?

A) உருவாக்குதல்

B) உறுதி

C) கட்டினர்

D) தண்டனை

விளக்கம்: ஆக்கினை – தண்டனை.

இறைமகனான இயேசுபிரானை போந்தியு பிலாத்து என்னும் ஆளுநரின் முன் தனியாகக் கொண்டுபோய் நிறுத்தி அவருக்கு தண்டனை பெற்றுத் தர உறுதியாக இருந்தனர் என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிக பாடலின் பொருள் ஆகும்.

109) இரட்சணிய சரித படலம், இரட்சணிய யாத்திரிகத்தின் எந்த பருவத்தில் இடம்பெற்றுள்ளது?

A) குமார பருவம்

B) நிதான பருவம்

C) ஆரணிய பருவம்

D) இரட்சணிய பருவம்

விளக்கம்: இரட்சணிய யாத்திரகம் என்பது ஆதி பருவம், குமார பருவம், நிதான பருவம், ஆரணிய பருவம், இரட்சணிய பருவம் ஆகிய ஐந்து பருவங்களைக் கொண்டது. இக்காப்பியத்தின் குமார பருவத்தில் உள்ள இரட்சணிய சரித படலத்தில் இயேசுவின் இறுதிக்கால நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.

110) கருந்தடம் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?

A) உருவகம்

B) உவமைத்தொகை

C) பண்புத்தொகை

D) வினைத்தொகை

விளக்கம்: கருந்தடம் – பண்புத்தொகை.

கருந்தடம் – கருமைஸ்ரீதடம்.

பிரித்தால் ‘மை’ விகுதி வர வேண்டும். ஆன, ஆகிய போன்ற பண்புப்பெயர் விகுதிகளில் ஏதேனும் ஒன்று இடம்பெற வேண்டும். கருமையான தடம்.

111) விரிகடல் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?

A) பண்புத்தொகை

B) வினைத்தொகை

C) அன்மொழித்தொகை

D) உவமைத்தொகை

விளக்கம்: விரிகடல் – வினைத்தொகை

வினைத்தொகை – முக்காலத்திற்கும் உரியவாறு ஒருசொல்லை எழுத முடிந்தால், அது வினைத்தொகை எனப்படும்.

விரிகடல், விரியும் கடல், விரிந்த கடல்

112) அகத்தியர் மலை எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

A) திருநெல்வேலி

B) தூத்துக்குடி

C) விருதுநகர்

D) சிவகங்கை

விளக்கம்: ஆய் நாடு (ஆய் ஆண்டிரன்) – பொதிய மலை எனப்படும் மலை நாட்டுப் பகுதியாகும். தற்போது அகத்தியர் மலை என்றும் அழைக்கப்படுகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம், பாபநாசம் ஆகிய மலைப்பகுதிகளும் அதைச் சூழ்ந்துள்ள பகுதிகளுமாகும்.

113) வ.சுப.மாணிக்கம் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. தமிழின் சிறப்புகளைப் பற்றி ஆய்வுகள் பல செய்தமையால் ‘தமிழ் இமயம்’ என்று தமிழ் அறிஞர்களால் போற்றப்பட்டவர்.

2. ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்ற கொள்கையைப் பறைசாற்றுவதற்காகத் ‘தமிழ்வழிக் கல்வி இயக்கம்’ என்ற அமைப்பை நிறுவித் தமிழ்ச்சுற்றுலா மேற்கொண்டவர்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. தமிழின் சிறப்புகளைப் பற்றி ஆய்வுகள் பல செய்தமையால் ‘தமிழ் இமயம்’ என்று தமிழ் அறிஞர்களால் போற்றப்பட்டவர்.

2. ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்ற கொள்கையைப் பறைசாற்றுவதற்காகத் ‘தமிழ்வழிக் கல்வி இயக்கம்’ என்ற அமைப்பை நிறுவித் தமிழ்ச்சுற்றுலா மேற்கொண்டவர்.

114) வ.சுப.மாணிக்கம் எந்த பல்கலைகழகத்தில் துணைவேந்தராக செயலாற்றியபோது பல்கலைக்கழக நடைமுறைகள் தமிழில் இருக்க வேண்டும் என ஆணை பிறப்பித்தார்?

A) மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

B) அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

C) அழகப்பா பல்கலைக்கழகம்

D) பாரதியார் பல்கலைக்கழகம்

விளக்கம்: மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராகச் சிறப்புடன் செயலாற்றியபோது பல்கலைக்கழக நடைமுறைகள் தமிழில் இருக்க வேண்டும் என ஆணை பிறப்பித்ததுடன் அங்குத் தமிழாய்வு நடைபெறவும் வழிவகுத்தார்.

115) சொல்லாத நிந்தைமொழி சொல்லித்து ணிந்தியற்றும் – என்ற வரிகளில் நிந்தை என்ற சொல்லின் பொருள் என்ன?

A) தீமை

B) கெடுதல்

C) பழி

D) பாவம்

விளக்கம்: நிந்தை – பழி.

இறைமகனை இகழ்ந்து பேசியும் புறக்கணித்தும் வாயில் வந்தபடி சொல்லத் தகாத பழிமொழிகளை பொல்லாத யூதர்கள் கூறினர் என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிக பாடலின் பொருள் ஆகும்.

116) எந்த நூற்றாண்டில் ‘குறியீட்டியம்’ ஓர் இலக்கியக் கோட்பாடாக உருப்பெற்றது?

A) 17 ஆம் நூற்றாண்டு

B) 19 ஆம் நூற்றாண்டு

C) 20 ஆம் நூhற்றாண்டு

D) 18 ஆம் நூற்றாண்டு

விளக்கம்: மற்றொன்றை குறிப்பாக உணர்த்தும் பொருள் அல்லது சொல் குறியீடு’ எனப்படுகிறது. குறியீட்டால் பொருளை உணர்த்துவது குறியீட்டியம் எனப்படுகிறது. குறியீடு, பல துறைகளில் பயன்படுகிறது. 19ஆம் நூற்றாண்டில் ‘குறியீட்டியம்’ ஓர் இலக்கியக் கோட்பாடாக உருப்பெற்றது.

117) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க (சிறுபாணனின் பயணம்).

A) எயிற்பட்டினம் – மரக்காணம்

B) வேலூர் – உப்பு வேலூர்

C) ஆமூர் – நல்லாமூர்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: நல்லூர் – எயிற்பட்டினம் (மரக்காணம்) – வேலூர் (உப்பு வேலூர்) – ஆமூர் (நல்லாமூர்) – கிடங்கில் (திண்டிவனம்)

118) கைதுறுங் கோலினைக் கவர்ந்து கண்டகர் – இவ்வரியில் கண்டகர் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) எதிரிகள்

B) கொடியவர்கள்

C) குற்றமில்லாதவர்கள்

D) வலிமை வாய்ந்தவர்கள்

விளக்கம்: கண்டகர் – கொடியவர்கள்.

கொடுமனம் படைத்த அந்த முரடர்கள், இறைமகனுடைய கையிலிருந்து கோலினைப் பிடுங்கி எடுத்துக் கொண்டனர் என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிகப் பாடலின் பொருளாகும்.

119) தவறான ஒன்றை தெரிவு செய்க

A) காரி என்னும் வலிமைமிக்க குதிரையைக் கொண்ட காரி என்பவரை எதிர்த்து நின்று அஞ்சாமல் போரிட்டவர் – ஓரி

B) ஈகையின் பாரத்தைத் தாங்கி இழுத்துச் செல்லும் வலிமை உடையவர் – வள்ளல் குமணன்

C) ஓரி என்னும் வலிமைமிக்க குதிரையைத் தன்னிடத்தில் கொண்டவர் – ஓரி

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: காரி என்னும் வலிமைமிக்க குதிரையைக் கொண்ட காரி என்பவரை எதிர்த்து நின்று அஞ்சாமல் போரிட்டவர் – ஓரி

ஈகையின் பாரத்தைத் தாங்கி இழுத்துச் செல்லும் வலிமை உடையவர் – நல்லியக்கோடன்

ஓரி என்னும் வலிமைமிக்க குதிரையைத் தன்னிடத்தில் கொண்டவர் – ஓரி

120) பொருத்துக.

அ. வல்லானை – 1. பழி

ஆ. நிந்தை – 2. வலிமை வாய்தவரை

இ. பொல்லாங்கு – 3. தீமை

ஈ. மறங்கொள் – 4. முரட்டுத் தன்மையுள்ளவர்

A) 2, 1, 3, 4

B) 3, 1, 2, 4

C) 2, 3, 4, 1

D) 1, 2, 3, 4

விளக்கம்: வல்லானை – வலிமை வாய்ந்தவரை

நிந்தை – பழி

பொல்லாங்கு – கெடுதல், தீமை

மறங்கொள் – முரட்டுத் தன்மையுள்ளவர்.

121) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க

A) நாகு – நாவல் மரம்

B) குறும்பொறை – சிறு குன்று

C) மலைதல் – போரிடல்

D) கோடியர் – கூத்தர்

விளக்கம்: நாகு – இளமை.

……………………..நளிசினை

நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்து

செறிவான கிளைகளில் மணம் வீசும் மலர்கள் நிறைந்த, சுரபுன்னை மரங்கள் சூழ்ந்த சிறிய மலை நாட்டைக் கூத்தர்க்குப் பரிசாக வழங்கியவர் ஓரி என்னும் வள்ளல்.

122) கீழ்க்காணும் எது மயிலை சீனி வேங்கடசாமி-க்கு பொருந்தாதது ஆகும்?

A) கொங்டு நாட்டு வரலாறு

B) தமிழ்நாட்டு வரலாறு

C) இலங்கை வரலாறு

D) பல்லர் கால வரலாறு

விளக்கம்: மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய நூல்கள்:

1. சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள்

2. பழங்காலத் தமிழர் வணிகம்

3. களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

4. கொங்கு நாட்டு வரலாறு

5. தமிழ்நாட்டு வரலாறு – சங்ககாலம் (அரசியல்.)

மேலும் களப்பிரர் மற்றும் இலங்கை குறித்த வரலாறு ஆகியவற்றையும் எழுதினார்.

123) ‘கலை கலை’ என்று இப்போது கூறப்படுகிறதெல்லாம் சினிமாக்கலை, இசைக்கலைகள் பற்றியே, இலக்கியக்கலைகூட அதிகமாகப் பேசப்படுவதில்லை ஏனைய அழகுக்கலைகளைப் பற்றி அறவே மறந்துவிட்டனர் – என்று கூறியவர் யார்?

A) மயிலை சீனி.வேங்கடசாமி

B) நா.காமராசன்

C) நல்லூர் நத்தத்தனார்

D) ஐராவதம் மகாதேவன்

விளக்கம்: “தற்காலத்துத் தமிழ்ச் சமூகம் தனது பழைய அழகுக் கலைச்செல்வங்களை மறந்து, தன்பெருமை தான் அறியாச் சமூகமாக இருந்து வருகிறது. ‘கலை கலை’ என்று இப்போது கூறப்படுகிறதெல்லாம் சினமாக்கலை, இசைக்கலைகள் பற்றியே, இலக்கியக்கலைகள்கூட அதிகமாகப் பேசப்படுவதில்லை. ஏனைய அழகுக்கலைகளைப் பற்றி அவே மறந்து விட்டனர்” எனவே ‘தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் என்னும் நூல் எழுதப்பட்டது – மயிலை சீனி.வேங்கடசாமி.

124) கூற்றுகளை ஆராய்க.

1. ஜான் பன்யன் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய பில்கிரிம்ஸ் புரோகிரஸ் எனும் ஆங்கில நூலின் தழுவலாக இரட்சணிய மனோகரம் எழுதப்பட்டது.

2. இரட்சணிய யாத்திரிகம் 3766 பாடல்களைக் கொண்ட ஒரு பெரும் உருவகக் காப்பியம் ஆகும்

3. இரட்சணிய யாத்திரிகம் என்பது ஆதி பருவம், குமார பருவம், நிதான பருவம், ஆரணிய பருவம், இரட்சணிய பருவம் ஆகிய ஐந்து பருவங்களைக் கொண்டது.

4. இரட்சணிய யாத்திரிகத்தின் ஆசிரியர் எச்.ஏ.கிருட்டிணனார்.

A) 1 மட்டும தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) 4 மட்டும் தவறு

விளக்கம்: 1. ஜான் பன்யன் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய பில்கிரிம்ஸ் புரோகிரஸ் எனும் ஆங்கில நூலின் தழுவலாக இரட்சணிய யாத்திரிகம் எழுதப்பட்டது.

2. இரட்சணிய யாத்திரிகம் 3766 பாடல்களைக் கொண்ட ஒரு பெரும் உருவகக் காப்பியம் ஆகும்

3. இரட்சணிய யாத்திரிகம் என்பது ஆதி பருவம், குமார பருவம், நிதான பருவம், ஆரணிய பருவம், இரட்சணிய பருவம் ஆகிய ஐந்து பருவங்களைக் கொண்டது.

4. இரட்சணிய யாத்திரிகத்தின் ஆசிரியர் எச்.ஏ.கிருட்டிணனார்.

125) கூற்றுகளை ஆராய்க

1. சிறுபாணாற்றுப்படையை இயற்றியவர் நல்லூர் நத்தத்தனார்

2. இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று

3. இது ஓய்மாநாட்டு மன்னனான நல்லியக்கோடனைப் பாட்டுடைத் தலைவனாகக்கொண்டு 269 அடிகளில் எழுதப்பட்ட நூல்.

4. பரிசுபெற்ற பாணன் ஒருவன் தான் வழியில் கண்ட மற்றொரு பாணனை அந்த அரசனிடம் ஆற்றுப்படுத்துவதாக இது அமைந்துள்ளது.

A) 1, 3, 4 சரி

B) 1, 2, 4 சரி

C) 1, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. சிறுபாணாற்றுப்படையை இயற்றியவர் நல்லூர் நத்தத்தனார்

2. இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று

3. இது ஓய்மாநாட்டு மன்னனான நல்லியக்கோடனைப் பாட்டுடைத் தலைவனாகக்கொண்டு 269 அடிகளில் எழுதப்பட்ட நூல்.

4. பரிசுபெற்ற பாணன் ஒருவன் தான் வழியில் கண்ட மற்றொரு பாணனை அந்த அரசனிடம் ஆற்றுப்படுத்துவதாக இது அமைந்துள்ளது.

126) ஈந்த என்ற சொல்லின் பகுதி என்ன?

A) ஈந்து

B) ஈய்

C) ஈ

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: ஈந்த என்ற சொல்லின் பகுதி ஈ.

பகுதி: கட்டளைச்சொல்லாகவும், முழு தொழிலையும் குறிப்பதாகவும் இருக்க வேண்டும்.

ஈந்த – தந்த.

ஈ – தா

127) நன்மொழி என்ற சொல்லிற்கு பொருத்தமான ஒன்றை தெரிவு செய்க

A) தன்னொற்றிரட்டல்

B) முன்னின்ற மெய் திரிதல்

C) இனமிகல்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: நன்மொழி – நன்மைஸ்ரீமொழி

விதி: ஈறுபோதல் – நன்மொழி

128) ‘அறிமடமும் சான்றோர்க்கு அணி’ என்று குறிப்பிட்ட நூல் எது?

A) அகநானூறு

B) புறநானூறு

C) சிறுபாணாற்றுப்படை

D) பழமொழி நானுறு

விளக்கம்: முல்லைக் கொடி படரத் தேர் தந்த பாரியின் செயலும், மயிலுக்குத் தன் ஆடையைத் தந்த பேகனின் செலும் அறியாமையால் செய்யப்பட்டவையல்ல. இஃது அவர்களின் ஈகை உணர்வின் காரணமாகச் செய்யப்பட்டதேயாகும். இச்செயலே இவர்களின் பெருமைக்குப் புகழ் சேர்ப்பதாகிவிட்டது. இதையே, பழமெழி நானுறூறு, ‘அறிமடமும் சான்றோர்க்கு அணி’ என்று கூறுகிறது.

129) சங்ககாலப் பசும்பூண் பாண்டியன் தன் கொடியில் யானைச் சின்னத்தைக் கொண்டிருந்தான் என்ற செய்தி எந்த நூலில் காணப்படுகிறது?

A) புறநானூறு

B) முத்தொள்ளாயிரம்

C) அகநானூறு

D) சிலப்பதிகாரம்

விளக்கம்: சங்ககாலப் பசும்பூண் பாண்டியன் தன் கொடியில் யானைச் சின்னத்தைக் கொண்டிருந்தான் என்ற செய்தி அகநானூற்றில் (162) இருப்பதை முதன் முதலில் அறிந்து வெளிப்படுத்தியவர் மயிலை சீனி.வேங்கடசாமி ஆவார்.

130) சாந்தா தத் என்பவர் எந்த மாத இதழின் ஆசிரியராக உள்ளார்?

A) நிறை

B) கோடை

C) மழை

D) திசை

விளக்கம்: சாந்தா தத் என்பவர் ஹைதராபாத்தில் வெளியாகும் ‘நிறை’ மாத இதழின் ஆசிரியராக உள்ளார். இவர் தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.

131) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க

A) வாய்த்த

B) உவப்ப

C) கொடுத்த

D) கவாஅன்

விளக்கம்: வாய்த்த, உவப்ப, கொடுத்த, ஈந்த – பெயரெச்சங்கள்

கவாஅன் – செய்யுளிசை அளபெடை

132) இராட்சணிய யாத்திரிகம் எத்தனை பாடல்களைக் கொண்ட காப்பியம்?

A) 1377

B) 3777

C) 3677

D) 3766

விளக்கம்: இரட்சணிய யாத்திரிகம் 3677 பாடல்களைக் கொண்ட ஒரு பெரும் காப்பியம் ஆகும்.

133) பாசம்என உன்னலிர் பிணித்தமை பகைத்த – என்ற வரியில் உன்னலிர் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) உண்ணாதீரகள்

B) எண்ணாதீர்கள்

C) ஆராய்ந்து பாருங்கள்

D) அன்பு

விளக்கம்: உன்னலிர் – எண்ணாதீர்கள்

மேற்காணும் வரிகள் இடம்பெற்ற நூல் இரட்சணிய யாத்திரிகம் ஆகும். இறைமகன் தன்னைப் பிறர் கயிற்றால் கட்டும்போது அதற்கு உடன்பட்டு நின்றார். அச்செயலானது, இயல்பாக மனிதர்களிடம் காணப்படுகிற சாதாரண அன்புச்செயல் என்று கருத வேண்டியதில்லை என்பது மேற்காணும் வரியின் பொருள்.

134) பொருத்துக.

அ. களைந்து – 1. உடுத்தினர்

ஆ. சேர்த்தினர் – 2. தலையில்

இ. சிரத்து – 3. கழற்றி

ஈ. பெய்தனர் – 4. வைத்து அழுத்தினர்

A) 3, 1, 2, 4

B) 3, 4, 2, 1

C) 3, 2, 4, 1

D) 1, 2, 3, 4

விளக்கம்: களைந்து – கழற்றி

சேர்த்தினர் – உடுத்தினர்

சிரத்து – தலையில்

பெய்தனர் – வைத்து அழுத்தினர்.

135) சிறுபாணாற்றுப்படை காட்டும் பாட்டுடைத்தலைவனின் இன்றைய நிலப்பகுதி எது?

A) உதகமண்டலம்

B) விழுப்புரம்

C) திண்டிவனம்

D) தருமபுரி

விளக்கம்: சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவர் ஓய்மா நாட்டு மன்னனான நல்லியக்கோடன் ஆவார். திண்டிவனத்தைச் சார்ந்தது ஓய்மா நாடு என அழைக்கப்பட்ட நிலப்பகுதி ஆகும்.

136) முதிர மலையை ஆட்சி செய்த வள்ளல் யார்?

A) பேகன்

B) குமணன்

C) பாரி

D) நள்ளி

விளக்கம்: புறநானூறு குறிப்பிடும் வள்ளல் குமணன். இவர் முதிர மலையை (பழனி மலைத்தொடர்களில் ஒன்று). ஆட்சி செய்த குறுநில மன்னனாவார்.

137) குமணனை நாடிப் பரிசில் பெற வந்தவர் யார்?

A) இளங்குமணன்

B) பெருந்தலைச் சாத்தனார்

C) நத்தத்தனார்

D) மேற்காணும் யாருமில்லை

விளக்கம்: குமணன், தன் தம்பியாக இளங்குமணனிடம் நாட்டைக் கொடுத்துவிட்டுக் காட்டில் மறைந்து வாழ்ந்தார். இளங்குமணன் தன் அண்ணனின் தலையைக் கொய்து தருவோர்க்குப் பரிசில் அறிவித்திருந்தான். அப்போது தன்னை நாடிப் பரிசில் பெற வந்த பெருந்தலைச் சாத்தனார் எனும் புலவர்க்குக் கொடுப்பதற்குத் தன்னிடம் பொருள் இல்லாமையால், தன் இடையிலுள்ள உறைவாளைத் தந்து, “தன் தலையை அரிந்து சென்று, இளங்குமணனிடம் கொடுத்துப் பரிசில் பெற்றுச் செல்லுமாறு” கேட்டுக்கொண்டார். இதனால் இவர் ‘தமிழுக்குத் தலை கொடுத்த குமண வள்ளல்’ என்று போற்றப்படுகிறார்.

138) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.

A) வாலுளை – வெண்மையான ஆட்டம்

B) மால்வரை – பெரியமலை (கரிய மலையுமாம்)

C) கரவாது – மறைக்காது

D) துஞ்சு – அஞ்சு

விளக்கம்: துஞ்சு என்றால் தங்கு என்று பொருள்.

‘துளிமழைபொழியும்வளிதுஞ்சு நெடுங்கோட்டு’

மழைக்காற்று எப்போதும் இருக்கக்கூடிய உயர்ந்த மலை நாட்டை உடையவர் – நள்ளி.

139) “தமிழ்ப்பற்று முன்னோர்வழியாக எனக்குக் கிடைத்த சீதனம். எங்கள் வீட்டில் இராமாயணம், மகாபாரதம் போன்றவையும் ஏட்டுச்சுவடிகளும் நிறைய இருந்தன” – என்று கூறியவர் யார்?

A) திரு.வி.க

B) மயிலை.சீனி வேங்கடசாமி

C) உ.வே.சா

D) கோவிந்தராசன்

விளக்கம்: “தமிழ்ப்பற்று முன்னோர்வழியாக எனக்குக் கிடைத்த சீதனம். எங்கள் வீட்டில் இராமாயணம், மகாபாரதம் போன்றவையும் ஏட்டுச்சுவடிகளும் நிறைய இருந்தன. ஏட்டுச்சுவடிகளை எடுத்துப் புரட்டிப் பார்த்தேன். எதுவும் புரியாது. பின்னால் இவற்றையெல்லாம் படித்து ஆராய வேண்டும் என்னும் எண்ணம் எழும். பின்னால் நான் செய்யப் புகுந்த இலக்கிய வரலாற்றுக் கல்வெட்டு ஆராய்ச்சிகளுக்கு அன்றே என் மனத்தில் வித்தூன்றிவிட்டேன் – மயிலை சீனி. வேங்கடசாமி

140) பறம்பு மலை எந்த மாவட்டத்தில் உள்ளது?

A) திருநெல்வேலி

B) தூத்துக்குடி

C) விருதுநகர்

D) சிவகங்கை

விளக்கம்: பாரியின் நாடு: பறம்பு மலையும், அதைச் சூழ்ந்திருந்த முந்நூறு ஊர்களும் ஆகும். பறம்பு மலையே பிறம்பு மலையாகி, தற்போது பிரான்மலை எனப்படுகிறது. இம்மலை சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ளது.

141) வ.சுப.மாணிக்கம் என்பவர் கீழ்க்காணும் எந்த தலைப்பில் ஆங்கிலத்தில் ஆய்வு மேற்கொண்டார்?

A) தமிழ் இலக்கண வரலாறும் வளர்ச்சியும்

B) தமிழ் அறிஞர்கள் வரலாறும் வளர்ச்சியும்

C) தமிழ் எழுத்துக்கள் வரலாறும் வளர்ச்சியும்

D) தமிழ் யாப்பியல் வரலாறும் வளர்ச்சியும்

விளக்கம்: திருவனந்தபுரத்தின் திராவிட மொழியியல் கழகத்தில் முதுபேராய்வாளராகப் பணிபுரிந்தபோது ‘தமிழ் யாப்பியல் வரலாறும் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

142) மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய நூல்களில் அவரின் அரிய ஆவணப்பணிகளில் ஒன்றாக கருதப்படும் நூல் எது?

A) சாசனச் செய்யுள் மஞ்சரி

B) மறைந்துபோன தமிழ்நூல்கள்

C) பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம்

D) தமிழ் இலக்கிய வரலாறு

விளக்கம்: தமிழுக்குத் தேவையான பல்வேறு ஆவணங்களை தொகுத்து ஆய்வு செய்யும் பணியை மயிலை சீனி.வேங்கடசாமி மேற்கொண்டார். இப்பணியின் விளைவாக, சாசனச் செய்யுள் மஞ்சரி, மறைந்துபோன தமிழ்நூல்கள் ஆகிய நூல்களை எழுதினார். இவருடைய, பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் என்னும் நூல் ஒவ்வொரு நூற்றாண்டையும் எவ்வகையில் ஆவணப்படுத்துவது என்பதற்கான முன்னோடி நூல் எனலாம். ‘மறைந்துபோன தமிழ்நூல்கள்’ என்னும் நூல் அவரின் அரிய ஆவணப்பணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

143) …கறங்குமணி

வாலுளைப் புரவியொடு வையகம் மருள – என்ற வரியில் புரவி என்ற சொல்லின் பொருள் என்ன?

A) யானை

B) வாள்

C) குதிரை

D) மலை

விளக்கம்: புரவி என்றால் குதிரை என்று பொருள். பரி என்றாலும் குதிரை என்று பொருள்.

144) முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கை – என்ற வரியில் தடக்கை என்ற சொல்லின் பொருள் என்ன?

A) நீண்ட கை

B) தங்கை

C) உறவினர்

D) போர் கருவி

விளக்கம்: தடக்கை – நீண்ட கை.

நள்ளி – நட்புக் கொண்டவர் உள்ளம் மகிழ்ச்சி அடையுமாறு இனிய வாழ்விற்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் குறிப்பறிந்து வழங்கும் பெரிய கைகளை உடையவர்.

145) துளிமழைபொழியும்வளிதுஞ்சு நெடுங்கோட்டு – என்ற வரியில் நெடுங்கோடு என்ற சொல்லின் பொருள் என்ன?

A) பெரிய வாள்

B) பெரிய கை

C) பெரிய மலை

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: நெடுங்கோடு – பெரிய மலை.

நள்ளி – காலந்தவறாமல் பெய்யும் மழை போன்றவன். போர்த் தொழிலில் வல்லமையுடையவன். மழைக்காற்று எப்போதும் இருக்கக்கூடிய உயர்ந்த மலை நாட்டை உடையவன்.

146) மூன்றாம் நந்திவர்மன் பற்றி தமிழில் முதன் முதலாக நூல் எழுதியவர் யார்?

A) மயிலை சீனி.வேங்கடசாமி

B) சுகந்தி சுப்பிரமணியம்

C) சந்திராதத்

D) ஐராவதம் மகாதேவன்

விளக்கம்: மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் ஆகியோர் குறித்த நூல்களைத் தொடர்ந்து மூன்றாம் நந்திவர்மன் என்னும் பல்லவ மன்னனைப் பற்றியும் மயிலை சீனி.வேங்கடசாமி எழுதினார்.

147) இந்த

ஆதிரைப் பருக்கைகள்

வீழ்ந்ததும்

பூமிப்பாத்திரம்

அமுதசுரபி – என்ற வரியில் அமுதசுரபி எதற்கு குறியீடாகிறது?

A) செழிப்பு

B) வியர்வைத் துளி

C) திட்டம்

D) பயனற்ற விளைவு

விளக்கம்: ஆதிரையிட்ட பருக்கையினால் அமுதசுரபியில் உணவு வளர்ந்துகொண்டே இருந்தது போல் உழைப்பால் உலகம் செழித்து வளர்கிறது என்ற கருத்து மேற்காணும் பாடலில் புலப்படுத்தப்படுகிறது. வியர்வைத்துளிக்கு ஆதிரைப் பருக்கை குறியீடாகிறது. செழிப்புக்கு அமுதசுரபி குறியீடாகிறது.

148) வள்ளல் குமணன் பற்றி கீழ்க்காணும் எந்த புறநானூற்று பாடல் குறிப்பிடவில்லை?

A) 159

B) 158

C) 164

D) 167

விளக்கம்: புறநானூறு 158-164, 165 ஆகிய பாடல்களில் வள்ளல் குமணரைப் பற்றி குறிப்பிடுகிறது.

149) தமிழுக்குப் புதிய சொல்லாங்கங்களையும் உவமைகளையும் உருவாக்கித் தருவதில் தனி ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தவர் யார்?

A) பாரதியார்

B) நா.காமராசன்

C) புலவர் குழந்தை

D) வ.சுப.மாணிக்கம்

விளக்கம்: தமிழுக்குப் புதிய சொல்லாங்கங்களையும் உவமைகளையும் உருவாக்கித் தருவதில் தனி ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தவர் வ.சுப.மாணிக்கம் ஆவார்.

150) கூற்று: “தமிழுக்குத் தலை கொடுத்த குமண வள்ளல்” என்று வள்ளல் குமணன் போற்றப்படுகிறார்

காரணம்: தமிழை தலையெனக் கருதி அதற்கு தொண்டு செய்தார்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

விளக்கம்: குமணன், தன் தம்பியாக இளங்குமணனிடம் நாட்டைக் கொடுத்துவிட்டுக் காட்டில் மறைந்து வாழ்ந்தார். இளங்குமணன் தன் அண்ணனின் தலையைக் கொய்து தருவோர்க்குப் பரிசில் அறிவித்திருந்தான். அப்போது தன்னை நாடிப் பரிசில் பெற வந்த பெருந்தலைச் சாத்தனார் எனும் புலவர்க்குக் கொடுப்பதற்குத் தன்னிடம் பொருள் இல்லாமையால், தன் இடையிலுள்ள உறைவாளைத் தந்து, “தன் தலையை அரிந்து சென்று, இளங்குமணனிடம் கொடுத்துப் பரிசில் பெற்றுச் செல்லுமாறு” கேட்டுக்கொண்டார். இதனால் இவர் ‘தமிழுக்குத் தலை கொடுத்த குமண வள்ளல்’ என்று போற்றப்படுகிறார்.

151) திருந்திய என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?

A) பெயரெச்சம்

B) வினையெச்சம்

C) பண்புத்தொகை

D) ஏவல் பன்மை வினைமுற்று

விளக்கம்: திருந்திய – பெயரெச்சம்

ஒரு சொல் முற்று பெறாமல் இருந்தால் அது எச்சம் எனப்படும்.

ஒரு சொல்லின் கடைசி எழுத்து ‘அ’ என முடிந்தால் அது பெயரெச்சம் எனப்படும். திருந்திய – ய – ய்ஸ்ரீஅ.

முற்று பெறாமல் உள்ள ஒரு சொல்லுடன் பெயர்ச் சொல்லை சேர்க்கும் போது பொருள் தர வேண்டும். திருந்திய மாணவன்.

152) ஈர நன்மொழி இரவலர்க்கு ஈந்த – என்ற வரிக்குப் பொருத்தமானவர் யார்?

A) காரி

B) ஓரி

C) பாரி

D) ஆய்

விளக்கம்: மேற்காணும் வரியுடன் தொடர்புடையவர் காரி என்னும் வள்ளல் ஆவார். இவர் இனிய மொழிகளுடன் இரவலர்க்கு இல்லையென்னாமல் கொடுப்பவர் ஆவார்.

153) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க

A) நீலம் – நீலமணி

B) நிழல் – ஒளிவீசும்

C) மருள – வியக்க

D) சாவம் – அம்பு

விளக்கம்: சாவம் என்றால் வில் என்ற பொருளை தரும்.

“சாவங் தாங்கிய, சந்துபுலர் திணிதோள்”

ஆய் – என்னும் வள்ளல் வில் ஏந்தியவன், சந்தனம் பூசி உலர்ந்த தோள்களை உடையவர்.

154) ஆலமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த – என்ற வரியில் ஆலமர் செல்வர் என்று குறிப்பிடப்படுபவர் யார்?

A) சிவபெருமான்

B) விஷ்ணு

C) பிரம்மா

D) மேற்காணும் அனைவரும்

விளக்கம்: ஆலமர் செல்வர் – சிவபெருமான்.

ஒளிமிக்க நீல வண்ணக் கல்லையும் நாகம் கொடுதத் ஆடையினையும் மன விருப்பம் கொண்டு ஆலின்கீழ் அமர்ந்த இறைவனுக்குக் கொடுத்தவர் ஆய் என்னும் வள்ளல்.

155) உரனுடை – என்ற சொல்லிற்கு பொருத்தமான விதியை தேர்வு செய்க

A) உயிர்வரின் உக்குரல் மெய்விட்டோடும்

B) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே

C) தனிக்குறில் முன் ஒற்றுவரின் இரட்டும்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: உரனுடை – உரன்ஸ்ரீஉடை

விதி: ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ – ‘உரனுடை’

156) உரவுச்சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல் – என்ற வரியில் உரவு என்ற சொல்லின் பொருள் என்ன?

A) நட்பு

B) உறவினர்

C) வலிமை

D) கடல்

விளக்கம்: உரவு – வலிமை.

வலிமையும் சினமும் ஒளியும்மிக்க வேலினை உடையவர், கடல்போன்று ஒலிக்கும் படையினiயும் உடையவர் – அதியமான்.

157) …………….கரவாது

நட்டோர் உவப்ப நடைப் பரிகாரம் – என்ற வரியில் நட்டோர் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) நட்பு கொண்டோர்

B) நெருங்கியோர்

C) உறவினர்

D) மேற்காணும் அனைவரும்

விளக்கம்: நட்டோர் – நட்புகொண்டோர்.

நள்ளி என்னும் வள்ளல், தன்னிடம் உள்ள பொருட் செல்வத்தை இல்லையென்னாது நட்புக் கொண்டவர் உள்ளம் மகிழ்ச்சி அடையுமாறு இனிய வாழ்விற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் குறிப்பறிந்து வழங்கும் பெரிய கைகளை உடையவர்.

158) மயிலை சீனி.வேங்கடசாமி எப்போது பிறந்தார்?

A) 1900

B) 1903

C) 1905

D) 1910

விளக்கம்: மயிலை சீனி. வேங்கடசாமி 16.12.1900 ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் பிறந்தார். இன வரலாற்றை இலக்கியம், தொல்லியல், கல்வெட்டு, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தரவுகளைத் தேடி எழுதிய ஆளுமைகளில் முக்கியமானவர்.

159) அகத்தியர் மலை கீழ்க்காணும் எந்த வள்ளல் – உடன் தொடர்புடையது?

A) ஆய்

B) நள்ளி

C) பேகன்

D) அதியமான்

விளக்கம்: ஆய் நாடு (ஆய் ஆண்டிரன்) – பொதிய மலை எனப்படும் மலை நாட்டுப் பகுதியாகும். தற்போது அகத்தியர் மலை என்றும் அழைக்கப்படுகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம், பாபநாசம் ஆகிய மலைப்பகுதிகளும் அதைச் சூழ்ந்துள்ள பகுதிகளுமாகும்.

160) அதியமான எந்த பகுதியில் இருந்து பறித்து வந்த நெல்லிக்கனியை ஒளவைக்கு கொடுத்தார்?

A) நெல்லிக்காய் பட்டிணம்

B) பூரிக்கால்

C) தகடூர்

D) நெல்லித் தோட்டம்

விளக்கம்: அதியமான் நாடு (அதிகமான் நெடுமான் அஞ்சி): தகடூர்’ என்றழைக்கப்பட்ட தருமபுரியைத் தலைநகராகக் கொண்டு விளங்கிய பகுதி. இப்பகுதியில் உள்ள ‘பூரிக்கல்’ மலைப்பகுதியில் இருந்து பறித்து வந்த நெல்லிக்கனியையே ஒளவையாருக்கு அதிகமான் கொடுத்தாகக் கூறப்படுகிறது.

161) தற்போது ஊட்டி என்று அழைக்கப்படும் மலை எந்த வள்ளலுடன் தொடர்புடையது?

A) பேகன்

B) நள்ளி

C) ஆய்

D) பாரி

விளக்கம்: நள்ளியின் நாடு (நளிமலை நாடன்): நெடுங்கோடு மலை முகடு என்றழைக்கப்பட்ட பகுதி. தற்போது உதகமண்டலம் ‘ஊட்டி’ என்று கூறப்படுகறது.

162) கூற்று: ‘தமிழ் இமயம்’ என்று போற்றப்பட்டவர் – வ.சுப. மாணிக்கம்

காரணம்: தமிழின் சிறப்புகளைப் பற்றி ஆய்வுகள் பல செய்தார்

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: தமிழின் சிறப்புகளைப் பற்றி ஆய்வுகள் பல செய்தமையால் ‘தமிழ் இமயம்’ என்று தமிழ் அறிஞர்களால் போற்றப்பட்டவர் வ.சுப.மாணிக்கம் ஆவார்.

163) தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் என்ற நூலை எழுதியவர் யார்?

A) மயிலை சீனி.வேங்கடசாமி

B) சிபி கே.சாலமன்

C) கி.வ.ஜகந்நாதன்

D) புலவர் சே.சுந்தரராசன்

விளக்கம்: தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் – மயிலை சீனி. வேங்கடசாமி

மாறுபட்டுச் சிந்திக்கலாமா? – சிபி.கே. சாலமன்

எழு பெருவள்ளல்கள் – கி.வ.ஜகந்நாதன்

இரட்சணிய யாத்திரிகம் – புலவர் சே.சுந்தரராசன்

164) தானே தனியொருவனாக இருந்து ஈகையின் பாரத்தைத் தாங்கி இழுத்துச் செல்லும் வலிமை உடையவர் யார்?

A) வள்ளல் குமணன்

B) வள்ளல் பாரி

C) நல்லியக்கோடன்

D) வள்ளல் அதிமான்

விளக்கம்: ஏழு வள்ளல்கள் ஈகை என்னும் பாரத்தை இழுத்துச் சென்றனர். ஆனால் நல்லியக்கோடன், தானே தனியொருவனாக இருந்து அந்த ஈகையின் பாரத்தைத் தாங்கி இழுத்துச் செல்லும் வலிமை உடையவர்.

165)……………………..நளிசினை

நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்து – என்ற வரியில் போது என்ற சொல்லின் பொருள் என்ன?

A) பொழுது

B) மலர்

C) மரக்கிளை

D) மரம்

விளக்கம்: போது – மலர்.

செறிவான கிளைகளில் மணம் வீசும் மலர்கள் நிறைந்த, சுரபுன்னை மரங்கள் சூழ்ந்த சிறிய மலை நாட்டைக் கூத்தர்க்குப் பரிசாக வழங்கியவர் ஓரி என்னும் வள்ளல்.

166) மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் அறியாத மொழி எது?

A) மலையாளம்

B) சமஸ்கிருதம்

C) பாலி

D) தெலுங்கு

விளக்கம்: மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், பாலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பயிற்சியுடையவர். எனவே, மகேந்திரவர்மன் இயற்றிய ‘மத்த விலாசம்’ என்ற நாடக நூலை ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கியுள்ளார்.

167) கீழ்க்காணும் எந்த நூல் மயிலை சீனி.வேங்கடசாமியின் மீட்டுருவாக்க முயற்சிக்குச் சான்றாகும்?

A) கொங்கு நாட்டு வரலாறு

B) தமிழ்நாட்டு வரலாறு

C) இலங்கை வரலாறு

D) களப்பிரர் வரலாறு

விளக்கம்: ஆய்வுலகில் மயிலை சீனி.வேங்கடசாமியின் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கூற வேண்டுமானால் தமிழக வரலாற்றினைப் பல கோணங்களில் மீட்டுருவாக்கம் செய்ததைக் குறிப்பிடலாம். ‘தமிழ்நாட்டு வரலாறு’ என்னும் நூல் இவருடைய மீட்ருவாக்க முயற்சிக்குச் சரியான சான்றாகும்.

168) கீழ்க்காணும் எந்த நூலை மயிலை சீனி.வேங்கடசாமி எழுதவில்லை?

A) சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள்

B) பழங்காலத் தமிழர் வணிகம்

C) களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

D) தொண்டை நாட்டு வரலாறு

விளக்கம்: மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய நூல்கள்:

1. சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள்

2. பழங்காலத் தமிழர் வணிகம்

3. களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

4. கொங்கு நாட்டு வரலாறு

5. தமிழ்நாட்டு வரலாறு – சங்ககாலம் (அரசியல்).

169) மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய நூல்களில் ஒவ்வொரு நூற்றாண்டையும் எவ்வகையில் ஆவணப்படுத்துவது என்பதற்கான நூல் எது?

A) சாசனச் செய்யுள் மஞ்சரி

B) மறைந்துபோன தமிழ்நூல்கள்

C) பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம்

D) தமிழ் இலக்கிய வரலாறு

விளக்கம்: தமிழுக்குத் தேவையான பல்வேறு ஆவணங்களையும் தொகுத்து ஆய்வு செய்யும் பணியை மயிலை சீனி.வேங்கடசாமி மேற்கொண்டார். இப்பணியின் விளைவாக, சாசனச் செய்யுள் மஞ்சரி, மறைந்துபோன தமிழ்நூல்கள் ஆகிய நூல்களை எழுதினார். இவருடைய, பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் என்னும் நூல் ஒவ்வொரு நூற்றாண்டையும் எவ்வகையில் ஆவணப்படுத்துவது என்பதற்கான முன்னோடி நூல் எனலாம்.

170) எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம் – என்ற வரியில் நுகம் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) உலகம்

B) பாரம்

C) செறிவு

D) நுன்மை

விளக்கம்: நுகம் – பாரம். ஏழு வள்ளல்கள் ஈகை என்னும் பாரத்தை இழுத்துச் சென்றனர். ஆனால் நல்லியக்கோடன், தானே தனியொருவனாக இருந்து அந்த ஈகையின் பாரத்தைத் தாங்கி இழுத்துச் செல்லும் வலிமை உடையவர்.

171) சாந்தா தத் என்பவரின் எந்த சிறுகதை ‘இலக்கியச் சிந்தனை’ அமைப்பின் சிறந்த சிறுகதைக்கான விருதைப் பெற்றது?

A) கோடை மழை

B) நிறை

C) திசை எட்டும்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: சாந்தா தத் என்பவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண்படைப்பாளர். அமுதசுரபியில் வெளியான ‘கோடைமழை’ என்னும் சிறுகதை ‘இலக்கியச் சிந்தனை’ அமைப்பின் சிறந்த சிறுகதைக்கான விருதைப் பெற்றது.

172) மத்தவிலாசம் என்னும் நூலை எழுதியவர் யார்?

A) இராஜசிம்மன்

B) மகேந்திரவர்மன்

C) இராஜேந்திரன்

D) அவனிசிம்மன்

விளக்கம்: மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், பாலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பயிற்சியுடையவர். எனவே, மகேந்திரவர்மன் இயற்றிய ‘மத்த விலாசம்’ என்ற நாடக நூலை ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கியுள்ளார்.

173) ‘பொதினி’ என்றழைக்கப்படும் மலை கீழ்க்காணும் எந்த வள்ளலுக்கு உரியது?

A) பேகன்

B) அதியமான்

C) பாரி

D) நள்ளி

விளக்கம்: பேகனின் ஊரான ஆவினன் ‘பொதினி’ என்றழைக்கப்பட்டு, தற்போது பழனி எனப்படுகிறது. பழனி மலையும் அதைச் சுற்றிய மலைப்பகுதிகளும் பேகனது நாடாகும்.

174) சுரும்பு உண

நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச். என்ற வரியில் சுரும்பு என்ற சொல்லின் பொருள் என்ன?

A) நாகப்பாம்பு

B) வண்டு

C) ஆடை

D) ஒலிக்கும்

விளக்கம்: சுரும்பு – வண்டு.

சுரும்பு உண

நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச்.

வண்டுகள் உண்ணும் வண்ணம் நல்ல தேனை மிகுதியாகக் கொண்ட சுரபுன்னை என்பது மேற்காணும் வரியின் பொருளாகும்.

175) ‘மறைந்து போன தமிழ்நூல்கள்’ பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க

A) இந்நூல் மயிலை சீனி.வேங்கடசாமியின் அரிய ஆவணப்பணிகளில் ஒன்றாகும்

B) இந்நூல் தமிழ் மறுமலர்ச்சிக்குப் பெரும் ஊக்கம் அளிப்பதாக அமைந்தது

C) இந்நூல் மயிலை சீனி.வேங்கடசாமியின் மீட்டுருவாக்க முயற்சிக்குச் சரியான சான்றாகும்.

D) பரந்த தமிழ் இலக்கிய, இலக்கணப் பரப்பில் உறைந்திருந்த செய்திகளைத் தொகுத்து மறைந்துபோன 333 நூல்கள் தொடர்பானது.

விளக்கம்: இந்நூல் மயிலை சீனி.வேங்கடசாமியின் அரிய ஆவணப்பணிகளில் ஒன்றாகும்

இந்நூல் தமிழ் மறுமலர்ச்சிக்குப் பெரும் ஊக்கம் அளிப்பதாக அமைந்தது

பரந்த தமிழ் இலக்கிய, இலக்கணப் பரப்பில் உறைந்திருந்த செய்திகளைத் தொகுத்து மறைந்துபோன 333 நூல்கள் தொடர்பானது.

மயிலை சீனி.வேங்கடசாமியின் மீட்டுருவாக்க முயற்சிக்குச் சரியான சான்று – ‘தமிழ்நாட்டு வரலாறு.

176) வானம் வாய்த்த வளமலைக் கவாஅன் – இவ்வரியில் குறிப்பிடும் வளமலை எது?

A) பொதியமலை

B) பறம்பு மலை

C) பொதினி மலை

D) பழநி மலை

விளக்கம்: வளமலை – வளமான மலை (மலைநாடு) இன்று பழநி மலை என்று அழைக்கப்படுகிறது. பருவம் பொய்க்காமல் மழை பெய்யும் வளமலையில் வாழும் மயிலுக்குப் பேகன் (அது குளிரால் நடுங்கும் என்று எண்ணித் தன் மனத்தில் சுரந்த அருளினால்) தன்னுடைய ஆடையைக் கொடுத்தார் என்பது மேற்காணும் செய்யுள் வரி உணர்த்தும் பொருளாகும்.

177) காரியின் நாடு கீழ்க்காணும் எந்த மாவட்டத்தில் உள்ளது?

A) விழுப்புரம்

B) தூத்துக்குடி

C) விருதுநகர்

D) சிவகங்கை

விளக்கம்: காரி (மலையமான் திருமுடிக்காரி): மலையமான் நாடு என்பதாகும். இது மருவி ‘மலாடு’ எனப்பட்டது. இது விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருக்கோவிலூரும் (திருக்கோயிலூர்) அதைச் சூழ்ந்துள்ள பகுதிகளுமாகும்.

178) ஏழையென – என்ற சொல்லின் வந்துள்ள விதி எதுஃஎவை?

A) இ ஈ ஐ வழியவ்வும்

B) உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே

C) A மற்றும் B

D) உயிர்வரின் உக்குரல் மெய்விட்டோடும்

விளக்கம்: ஏழையென – ஏழைஸ்ரீஎன

விதி: இ ஈ ஐ வழியவ்வும் – ஏழைஸ்ரீய்ஸ்ரீஎன

விதி: உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே – ஏழையென.

179) …நளிசினை

நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்து – என்ற வரியில் நாகு என்ற சொல்லின் பொருள் என்ன?

A) இளமை

B) மலர்

C) நாவல் மரம்

D) அரசன்

விளக்கம்: நாகு – இளமை.

செறிவான கிளைகளில் மணம் வீசும் மலர்கள் நிறைந்த, சுரபுன்னை மரங்கள் சூழ்ந்த சிறிய மலை நாட்டைக் கூத்தர்க்குப் பரிசாக வழங்கியவர் ஓரி என்னும் வள்ளல்.

180) கொல்லி மலை எந்த மாவட்டத்தில் உள்ளது?

A) விழுப்புரம்

B) நாமக்கல்

C) தருமபுரி

D) வேலூர்

விளக்கம்: ஓரியின் நாடு (வல்வில் ஓரி) – நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ‘கொல்லி மலையும்’ அதைச் சூழ்ந்துள்ள பல ஊர்களும் ஆகும்.

ஓய்மா நாட்டு, நல்லியக்கோடனது நாடு

திண்டிவனத்தைச் சார்ந்தது ஓய்மா நாடு என அழைக்கப்பட்ட நிலப்பகுதி ஆகும்.

181) பொருத்துக.

அ. ஆய் – 1. அகத்தியர் மலை

ஆ. ஓரி – 2. கொல்லி மலை

இ. நல்லியக்கோடன் – 3. ஓய்மா நாடு

ஈ. காரி – 4. மலாடு

A) 1, 2, 3, 4

B) 2, 1, 4, 3

C) 4, 3, 1, 2

D) 4, 3, 2, 1

விளக்கம்: ஆய் – அகத்தியர் மலை

ஓரி – கொல்லி மலை

நல்லியக்கோடன் – ஓய்மா நாடு

காரி – மலாடு

182) பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலை எழுதியவர் யார்?

A) மா.இராசமாணிக்கனார்

B) சிபி.கே.சாலமன்

C) கி.வ.ஜகந்நாதன்

D) புலவர் சே.சுந்தரராசன்

விளக்கம்: பத்துப்பாட்டு ஆராய்ச்சி – மா.இராசமாணிக்கனார்

மாறுபட்டுச் சிந்திக்கலாமா? – சிபி.கே.சாலமன்

எழு பெருவள்ளல்கள் – கி.வ.ஜகந்நாதன்

இரட்சணிய யாத்திரிகம் – புலவர் சே.சுந்தரராசன்

183) சிறுபாணனின் பயணம் பற்றியதில் சரியானதை தேர்வு செய்க.

A) நல்லூர் – வேலூர் – ஆமூர் – எயிற்பட்டினம் – கிடங்கில்

B) நல்லூர் – எயிற்பட்டினம் – வேலூர் – ஆமூர் – கிடங்கில்

C) நல்லூர் – ஆமூர் – எயிற்பட்டினம் – வேலூர் – கிடங்கில்

D) நல்லூர் – எயிற்பட்டினம் – ஆமூர் – வேலூர் – கிடங்கில்

விளக்கம்: நல்லூர் – எயிற்பட்டினம் (மரக்காணம்) – வேலூர் (உப்பு வேலூர்) – ஆமூர் (நல்லாமூர்) – கிடங்கில் (திண்டிவனம்).

184) தமிழைப் பொறுத்தவரை குறியீட்டைப் பயன்படுத்தும் முறை யாருடைய காலம் முதல் இருந்து வருகிறது?

A) கம்பர்

B) திருவள்ளுவர்

C) தொல்காப்பியர்

D) ஒட்டக்கூத்தர்

விளக்கம்: 19ஆம் நூற்றாண்டில் ‘குறியீட்டியம்’ ஓர் இலக்கியக் கோட்பாடாக உருப்பெற்றது. பொதலர், ரைம்போ, வெர்லேன், மல்லர்மே முதலானவர்கள் இக்கோட்பாட்டை விளக்கி வளர்த்தார்கள். குறியீடு பற்றிய கொள்கை 19ஆம் நூற்றாண்டில் தோன்றினாலும் அனைத்து மொழி இலக்கியங்களிலும் குறியீட்டைப் பயன்படுத்தும் வழக்கம் முன்பிருந்தே உள்ளது. தமிழைப் பொறுத்தவரை குறியீட்டைப் பயன்படுத்தும் முறை தொல்காப்பியர் காலம் முதல் இருந்து வருகிறது

185) முன்னுடைய – என்ற சொல்லை பிரித்து எழுதுக

A) முன்னுஸ்ரீஉடை

B) முன்ஸ்ரீஉடை

C) முஸ்ரீஉடை

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: முன்னுடை – முன்ஸ்ரீஉடை

விதி: தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும் – முன்ன்ஸ்ரீஉடை

விதி: உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே.

186) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க

A) பெரிய மலை நாட்டுக்கு உரியவன் – பேகன்

B) ஆர்வத்துடன் இனிமையான மொழிகளை பேசுபவன் – ஆய்

C) வெள்ளிய அருவிகளைக் கொண்ட பறம்புமலை தலைவர் – பாரி

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: பேகன் – வலிமை வாய்ந்த ஆவியர் குலத்தில் தோன்றியவர், பெரிய மலை நாட்டுக்கு உரியவர், வலிமையும் பெருந்தன்மையும், நற்பண்பும் கொண்டவர், பொதினி மலைக்குத் தலைவர்.

பாரி – வெள்ளிய அருவிகளைக் கொண்ட பறம்புமலையின் தலைவன்

காரி – பகைவர் அஞ்சக்கூடிய வகையில் நெருப்பைப் போல் சுடர்விடுகின்றன நீண்ட வேலினையும், வீரக்கழல்கலையும் உடையவர், தோள்வளையை அணிந்த நீண்ட கைகளை உடையவர்.

ஆய் – சந்தனம் பூசி உலர்ந்த தோள்களை உடையவர், ஆர்வத்துடன் இனிமையான மொழிகளைப் பேசுபவர்.

187) இரட்சணிய யாத்திரிகம் என்ற நூலை எழுதியவர் யார்?

A) மயிலை சீனி.வேங்கடசாமி

B) சிபி கே.சாலமன்

C) கி.வ.ஜகந்நாதன்

D) புலவர் சே.சுந்தரராசன்

விளக்கம்: தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் – மயிலை சீனி. வேங்கடசாமி

மாறுபட்டுச் சிந்திக்கலாமா? – சிபி.கே. சாலமன்

எழு பெருவள்ளல்கள் – கி.வ.ஜகந்நாதன்

இரட்சணிய யாத்திரிகம் – புலவர் சே.சுந்தரராசன்

188) வ.சுப.மாணிக்கம் என்பவர் எங்கு முதல்வராகப் பணியாற்றினார்?

A) அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

B) பாரதியார் பல்கலைக்கழகம்

C) பாரதிதாசன் பல்கலைக்கழகம்

D) அழகப்பா கல்லூரி

விளக்கம்: அழகப்பா கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகவும் முதல்வராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றினார் வ.சுப.மாணிக்கம்.

189) யாருடைய ஆட்சிக்காலம் இருண்ட காலம் என அழைக்கப்பட்டது?

A) பல்லவர்கள்

B) சாளுக்கியர்கள்

C) இராஷ்டிரகூடர்கள்

D) களப்பிரர்கள்

விளக்கம்: சங்க காலத்துக்குப் பிற்பட்ட காலத்தில் தமிழகத்தைக் களப்பிரர்கள் என்ற மன்னர்கள் ஆட்சி புரிந்தனர். இக்க்காலம் தமிழர்களின் வரலாற்றில் ‘இருண்ட காலம்’ எனறு மரபுவழிப்பட்ட வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டிருந்தனர். இம்மன்னர்கள் குறித்த ஆய்வை வேங்கடசாமி விரிவாக மேற்கொண்டு களப்பிரர் குறித்த புதிய கண்ணோட்டத்தைக் ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ என்னும் நூல்மூலம் வெளிப்படுத்தினார்.

190) வலிமையும் சினமும் ஒளியும்மிக்க வேலினை உடைய வள்ளல் யார்?

A) பேகன்

B) நள்ளி

C) பாரி

D) அதியமான்

விளக்கம்: அதியமான் – வலிமையும் சினமும் ஒளியும்மிக்க வேலினை உடையவர், கடல் போன்று ஒலிக்கும் படையினையும் உடையவர்.

191) நான் வெற்றுவெளியில் அலைந்துகொண்டிருக்கிறேன் எனது முகத்தைத் தேடியபடி என்று சுகந்தி சுப்பிரமணியன் தேடுவதாகக் குறிப்பிடுவது கீழ்க்காணும் எதனை?

A) தமது வீட்டு முகவரியை

B) தமது குடும்பத்தை

C) தமது அடையாளத்தை

D) தமது படைப்புகளை

விளக்கம்: ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அத்தனித்தன்மை அடையாளம் காணப்படுகையில் எழுச்சியும் ஊக்கமும் உடன் இணைந்து கொள்கிறது. அடையாளம் இழந்த ஒருவர், முகத்தைத் தொலைத்தவராகிறார். சமூகத்தின் இறுக்கமான குடும்பக் கட்டுமானத்தில் சிக்கித் திணரும் பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. தொலைத்ததை மீட்கும் வேட்கை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. நான் வெற்றுவெளியில் அலைந்துகொண்டிருக்கிறேன் எனது முகத்தைத் தேடியபடி என்று சுகந்தி சுப்பிரமணியன் தேடுவதாகக் குறிப்பிடுவது தமது அடையாளத்தை.

192) கொல்லிமலை எந்த வள்ளலுடன் தொடர்புடையது?

A) பேகன்

B) நள்ளி

C) ஓரி

D) ஆய்

விளக்கம்: ஓரியின் நாடு (வல்வில் ஓரி) – நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ‘கொல்லி மலையும்’ அதைச் சூழ்ந்துள்ள பல ஊர்களும் ஆகும்.

ஓய்மா நாட்டு, நல்லியக்கோடனது நாடு

திண்டிவனத்தைச் சார்ந்தது ஓய்மா நாடு என அழைக்கப்பட்ட நிலப்பகுதி ஆகும்.

193) எந்த ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் அறக்கட்டளைச் சொற்பொழிவு ஒன்றினை வேங்கடசாமி நிகழ்த்தினார்?

A) 1962

B) 1963

C) 1964

D) 1965

விளக்கம்: 1962ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் அறக்கட்டளைச் சொற்பொழிவு ஒன்றினை வேங்கடசாமி நிகழ்த்தினார்.

194) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க

A) வெந்து

B) சினந்து

C) போந்து

D) சொற்ற

விளக்கம்: வெந்து, சினந்து, போந்து – வினையெச்சங்கள்

சொற்ற – பெயரெச்சம்

195) பொருத்துக.

அ. கண்டகர் – 1. வலிமை

ஆ. வெய்துற – 2. கொடியவர்கள்

இ. மறங்கொள் – 3. திட்டினர்

ஈ. வைதனர் – 4. முரட்டுத் தன்மையுள்ளவர்.

A) 2, 1, 3, 4

B) 2, 1, 4, 3

C) 1, 2, 3, 4

D) 1, 2, 4, 3

விளக்கம்: கண்டகர் – கொடியவர்கள்

வெய்துற – வலிமை

மறங்கொள் – முரட்டுத் தன்மையுள்ளவர்

வைதனர் – திட்டினர்.

196) மயிலை சீனி.வேங்கடசாமி கீழ்காணும் எந்த காப்பியத் தரவுகளைக் கொண்டு ‘தமிழ்நாட்டு வரலாறு’ என்னும் நூலை எழுதியுள்ளார்?

A) சிலப்பதிகாரம்

B) மணிமேகலை

C) சீவக சிந்தாமணி

D) வளையாபதி

விளக்கம்: சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் முதலிய இலக்கியத் தரவுகளைக் கொண்டு ‘தமிழ்நாட்டு வரலாறு’ என்னும் நூலை எழுதியுள்ளார் மயிலை சீனி.வேங்கடசாமி. அத்துடன் துளு மொழியையும் தமிழ்மொழியையும் ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளார்.

197) சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய – என்ற வரியில் குறிப்பிடப்படுபவர் யார்?

A) பேகன்

B) பாரி

C) ஆய்

D) நள்ளி

விளக்கம்: மேற்காணும் வரியில் குறிப்பிடப்படுபவர் வள்ளல் பாரி ஆவார். முல்லைக்கொடியொன்று பற்றிப்படரத் தான் ஏறிவந்த பெரிய தேரினை ஈந்தவர் பாரி வள்ளல் ஆவார். வெள்ளிய அருவிகளைக் கொண்ட பறம்புமலைக்கு தலைவர்.

198) ‘மறைந்துபோன தமிழ்நூல்கள்’ என்னும் நூலில் மயிலை சீனி.வேங்கடசாமி, மறைந்துபோன எத்தனை நூல்கள் தொடர்பான குறிப்புகளை நம் முன் நிறுத்துகிறார்?

A) 222

B) 333

C) 323

D) 232

விளக்கம்: ‘மறைந்துபோன தமிழ் நூல்கள்’ என்னும் நூலில் மயிலை சீனி.வேங்கடசாமி பரந்த தமிழ் இலக்கிய, இலக்கணப் பரப்பில் உறைந்திருந்த செய்திகளைத் தொகுத்து மறைந்துபோன 333 நூல்கள் தொடர்பான குறிப்புகளை நம் முன் நிறுத்துகிறார்.

199) என்கொல் வாரிதி நீர் சுவறாததும் என்பார் – என்ற வரியில் வாரிதி என்ற சொல்லின் பொருள் என்ன?

A) கடல்

B) ஆறு

C) ஏரி

D) கிணறு

விளக்கம்: வாரிதி – கடல்.

கடல் நீர் வற்றிப் போகவில்லையே (இறைமகனை துன்புறுத்துவதைக்கண்ட மக்கள்) கூறினர் என்பது மேற்காணும் இரட்சணி யாத்திரிக வரியின் பொருளாகும்.

200) சிறுபாணன் சென்ற பெருவழி நிலப்படத்தை வரைந்தவர் யார்?

A) நல்லூர் நத்தத்தனார்

B) சிற்பி பாலசுப்பிரமணியம்

C) மயிலை சீனி.வேங்கடசாமி

D) சுகந்தி சுப்பிரமணியம்

விளக்கம்: சிறுபாணன் பயணம்:

நல்லூர் (சிறுபாணன் பயணம் தொடங்கிய இடம்) – எயிற்பட்டினம் (மரக்காணம்) – வேலூர் (உப்பு வேலூர்) – ஆமூர் (நல்லாமூர்) – கிடங்கில் (திண்டிவனம்) (சிறுபாணன் பயணம் முடித்த இடம்).

மேற்காணும் சிறுபாணனின் பயணக்குறிப்பை எழுதியவர் இராச.மாணிக்கனார்.

சிறுபாணன் சென்ற பெருவழி நிலப்படத்தை வரைந்தவர் மயிலை சீனி.வேங்கடசாமி.

201) தாங்கெட நேர்ந்த போதும்

தமிழ்கெட லாற்றா அண்ணல் – இவ்வரியில் அண்ணல் என்று குறிப்பிடப்படுபவர் யார்?

A) பாரதிதாசன்

B) காந்தியடிகள்

C) பாரதியார்

D) மயிலை சீனி.வேங்கடசாமி

விளக்கம்: தாங்கெட நேர்ந்த போதும்

தமிழ்கெட லாற்றா அண்ணல்

வேங்கடசாமி என்பேன்

விரிபெரு தமிழர் மேன்மை

ஓங்கிடச் செய்வ தொன்றே

உயிர்ப்பணியாகக் கொண்டோன்

வீங்கிட மாட்டான் கல்வி

விளம்பரம் விழைதல் இல்லான் – பாவேந்தர் பாரதிதாசன்

மேற்காணும் பாடல் வரி மயிலை சீனி.வேங்கடசாமி பற்றிய பாடலாகும்.

202) போற்றித் திருஅகவல் என்ற நூலை எழுதியவர் யார்?

A) வீரமாமுனிவர்

B) ஜி.யூ.போப்

C) எச்.ஏ.கிருட்டிணனார்

D) கால்டுவெல்

விளக்கம்: இரட்சணிய யாத்திரிகம் என்ற நூலை எழுதியவர் எச்.ஏ. கிருட்டிணனார். இவரின் பிற நூல்கள்: போற்றித் திருஅகவல், இரட்சணிய மனோகரம். இவரைக் கிறித்துவக் கம்பர் என்று போற்றுவர்.

203) எந்த இதழில் மயிலை சீனி.வேங்கடசாமி சொல்லாய்வுக் கட்டுரைகள் எழுதினார்?

A) அஞ்சிறைத் தும்பி

B) செந்தமிழ்ச் செல்வி

C) குயில்

D) முல்லை

விளக்கம்: மயிலை சீனி.வேங்கடசாமி தொடர்ச்சியாக சொல்லாய்வுப் பணியை மேற்கொண்டு வந்துள்ளார். ‘செந்தமிழ்ச் செல்வி’ என்னும் இதழில் அவர் எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகள் ‘அஞ்சிறைத் தும்பி’ என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டது.

204) Symbol என்பதற்கு ________________என்று பொருள்.

A) வலிமை

B) ஒன்று சேர்

C) அடையாளம்

D) மேற்காணும் அனைத்தும்

விளக்கம்: கவிதைத் துறையில் மிகுதியும் வழங்கிவரும் ‘குறியீடு’ என்ற உத்தி, ஆங்கிலத்தில் Symbol என ஆளப்படுகிறது. சிம்பல் என்பதற்கு ஒன்று சேர் என்பது பொருள். ஏதேனும் ஒரு வகையில் இரு பொருள்களுக்கிடையே உறவு இருக்கலாம்.

205) தவறான தொடரைக் கண்டுபிடி.

A) பகைத்த என்ற சொல்லின் பகுதி – பகை

B) களைந்து என்ற சொல்லின் பகுதி – களை

C) பழித்தனர் என்ற சொல்லின் பகுதி – பழி

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: பகைத்த என்ற சொல்லின் பகுதி – பகை

களைந்து என்ற சொல்லின் பகுதி – களை

பழித்தனர் என்ற சொல்லின் பகுதி – பழி

206) மாறுபட்டுச் சிந்திக்கலாமா? என்ற நூலை எழுதியவர் யார்?

A) மயிலை சீனி.வேங்கடசாமி

B) சிபி கே.சாலமன்

C) கி.வ.ஜகந்நாதன்

D) புலவர் சே.சுந்தரராசன்

விளக்கம்: தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் – மயிலை சீனி. வேங்கடசாமி

மாறுபட்டுச் சிந்திக்கலாமா? – சிபி.கே. சாலமன்

எழு பெருவள்ளல்கள் – கி.வ.ஜகந்நாதன்

இரட்சணிய யாத்திரிகம் – புலவர் சே.சுந்தரராசன்

207) “மயிலை சீனி.வேங்கடசாமி ஆண்டில் இளைஞராக இருந்தாலும் ஆராய்ச்சித்துறையில் முதியவர், நல்லொழுக்கம் வாய்ந்தவர். நல்லோருடைய கூட்டுறவைப் பொன்னேபோல் போற்றுபவர்” என மயிலை சீனி.வேங்கடசாமியை புகழ்ந்தவர் யார்?

A) மறைமலையடிகள்

B) பம்மல் சம்பந்தனார்

C) பாரதிதாசன்

D) சுவாமி விபுலானந்தர்

விளக்கம்: “மயிலை சீனி.வேங்சடசாமி ஆண்டில் இளைஞராக இருந்தாலும் ஆராய்ச்சித்துறையில முதியவர், நல்லொழுக்கம் வாய்ந்தவர். நல்லோருடைய கூட்டுறவைப் பொன்னேபோல் போற்றுபவர்” என்று சுவாமி விபுலானந்தர் மயிலை சீனி.வேங்கடசாமிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

208) எந்த ஆண்டு தமிழ் எழுத்தாளர் சங்கம் மயிலை சீனி.வேங்கடசாமியை பாராட்டி கேடயம் வழங்கியது?

A) 1962

B) 1963

C) 1964

D) 1965

விளக்கம்: தமிழக வரலாற்றுக் கழகத்திலும் தமிழகப் புலவர் குழுவிலும் உறுப்பினராக இருந்து பெருந்தொண்டாற்றிய மயிலை சீனி.வேங்கடசாமிக்கு 1962-இல் தமிழ் எழுத்தாளர் சங்கம் பாராட்டிக் கேடயம் வழங்கியது.

209) நான் வெற்றுவெளியில்

அலைந்து கொண்டிருக்கிறேன்

எனது முகத்தைத் தேடியபடி

எல்லா முகமும் அதனதன் கோணத்தில்

இயல்பற்று இறுகிக் கிடந்தது – என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) சுகந்தி சுப்பிரமணியன்

B) கவிமணி

C) சிற்பி பாலசுப்பிரமணியம்

D) கண்ணதாசன்

விளக்கம்: நான் வெற்றுவெளியில்

அலைந்து கொண்டிருக்கிறேன்

எனது முகத்தைத் தேடியபடி

எல்லா முகமும் அதனதன் கோணத்தில்

இயல்பற்று இறுகிக் கிடந்தது – சுகந்தி சுப்பிமணியன்

210) எந்த பல்கலைக்கழகம் மயிலை சீனி.வேங்கடசாமிக்கு ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்ற விருதினை அளித்தது?

A) மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

B) பாரதியார் பல்கலைகழகம்

C) அண்ணாமலை பல்கலைக்கழம்

D) அழகப்பா பல்கலைக்கழகம்

விளக்கம்: மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்ற விருதினை அளித்தது.

211) நள்ளிக்கு பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க

A) குறிப்பறிந்து வழங்கும் பெரிய கைகளை உடையவர்

B) காலந்தவறாமல் பெய்யும் மழை போன்றவன்

C) போர்த் தொழிலில் வல்லமையுடையவன்

D) கடல் போன்று ஒலிக்கும் படையினை உடையவர்

விளக்கம்: நள்ளி: குறிப்பறிந்து வழங்கும் பெரிய கைகளை உடையவர். காலந்தவறாமல் பெய்யும் மழை போன்றவர். போர்த் தொழிலில் வல்லமையுடையவர். மழைக்காற்று எப்போதும் இருக்கக்கூடிய உயர்ந்த மலை நாட்டை உடையவர்.

அதியமான் – வலிமையும் சினமும் ஒளியும்மிக்க வேலினை உடையவர், கடல் போன்று ஒலிக்கும் படையினையும் உடையவர்.

212) மயிலை சீனி.வேங்கடசாமி பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. 1950களில் கி.பி (பொ.ஆ) 3ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி (பொ.ஆ) 9-ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் ஆட்சிபுரிந்த மன்னர்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார்.

2. மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் ஆகியோர் குறித்த நூல்களைத் தொடர்ந்து மூன்றாம் நந்திவர்மன் என்னும் பல்லவ மன்னனைப் பற்றியும் அவர் எழுதினார்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1950 களில் கி.பி. (பொ.ஆ) 3ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. (பொ.ஆ) 9ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் ஆட்சிபுரிந்த மன்னர்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் ஆகியோர் குறித்த நூல்களைத் தொடர்ந்து மூன்றாம் நந்திவர்மன் என்னும் பல்லவ மன்னனைப் பற்றியும் அவர் எழுதினார்.

213) மயிலை சீனி.வேங்கடசாமி பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. சங்க கால மூவேந்தர்கள், கொங்குநாட்டு மன்னர்கள், துளு நாட்டு மன்னர்கள், களப்பிரர் மற்றும் இலங்கை குறித்த வரலாறு ஆகியவற்றை எழுதினார்.

.2. களப்பிரர் ஆட்சிக் காலம் இருண்ட காலம் என அழைக்கப்பட்டது. இம்மன்னர்கள் குறித்த புதிய கண்ணோட்டத்தைக் ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ என்னும் நூல்மூலம் வெளிப்படுத்தினார்A

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: சங்க கால மூவேந்தர்கள், கொங்குநாட்டு மன்னர்கள், துளு நாட்டு மன்னர்கள், களப்பிரர் மற்றும் இலங்கை குறித்த வரலாறு ஆகியவற்றை எழுதினார்.

சங்க காலத்துக்குப் பிற்பற்ற காலத்தில் தமிழகத்தைக் களப்பிரர்கள் என்ற மன்னர்கள் ஆட்சிபுரிந்தனர். இக்காலம் தமிழர்களின் வரலாற்றில் ‘இருண்ட காலம்’ என்று மரபுவழிப்பட்ட வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டிருந்தனர். இம்மன்னர்கள் குறித்த ஆய்வை வேங்கடசாமி விரிவாக மேற்கொண்டு களப்பிரர் குறித்த புதிய கண்ணோட்டத்தைக் ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம் என்னும் நூல்மூலம் வெளிப்படுத்தினார்.

214) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க

A) சுரும்பு – சுரபுன்னை

B) நாகம் – நாகப்பாம்பு

C) பிறங்கும் – விளங்கும்

D) நறுவீ – நல்ல தேன்

விளக்கம்: சுரும்பு – வண்டு. வண்டுகள் உண்ணும் வண்ணம் நல்ல தேனை மிகுதியாகக் கொண்ட சுரபுன்னை என்பது மேற்காணும் வரியின் பொருளாகும்.

215) கூற்று: கலையியல் சார்ந்து தமிழில் வெளியான பல நூல்களுக்கும் வேங்கடசாமியே வழிகாட்டியாக விளங்கினார்.

காரணம்: அவருடைய பல்துறை அறிவு மற்றும் தம் இளமைப் பருவத்தில் அவர் ஓவியக் கல்லூரியில் பயின்றது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: கலையியல் சார்ந்து தமிழில் வெளியான பல நூல்களுக்கும் வேங்கடசாமியே வழிகாட்டியாக விளங்கினார். இக்கலை ஆராய்ச்சிக்கு அவருடைய பல்துறை அறிவும் தம் இளமைப்பருவத்தில் அவர் ஓவியக் கல்லூரியில் பயின்றதும் உதவியாக அமைந்தது.

216) வரங்கள்

சாபங்கள் ஆகுமென்றால் இங்கே

தவங்கள் எதற்காக? – என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) கண்ணதாசன்

D) அப்துல் ரகுமான்

விளக்கம்: வரங்கள்

சாபங்கள்

ஆகுமென்றால் இங்கே

தவங்கள் எதற்காக? – அப்துல்ரகுமான்

217) கவின்கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முழுமையான முதல்நூல் எது?

A) தமிழர் வளர்த்த கவின்கலைகள்

B) தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்

C) தமிழர் வளர்த்த கலைகள்

D) தமிழரின் நுண்கலைகள்

விளக்கம்: கட்டடம், சிற்பம், ஓவியம் தொடர்பான மயிலை சீனி.வேங்கடசாமி ஆய்வுத் தமிழ்ச்சமூக வரலாற்றுக்குப் புதிய வரவாக அமைந்தன. தமிழரது கலைத்திறனை எடுத்தோதும் ‘தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்’ என்னும் நூல், கவின்கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முழுமையான முதல்நூல் ஆகும்.

218) கூற்றுகளை ஆராய்க.

1. சாந்தா தத் என்பவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண் படைப்பாளர்

2. இவர் தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.

3. இவரின் ‘கோடை மழை’ என்னும் சிறுகதை ‘இலக்கியச் சிந்தனை’ அமைப்பின் சிறந்த சிறுகதைக்கான விருதைப் பெற்றது.

4. ‘திசை எட்டும்’ என்ற மொழிபெயர்ப்பு இதழின் ஆசிரியர் குழுவில் உள்ளார்.

A) 1, 2 சரி

B) 1, 4 சரி

C) 2, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. சாந்தா தத் என்பவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண் படைப்பாளர்

2. இவர் தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.

3. இவரின் ‘கோடை மழை’ என்னும் சிறுகதை ‘இலக்கியச் சிந்தனை’ அமைப்பின் சிறந்த சிறுகதைக்கான விருதைப் பெற்றது.

4. ‘திசை எட்டும்’ என்ற மொழிபெயர்ப்பு இதழின் ஆசிரியர் குழுவில் உள்ளார்.

219) அண்ணலைத் தனி நிறுவவும், ஆக்கினைத் தீர்ப்பு – என்ற வரியில் அண்ணல் என்று குறிப்பிடப்படுவர் யார்?

A) போந்தியு பிலாத்து என்னும் ஆளுநர்

B) இறைமகன் என்னும் இயேசு பிரான்

C) இரட்சணிய யாத்திரகம் எழுதிய எச்.ஏ.கிருட்டிணனார்

D) சீறாப்புரணம் எழுதிய உமறுப்புலவர்

விளக்கம்: மேற்காணும் வரி இடம் பெற்றுள்ள நூல் இரட்சணிய யாத்திரிகம் ஆகும். இங்கு அண்ணல் என்று குறிப்பிடப்படுபவர் இயேசு பிரான் ஆவார்.

220) மயிலை சீனி.வேங்கடசாமி பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. தமது நூல்களின் படங்களைத் தானே வரைந்து வெளியிட்டது இவரது கலைத்திறனுக்குச் சான்றாகும்.

2. மயிலை சீனி.வேங்கடசாமி பற்றி நாரண துரைக்கண்ணன் என்பவர் உருவ விவரிப்பு செய்துள்ளார்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1.தமது நூல்களின் படங்களைத் தானே வரைந்து வெளியிட்டது இவரது கலைத்திறனுக்குச் சான்றாகும்.

2. மயிலை சீனி.வேங்கசாமி பற்றி நாரண துரைக்கண்ணன் உருவ விவரிப்பு செய்துள்ளார்.

221) மயிலை சீனி.வேங்கடசாமி கலை பற்றி எழுதிய நூல்களில் பொருந்தாது எது?

A) இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்

B) நுண்கலைகள்

C) இசைவாணர் கதைகள்

D) எதுவுமில்லை

விளக்கம்: இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம், நுண்கலைகள், இசைவாணர் கதைகள் ஆகியவை கலை பற்றிய மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய நூல்கள் ஆகும்.

222) மயிலை சீனி.வேங்கடசாமி பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. ‘கிறித்துவமும் தமிழும்’ – முதல் நூல்

2. ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ – களப்பிரர் குறித்த புதிய கண்ணோட்டம்

3. தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் – கவின்கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முழுமையான முதல்நூல்

4. தமிழ்நாட்டு வரலாறு – இவருடைய மீட்டுருவாக்க முயற்சிக்குச் சரியான சான்று

A) 1, 2 சரி

B) 2, 3 சரி

C) 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. ‘கிறித்துவமும் தமிழும்’ – முதல் நூல்

2. ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ – களப்பிரர் குறித்த புதிய கண்ணோட்டம்

3. தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் – கவின்கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முழுமையான முதல்நூல்

4. தமிழ்நாட்டு வரலாறு – இவருடைய மீட்டுருவாக்க முயற்சிக்குச் சரியான சான்று

223) மயிலை சீனி.வேங்கடசாமி நூல் பற்றிய கூற்றுகளை ஆராய்க

1. பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் – ஒவ்வொரு நூற்றாண்டையும் எவ்வகையில் ஆவணப்படுத்துவது என்பதற்கான முன்னோடி

2. ‘மறைந்துபோன தமிழ்நூல்கள் – அவரின் அரிய ஆவணப்பணிகளில் ஒன்று.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் – ஒவ்வொரு நூற்றாண்டையும் எவ்வகையில் ஆவணப்படுத்துவது என்பதற்கான முன்னோடி

2. ‘மறைந்துபோன தமிழ்நூல்கள் – அவரின் அரிய ஆவணப்பணிகளில் ஒன்று.

224) பகைவர் அஞ்சக்கூடிய வகையில் நெருப்பைப் போல் சுடர்விடுகின்றன நீண்ட வேலினையும், வீரக்கழல்கலையும் உடையவர், தோள்வளையை அணிந்த நீண்ட கைகளை உடையவர் யார்?

A) பாரி

B) காரி

C) பேகன்

D) நள்ளி

விளக்கம்: காரி – பகைவர் அஞ்சக்கூடிய வகையில் நெருப்பைப் போல் சுடர்விடுகின்றன நீண்ட வேலினையும், வீரக்கழல்கலையும் உடையவர், தோள்வளையை அணிந்த நீண்ட கைகளை உடையவர்.

225) மயிலை சீனி.வேங்கடசாமி, 1950களில் எந்த நூற்றாண்டு தொடங்கி எந்த நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் ஆட்சிபுரிந்;த மன்னர்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார்?

A) கி.பி (பொஆ.) 3 – கி.பி.(பொ.ஆ) 9

B) கி.பி (பொஆ.) 3 – கி.பி.(பொ.ஆ) 6

C) கி.பி (பொஆ.) 6 – கி.பி.(பொ.ஆ) 12

D) கி.பி (பொஆ.) 3 – கி.பி.(பொ.ஆ) 12

விளக்கம்: 1950களில் கி.பி (பொஆ.) 3 – கி.பி. (பொ.ஆ) 9 நூற்றாண்டு இடைப்பட்ட காலங்களில் ஆட்சிபுரிந்த மன்னர்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார் மயிலை சீனி.வேங்கடசாமி.

226) பொருத்துக

அ. சேரர் – 1. மீன்

ஆ. சோழர் – 2. புலி

இ. பாண்டியன் – 3. வில்

A) 3, 1, 2

B) 2, 3, 1

C) 3, 2, 1

D) 1, 2, 3

விளக்கம்: சேரர் – வில் சோழர் – புலி பாண்டியன் – மீன்

227) சங்ககாலப் பசும்பூண் பாண்டியன் தன் கொடியில்_________________சின்னத்தைக் கொண்டிருந்தான் என்ற செய்தி அகநானூற்றில் உள்ளது.

A) மீன்

B) புலி

C) வில்

D) யானை

விளக்கம்: சங்ககாலப் பசும்பூண் பாண்டியன் தன் கொடியில் யானைச் சின்னத்தைக் கொண்டிருந்தான் என்ற செய்தி அகநானூற்றில் (162) இருப்பதை முதன் முதலில் அறிந்து வெளிப்படுத்தியவர் மயிலை சீனி.வேங்கடசாமி ஆவார்.

228) சாந்தா தத் என்பவர் எந்த மாவட்டத்தை சேர்ந்த படைப்பாளர்?

A) கோயம்புத்தூர்

B) காஞ்சிபுரம்

C) திருநெல்வேலி

D) சென்னை

விளக்கம்: சாந்தா தத் என்பவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண்படைப்பாளர் ஆவார். சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என இலக்கியத் துறைக்குத் தன் பங்களிப்பைச் செய்து வருகிறார்.

229) தமிழின் செல்வாக்கினாலேயே வடமொழியில் குறிப்புப் பொருள் கோட்பாடு உருவானது என்று குறிப்பிட்டவர் யார்?

A) பொதலேர்

B) ரைம்போ

C) வெர்லேன்

D) ஹார்ட்

விளக்கம்: தமிழின் செல்வாக்கினாலேயே வடமொழியில் குறிப்புப் பொருள் கோட்பாடு உருவானது என்று ஹார்;ட் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் குறியீட்டு மரபு இன்றைய புதுக்கவிதைகளில் மிகுதியாகக் காணப்படுகிறது.

230) கூற்றுகளை ஆராய்க.

1. கவிதைத் துறையில் மிகுதியும் வழங்கிவரும் ‘குறியீடு’ என்ற உத்தி, ஆங்கிலத்தில் Symbol என்று ஆளப்படுகிறது

2. சிம்பல் என்றால் ஒன்றுசேர் என்று பொருள்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. கவிதைத் துறையில் மிகுதியும் வழங்கிவரும் ‘குறியீடு’ என்ற உத்தி, ஆங்கிலத்தில் Symbol என்று ஆளப்படுகிறது

2. சிம்பல் என்றால் ஒன்றுசேர் என்று பொருள்

231) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க (குறியீடு பற்றி)

A) பெண் – அறம்

B) வெண்புறா – சமாதானம்

C) தராசு – நீதி

D) சிஙகம் – வீரம்

விளக்கம்: பெண்ணை விளக்கு என்று அழைப்பதற்கு பண்பு காரணமாக இருக்கிறது.

232) கூற்றுகளை ஆராய்க

1. பொதலேர், ரைம்போ, வெர்லேன், மல்லர்மே என்பவர் குறியீட்டியம் என்னும் கோட்பாட்டை விளக்கி வளர்த்தார்கள்.

2. தமிழின் செல்வாக்கினாலேயே வடமொழியில் குறிப்புப் பொருள் கோட்பாடு உருவானது – ஹார்ட்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: பொதலேர், ரைம்போ, வெர்லேன், மல்லர்மே முதலானவர்கள் குறியீட்டியம் என்னும் கோட்பாட்டை விளக்கி வளர்த்தார்கள்

தமிழின் செல்வாக்கினாலேயே வடமொழியில் குறிப்புப் பொருள் கோட்பாடு உருவானது என்று ஹார்ட் குறிப்பிட்டிருக்கிறார்.

233) குறியீட்டியத்தின் அடிப்படை எது?

A) உவமையை மட்டும் கூறுவது

B) உவமேயத்தை மட்டும் கூறுவது

C) உவமை மற்றும் உவமேயம் இரண்டையும் கூறுவது

D) உவமை மற்றும் உவமேயம் இரண்டையும் கூறாமல் இருப்பது

விளக்கம்: உவமேயத்தைக் கேட்போர் ஊகித்துக்கொள்ளுமாறு விட்டு உவமையை மட்டும் கூறுவது உள்ளுறை உவமத்தின் அடிப்படை. இதுவே குறியீட்டின் அடிப்படையுமாகும்.

234) கோடு புய்க்கல்லாது, உழக்கும் நாட – இவ்வரியில் கோடு என்ற சொல்லின் பொருள் என்ன?

A) கொம்பு

B) தந்தம்

C) வரையப்பட்ட கோடு

D) மரம்

விளக்கம்: கோடு – தந்தம்.

மேற்காணும் வரி இடம்பெற்றுள்ள நூல் கலித்தொகை ஆகும். இங்கு குறியீடு விளக்கப்பட்டுள்ளது

235) கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மதயானை – என்ற வரியில் கறுவு என்ற சொல்லின் பொருள் என்ன?

A) கர்வம்

B) ஆணவம்

C) சினம்

D) பூ

விளக்கம்: கறுவு – சினம்.

மேற்காணும் வரி கலித்தொகையில் கபிலர் எழுதிய வரியாகும். இவ்வரி குறியீட்டியத்திற்கு எடுத்துக்காட்டாகும்.

236) கடுவன் என்ற சொல்லிற்கு பொருத்தமான ஒன்றை தெரிவு செய்க.

A) ஆண் யானை

B) பெண் யானை

C) ஆண் குரங்கு

D) பெண் குரங்கு

விளக்கம்: கடுவன் – ஆண் குரங்கு

மந்தி – பெண் குரங்கு

பிடி – பெண் யானை

களிறு – ஆண் யானை

237) கூற்றுகளை ஆராய்க

1. உள்ளுறை உவமம் அக இலக்கியங்களில் உரைக்க முடியாதவை, மறைக்கவேண்டுபவை ஆகியவற்றைக் குறிப்பாக உணர்த்தப் பயன்பட்டது.

2. குறியீடு என்பது அகம், புறம் என எல்லா கவிதைகளிலும் குறிப்பாக உணர்த்தப் பயன்படும் இலக்கிய உத்தியாகும்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. உள்ளுறை உவமம் அக இலக்கியங்களில் உரைக்க முடியாதவை, மறைக்கவேண்டுபவை ஆகியவற்றைக் குறிப்பாக உணர்த்தப் பயன்;பட்டது.

2. குறியீடு என்பது அகம், புறம் என எல்லா கவிதைகளிலும் குறிப்பாக உணர்த்தப் பயன்படும் இலக்கிய உத்தியாகும்.

238) இந்த

ஆதிரைப் பருக்கைகள்

வீழ்ந்ததும்

பூமிப்பாத்திரம்

அமுதசுரபி – என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) அப்துல் ரகுமான்

B) பாரதியார்

C) பாரதிதாசன்

D) கவிமணி

விளக்கம்: இந்த

ஆதிரைப் பருக்கைகள்

வீழ்ந்ததும்

பூமிப்பாத்திரம்

அமுதசுரபி – பால்வீதி (அப்துல் ரகுமான்)

239) கூற்று: 19ஆம் நூற்றாண்டில் குறியீட்டியம் ஓர் இலக்கியக் கோட்பாடாக உருப்பெற்றது

காரணம்: பொதலேர், ரைம்போ, வெர்லேன், மல்லார்மே முதலானவர்கள் குறியீட்டியத்தை வளர்த்தார்கள்

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று சரி, காரணம் சரி

C) கூற்று தவறு, காரணம் தவறு

D) கூற்று தவறு, காரணம் சரி

விளக்கம்: 19ஆம் நூற்றாண்டில் ‘குறியீட்டியம்’ ஓர் இலக்கியக் கோட்பாடாக உருப்பெற்றது. பொதலேர், ரைம்போ, வெர்லேன், மல்லார்மே முதலானவர்கள் இக்கோட்பாட்டை விளக்கி வளர்த்தார்கள்.

240) சங்க இலக்கியத்தில், அகத்திணை மாந்தர்களின் உள்ளத்து உணர்வுகளைக் குறிப்பாக உணர்த்தும் குறியீடுகள் எது?

A) உவமை

B) உவமேயம்

C) உத்தி

D) உள்ளுறை உவமம்

விளக்கம்: சங்க இலக்கியத்தில், அகத்திணை மாந்தர்களின் உள்ளத்து உணர்வுகளைக் குறிப்பாக உணர்த்தும் குறியீடுகள், ‘உள்ளுறை உவமம்’ என்ற முதிர்ந்த குறிப்புப் பொருள் உத்தியில் இடம்பெற்றுள்ளன.

241) ‘திட்டம்’ என்னும் தலைப்பில் ‘வரங்கள் சாபங்கள் ஆகுமென்றால் இங்கே தவங்கள் எதற்காக?’ என்று எழுதப்பட்டுள்ள கவிதையில் ‘சாபம் எதற்குக் குறியீடாகிறது?

A) அமுதசுரபி

B) ஆதிரைப்பருக்கை

C) திட்டம்

D) பயனற்ற விளைவு

விளக்கம்: வரங்கள்

சாபங்கள்

ஆகுமென்றால் இங்கே

தவங்கள் எதற்காக? – அப்துல் ரகுமான்

திட்டங்கள், தீட்டினாலும் அவை நாட்டு நலனுக்குப் பயன்படாமல், எதிராகப் போய்விடுவதை இக்கவிதை உணர்த்துகிறது. வரம் திட்டத்திற்குக் குறியீடாகிறது. சாபம் அதன் பயனற்ற விளைவுக்குக் குறியீடாகிறது.

242) கூற்றுகளை ஆராய்க.

1. தமிழின் நவீன பெண் கவிஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர் சுகந்தி சுப்பிரமணியன். இவர் கோவை மாவட்டத்தின் புறநகரான ஆலாந்துறை என்னும் சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர்.

2. இவர், உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முழுமை செய்யாத நிலையில் திருமணமாகி, கணவர் தந்த நம்பிக்கையில் எழுதத் தொடங்கினார்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. தமிழின் நவீன பெண் கவிஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர் சுகந்தி சுப்பிரமணியன். இவர் கோவை மாவட்டத்தின் புறநகரான ஆலாந்துறை என்னும் சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர்.

2. இவர், உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முழுமை செய்யாத நிலையில் திருமணமாகி, கணவர் தந்த நம்பிக்கையில் எழுதத் தொடங்கினார்.

243) இந்த

ஆதிரைப் பருக்கைகள்

வீழ்ந்ததும்

பூமிப்பாத்திரம்

அமுதசுரபி – என்ற வரியில் அமுதசுரபி எதற்கு குறியீடாகிறது?

A) செழிப்பு

B) வியர்வைத் துளி

C) திட்டம்

D) பயனற்ற விளைவு

விளக்கம்: ஆதிரையிட்ட பருக்கையினால் அமுதசுரபியில் உணவு வளர்ந்துகொண்டே இருந்தது போல் உழைப்பால் உலகம் செழித்து வளர்கிறது என்ற கருத்து மேற்காணும் பாடலில் புலப்படுத்தப்படுகிறது. வியர்வைத்துளிக்கு ஆதிரைப் பருக்கை குறியீடாகிறது. செழிப்புக்கு அமுதசுரபி குறியீடாகிறது.

244) மறைத்துச் சொல்லவும் மிகுத்துச் சொல்லவும் அழுத்திச் சொல்லவும் பயன்படும் இலக்கிய உத்தி எது?

A) குறியீடு

B) படிமம்

C) அங்கதம்

D) தொன்மம்

விளக்கம்: சொல்ல வந்ததை நேரடியாகச் சொல்லாமல் இன்னொன்றைக் கூறிக் குறிப்பால் உணர்த்துவது குறியீடு. மறைத்துச்சொல்லவும், மிகுத்துச் சொல்லவும், அழுத்திச் சொல்லவும் குறியீடு பயன்படுகிறது.