1) தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் முதன்மையானது எது?
A) அறநெறி
B) பண்பு
C) விருந்தோம்பல்
D) கொடைத்திறன்
விளக்கம்: தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ‘விருந்தோம்பல்’ முதன்மையானதாகும். தம்மிடம் இல்லாவிட்டாலும் இருப்பதை விருந்தினருக்குத் தந்து மகிழ்ந்த நிகழ்வுகளைத் தமிழ் இலக்கியங்கள் பேசுகின்றன.
2) கடையெழு வள்ளல்களுள் ஒருவரான பாரியின் புதல்வியர் பாணர்களுக்குப் புதுமையான உணவு அளித்த செய்தியைக் கூறும் நூல் எது?
A) அகநானூறு
B) புறநானூறு
C) பழமொழி நானூறு
D) ஏலாதி
விளக்கம்: கடையெழு வள்ளல்களுள் ஒருவரான பாரியின் புதல்வியர் பாணர்களுக்குப் புதுமையாக உணவு அளித்த செய்தியைக் கூறும் நூல் பழமொழி நானூறு. இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
3) “மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும்” என்ற பாடலைப் பாடியவர் யார்?
A) கபிலர்
B) காக்கை பாடினியார்
C) நக்கீரர்
D) மூன்றுறை அரையனார்
விளக்கம்: “மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும்
பாரி மடமகள் பாண்மகற்கு – நீர் உலையுள்
பொன்திறந்து கொண்டு புகவாக நல்கினாள்
ஒன்றோ முன்றிலோ இல்” – மூன்றுரை அரையனார்
4) பொருத்துக
அ. மாரி – 1. வறண்டிருந்த
ஆ. வறந்திருந்த – 2. மழை
இ. மடமகள் – 3. கொடுத்தாள்
ஈ. நல்கினாள் – 4. இளமகள்
A) 4, 3, 2, 1
B) 2, 3, 4, 1
C) 1, 2, 4, 3
D) 2, 1, 4, 3
விளக்கம்: பாரி – மழை
வறந்திருந்த – வறண்டிருந்த
மடமகள் – இளமகள்
நல்கினாள் – கொடுத்தான்
புகாவாக – உணவாக
முன்றில் – வீட்டின் முன் இடம் (திண்னை)
5) அங்கவை, சங்கவை யாருடைய புதல்விகள்?
A) ஓரி
B) பாரி
C) பேகன்
D) அதியன்
விளக்கம்: அங்கவை, சங்கவை, ஆகிய இருவரும் கடையெழு வள்ளல்களுள் ஒருவரான பாரியின் புதல்வி ஆவார்.
6) “ஒன்றுறா முன்றிலோ இல்” என்ற பழமொழியின் பொருள் என்ன?
A) மூன்றில் ஒன்று இல்லை
B) மூன்றில் ஒரு பங்கு
C) ஒன்றுமில்லை
D) ஒன்றுமில்லாத வீடு எதுவுமில்லை
விளக்கம்: “ஒன்றுறா மூன்றிலோ இல்” என்ற பழமொழி ஒன்றுமில்லாத வீடு எதுவுமில்லை என்ற பொருளை உணர்த்துகிறது.
7) “பழமொழி நானூறு” என்ற நூலின் ஆசிரியர் யார்?
A) உருத்திரங்கண்ணனார்
B) பரிமேலழகர்
C) நக்கீரர்
D) மூன்றுறை அரையனார்
விளக்கம்: பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் மூன்றுறை அரையனார். ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம் பெற்றிருப்பதால் இது பழமொழி நானூறு எனப்பட்டது. இது 400 பாடல்களைக் கொண்டுள்ளது.
8) மூன்றுறை அரையனார் எந்த சமயத்தைச் சேர்ந்தவர்?
A) பௌத்தம்
B) சமணம்
C) சைவம்
D) வைணவம்
விளக்கம்: பழமொழி நானூறு நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் மூலம் முன்றுறை அரையனார் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்று அறிய முடிகிறது.
9) மரம் வளர்த்தால்______பெறலாம்?
A) மாறி
B) மாரி
C) காரி
D) பாரி
விளக்கம்: மரம் வளர்த்தால் மாரி பெறலாம். அதாவது மாரி என்றால் மழை என்று பொருள்
10) நீருலையில் – பிரித்தெழுதுக.
A) நீரு + உலையில்
B) நீர் + இலையில்
C) நீர் + உலையில்
D) நீரு + இலையில்
விளக்கம்: நீருலையில் – நீர் + உலையில் எனப் பிரியும்
11) மாரி + ஒன்று சேர்த்தெழுதுக
A) மாரியொன்று
B) மார் ஒன்று
C) மாரியின்று
D) மாரியன்று
விளக்கம்: மாரி + ஒன்று – மாரியொன்று எனப் புணரும்
12) உலகிலுள்ள பலவகையான தொழில்களில் முதன்மையானது எது?
A) நெசவுத்தொழில்
B) கட்டுமானத் தொழில்
C) உழவுத்தொழில்
D) சுரங்கத்தொழில்
விளக்கம்: உலகிலுள்ள பலவகையான தொழில்களில் முதன்மையானது பசி தீர்க்கும் தொழிலாகிய உழவுத் தொழிலாகும்.
13) “ஓடை எல்லாம் தாண்டிப்போயி-ஏலோலங்கிடி ஏலோலோ” எனத் தொடங்கும் பாடலின் தொகுப்பு ஆசிரியர் யார்?
A) மு.வ
B) கி.வா. ஜகந்நாதன்
C) நா. பிச்சமூர்த்தி
D) மௌலி
விளக்கம்: உழவுத்தொழில் குறித்த இந்த நாட்டுப்புறப் பாடலின் தொகுப்பாசிரியர் கி.வா.ஜகந்நாதன் ஆவார்.
14) பொருத்துக.
அ. குழி – 1. முற்றிய நெல்
ஆ. சாண் – 2. நில அளவையாளர்
இ. சும்மாடு – 3. நீட்டல் அளவைப் பெயர்
ஈ. மணி – 4. பாரம் சுமப்பவர் தலையிலுள்ள துணிச் சுருள்
A) 4, 3, 2, 1
B) 2, 3, 4, 1
C) 2, 4, 3, 1
D) 4, 3, 1, 2
விளக்கம்: குழி – அளவைப் பெயர்
சாண் – நீட்டல் அளவைப் பெயர்
சும்மாடு – பாரம் சுமப்பவர் தலையிலுள்ள துணிச் சுருள்
மணி – முற்றிய நெல்
15) பொருத்துக.
அ. சீலை – 1. உதிர்தல்
ஆ. கழலுதல் – 2. வயலுக்கு நீர் வரும் வழி
இ. மடை – 3. புடவை
A) 3, 1, 2
B) 3, 2, 1
C) 2, 3, 1
D) 1, 3, 2
விளக்கம்: சீலை- புடவை
கழலுதல் – உதிர்தல்
மடை – வயலுக்கு நீர் வரும் வழி
16) நாற்றுப் பறிக்கும் போது ஆண்களும் பெண்களும் வயல் வரப்பிலுள்ள எதை பிதடித்தனர் என்ற வயலும் வாழ்வும் நாட்டுப்புறப் பாடல் கூறுகிறது?
A) மீன்
B) பாம்பு
C) நண்டு
D) எலி
விளக்கம்: நாற்றுப் பறிக்கும்போது ஆண்களும் பெண்களும் வயல் வரப்பிலுள்ள நண்டுகளை பிடித்தனர் என்று வயலும் வாழ்வும் நாட்டுப்புறப் பாடல் கூறுகிறது.
17) சரியான கூற்றைத் தேர்க
1. அறுவடை செய்த நெற்கதிர்களைக் களத்தில் அடித்து நெல்லைப் பிரிப்பர். பின் எஞ்சியருக்கும் நெல்மணிகளைப் பிரிக்க மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்வர். இதற்குப் போரடித்தல் என்று பெயர்.
2. “மாடுகட்டிப் போராடித்தில் மாளாது
செந்நெல்லென்று
ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான
தென்மதுரை” என்பது பழமொழி
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: “மாடுகட்டிப் போராடித்தில் மாளாது
செந்நெல்லென்று
ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான
தென்மதுரை”என்பது நாட்டுப்புறப் பாடல் ஆகும்.
18) வாய்மொழி இலக்கியம் எனப்படுவது எது?
A) பழமொழி நானூறு
B) நாட்டுப்புறப் பாடல்
C) சங்க இலக்கியம்
D) A மற்றும் B
விளக்கம்: நாட்டுப்புறங்களில் உழைக்கும் மக்கள் தங்கள் களைப்புத் தெரியாமல் இருப்பதற்காகப் பாடும் பாடலே நாட்டுப்புறப் பாடல் எனப்படுகிறது. இதனை “வாய்மொழி இலக்கியம்” என்றும் வழங்குவர்.
19) “மலை அருவி” என்னும் நூலின் ஆசிரியர் யார்?
A) நா. பிச்சமூர்த்தி
B) சி.சு. செல்லப்பா
C) கி.வா. ஜகந்நாதன்
D) முடியரசன்
விளக்கம்: பல்வேறு தொழில்கள் குறித்த நாட்டுப்புறப் பாடல்களை “மலை அருவி” என்னும் நூலில் கி.வா. ஜகந்நாதன் தொகுத்துள்ளார்.
20) தேர்ந்தெடுத்து – பிரித்தெழுதுக
A) தேர் + எடுத்து
B) தேர்ந்து + தெடுத்து
C) தேர்ந்தது + அடுத்து
D) தேர்ந்து + எடுத்து
விளக்கம்: தேர்ந்தெடுத்து – தேர்ந்து + எடுத்து எனப் பிரியும்
21) ஓடை + எல்லாம் – சேர்த்தெழுதுக.
A) ஓடைஎல்லாம்
B) ஓடையெல்லாம்
C) ஓட்டையல்லாம்
D) ஓடெல்லாம்
விளக்கம்: ஓடை + எல்லாம் – ஓடையெல்லாம் எனப் புணரும்
22) பொருத்துக.
அ. நாற்று – 1. பறித்தல்
ஆ. நீர் – 2. அறுத்தல்
இ. கதிர் – 3. நடுதல்
ஈ. களை – 4. பாய்ச்சுதல்
A) 3, 4, 2, 1
B) 3, 4, 1, 2
C) 3, 2, 4, 1
D) 3, 1, 4, 2
விளக்கம்: நாற்று – நடுதல்
நீர் – பாய்ச்சுதல்
கதிர் – அறுத்தல்
களை – பறித்தல்
23) எவை பெரும்பாலும் ஆற்றங்கரைகளில் அமைந்திருந்தன?
A) பட்டினம்
B) பாக்கம்
C) கிராமம்
D) நகரம்
விளக்கம்: நகரங்கள் பெரும்பாலும் ஆற்றங்கரைகளில் அமைந்திருந்தன. ஆற்றங்கரைகளில் சிறந்து விளங்கும் நகரங்கள் தமிழ்நாட்டில் பல உள்ளன.
24) பாண்டியர்களின் இரண்டாவது தலைநகரமாக விளங்கிய நகரம் எது?
A) மதுரை
B) திருச்சி
C) கரூர்
D) திருநெல்வேலி
விளக்கம்: பாண்டியர்களின் முதல் தலைநகரம் – மதுரை
பாண்டியர்களின் இரண்டாவது தலைநகரம் – திருநெல்வேலி
25) மூவேந்தர்கள் எனப்படுபவர்கள் யார்?
A) பாரி, ஓரி, காரி
B) சேரர், சோழர், பாண்டியர்
C) அதியமான், ஆய், நளங்கிள்ளி
D) A மற்றும் B
விளக்கம்: சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மூவரும் மூவேந்தர்கள் எனப்பட்டனர். இவர்கள் மூவரும் பழந்தமிழகத்தை ஆண்டு வந்தனர்.
26) “நெல்லை” என வழங்கப்படும் ஊர் எது?
A) தூத்துக்குடி
B) தஞ்சாவூர்
C) கும்பகோணம்
D) திருநெல்வேலி
விளக்கம்: திருநெல்வேலி நகரைச் சுற்றி நெல் வயல்கள் வேலி போல் அமைந்திருந்ததால் திருநெல்வேலி எனப் பெயர் பெற்றது. தற்போது நெல்லை என்று மருவி வழங்கப்படுகிறது.
27) “திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி” என்று கூறியவர் யார்?
A) அப்பர்
B) சுந்தரர்
C) திருஞானசம்பந்தர்
D) மாணிக்கவாசகர்
விளக்கம்: “திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி” என்று திருநெல்வேலியின் பெருமைய உரைத்தவர் திருஞானசம்பந்தர்.
28) “தண்பொருநைப் புனல் நாடு” என்று அழைக்கப்படும் ஊர் எது?
A) கோவை
B) மதுரை
C) திருநெல்வேலி
D) சேலம்
விளக்கம்: “தன்பொருநைப் புனல் நாடு” என்று அழைக்கப்படும் ஊர் திருநெல்வேலி. இங்கு பொருநை நதி பாயந்ததை இவ்வரிகள் உணர்த்துகின்றன.
29) “தன்பொருநைப் புனல் நாடு” என்று திருநெல்வேலியின் சிறப்பை போற்றியவர் யார்?
A) சேக்கிழார்
B) அப்பர்
C) சுந்தரர்
D) சம்பந்தர்
விளக்கம்: “தன்பொருநைப் புனல் நாடு” என்று திருநெல்வேலியில் பொருநை நதி பாய்ந்த பெருமையைக் கூறியவர் சேக்கிழார்.
30) “பொதியி லாயினும் இயம மாயினும்
பதியெழு அறியாப் பழங்குடி” – இவ்வடிகள் இடம் பெற்ற நூல் எது?
A) மணிமேகலை
B) சிலப்பதிகாரம்
C) வளையாபதி
D) குண்டலகேசி
விளக்கம்: இவ்வரிகள் இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ளன. இளங்கோவடிகள் பொதிகை மலைக்கு முதலிடம் கொடுத்துப் பாடுகிறார்.
31) திருநெல்வேலியின் சிறப்புமிக்க மலை எது?
A) குற்றாலமலை
B) திரிகூடமலை
C) பொதிகைமலை
D) இமயமலை
விளக்கம்: திருநெல்வேலி மாவட்டம் மலை வளம் மிகுந்த பகுதியாகும். இப்பகுதியின் சிறப்புமிக்க மலையாகிய பொதிகை மலை இலக்கியங்களில் பாராட்டப்பட்டுள்ளது.
32) திருகூடமலை என வழங்கப்படும் மலை எது?
A) குற்றாலமலை
B) ஆனைமலை
C) பொதிகை மலை
D) விந்தியமலை
விளக்கம்: திரிகூடமலை என வழங்கப்படும் மலை குற்றால மலை ஆகும். இது தற்போது திருநெல்வேலியில் புகழ் பெற்ற சுற்றுலா இடமாக திகழ்கிறது.
33) “வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கொஞ்சும்” என்ற பாடலைப் பாடியவர் யார்?
A) திரிகூட இராசப்பக்கவிராயர்
B) அப்பர்
C) சுந்தரனார்
D) சம்பந்தர்
விளக்கம்: இப்பாடலைப் பாடியவர் திரிகூட இராசப்பக் கவியராயர். தாம் எழுதிய குற்றாலக் குறவஞ்சி நூலில் குற்றால மலையின் புகழைப் பாடியுள்ளார்.
34) திருநெல்வேலிப் பகுதியை வளம் செழிக்கச் செய்யும் ஆறு எது?
A) பாலாறு
B) முத்தாறு
C) தாமிரபரணி ஆறு
D) காவிரி
விளக்கம்: திருநெல்வேலி பகுதியை வளம் செழிக்கச் செய்யும் ஆறு தாமிரபரணி ஆகும். இதனைத் தண்பொருநை நதி என்று முன்னர் அழைத்தனர். இது பச்சையாறு, மணிமுத்தாறு, சிற்றாறு, காரையாறு, சேர்வலாறு, கடனாநதி எனப் பல கிளை ஆறுகளாகப் பிரிந்து திருநெல்வேலியை நீர்வளம் மிக்க மாவட்டமாகச் செய்கிறது.
35) திருநெல்வேலி மாவட்டப் பொருளாதாரத்தில் முதன்மையாக பங்கு வகிப்பது எது?
A) நெசவுத் தொழில்
B) மீன்பிடித்தொழில்
C) உழவுத்தொழில்
D) வணிகம்
விளக்கம்: திருநெல்வேலி மாவட்டப் பொருளாதாரத்தில் முதன்மையாக பங்கு வகிப்பது உழவுத்தொழில். தாமிரபரணி ஆற்றின் மூலம் இங்கு விவசாயம் நடைபெறுகிறது. இங்கு குளத்துப் பாசனமும், கிணற்றுப் பாசனமும் கூடப் பயன்பாட்டில் உள்ளன.
36) நெல்லிக்காய் உற்பத்தியில் தமிழகத்தில் முதலிடம் வகிப்பது எது?
A) நெல்லை
B) மதுரை
C) திருவாரூர்
D) கரூர்
விளக்கம்: நெல்லிக்காய் உற்பத்தியில் தமிழகத்தில் முதலிடம் வகிப்பது நெல்லை எனப்படும் திருநெல்வேலி ஆகும். இதேபோல், கடலோர மற்றும் உள்நாட்டு மீன்பிடித் தொழிலும் இம்மாவட்டத்தில் சிறப்பாக நடைபெறுகிறது.
37) இராதாபுரம, நாங்குநேரி, அம்பாசமுத்திரம், தென்காசி போனற் பகுதிகளில் பெருமளவில் பயிரிப்படும் பயிர் எது?
A) பருத்தி
B) நெய்
C) கரும்பு
D) வாழை
விளக்கம்: இராதாபுரம், நாங்குநேரி, அம்பாசமுத்திரம், தென்காசி போன்ற பகுதிகளில் வாழை பெருமளவில் பயிரிடப்படுகிறது. இங்கு விளையும் வாழைத்தார்கள் தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகம், கேரளம் போன்ற பிற மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
38) தாமிரபரணி கடலோடு கலக்குமிடத்தில் எந்த துறைமுகம் இருந்தது?
A) முசிறி
B) பூம்புகார்
C) தொண்டி
D) கொற்கை
விளக்கம்: தாமிரபரணி கடலோடு கலக்குமிடத்தில் கொற்கை என்னும் துறைமுகம் இருந்தது. இங்கு முத்துக்குளித்தல் சிறப்பாக நடைபெற்றதாகத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.
39) “முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை” என்று கூறும் நூல் எது?
A) அகநானூறு
B) புறநானூறு
C) நற்றிணை
D) குறுந்தொகை
விளக்கம்: “முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்னுறை” என்று கொற்கையில் முத்துக்குளித்தலை நற்றிணை உரைக்கிறது. கொற்கையில் விளைந்த பாண்டிய நாட்டு முத்து உலகப் புகழ் பெற்றதாக விளங்கியது.
40) “கொற்கையில் பெருந்துறை முத்து” என்று கூறும் நூல் எது?
A) நற்றிணை
B) அகநானூறு
C) புறநானூறு
D) குறுந்தொகை
விளக்கம்: “கொற்கையில் பெருந்துறை முத்து” என்று அகநானூறு உரைக்கிறது
41) யவனர்கள் எனப்படுவோர்கள் யார்?
A) கிரேக்க நாட்டவர்
B) ரோம் நாட்டவர்
C) அரேபிய நாட்டவர்
D) A மற்றும் B
விளக்கம்: கிரேக்கம், உரோமாபுரி நாடுகளைச் சேர்ந்தவர்களான யவனர்கள் கொற்கை முத்துகளை விரும்பி வாங்கிச் சென்றனர்.
42) “திங்கள் நாள்விழா மல்கு திருநெல்
வேலியுறை செல்வர் தாமே” என்ற வரிகளைப் பாடியவர் யார்?
A) அப்பர்
B) சுந்தரர்
C) திருஞானசம்பந்தர்
D) மாணிக்க வாசகர்
விளக்கம்: பொருநை எனப்படும் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நெல்லை மாநகரின் அமைப்பு சிறப்பானது. நகரின் நடுவே நெல்லையப்பர் திருக்கோவில் அமைந்துள்ளது. கோவிலைச் சுற்றி 4 பக்கங்களிலும் மாட வீதிகள் அமைந்துள்ளன. அவற்றைச் சுற்றித் தேரோடும் வீதிகள் அழகுற அமைந்துள்ளன. இங்குத் திங்கள்தோறும் திருவிழா நடைபெறும் என்பதை மேற்கண்ட தேவாரப் பாடலில் சம்பந்தர் கூறியுள்ளார்.
43) அரசனால் தண்டிக்கப்பட்டவர்கள் சிறை வைக்கப்பட்டதாகத் திருநெல்வேலியில் கூறப்படும் இடம் எது?
A) கூழைக்கடைத் தெரு
B) காவற்புரைத் தெரு
C) அக்கசாலைத் தெரு
D) பேட்டைத் தெரு
விளக்கம்: அரசால் தண்டிகப்பட்டவர்கள் சிறை வைக்கப்படும் இடம் காவற்புரைத் தெரு ஆகும். திருநெல்வேலியில் இது போன்ற பல தெருக்கள் பழமைக்குச் சான்றாக உள்ளன.
44) பொருத்துக
அ. காவற்ப்புரைத் தெரு – 1. தானியக் கடைத்தெரு
ஆ. அக்கசாலைத் தெரு – 2. வணிகம்
இ. பேட்டை – 3. அணிகள் மற்றும் நாணயம்
ஈ. கூழைக்கடைத் தெரு – 4. சிறைச்சாலை
A) 1, 2, 3, 4
B) 2, 3, 4, 1
C) 3, 4, 1, 2
D) 4, 3, 2, 1
விளக்கம்: காவற்புரைத்தெரு – சிறைச்சாலை
அக்கசாலைத்தெரு – தானியக் களஞ்சியம்
பேட்டைத்தெரு – வணிகம் நடைபெற்ற இடம்
கூழைக்கடைத் தெரு – தானியக் கடைத்தெரு
45) ஆதிச்சநல்லூர் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தது?
A) தூத்துக்குடி
B) திருநெல்வேலி
C) புதுக்கோட்டை
D) கரூர்
விளக்கம்: திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஆதிச்சநல்லூர் என்னும் இடத்தில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் இறந்தவர்களின் உடல்களைப் புதைக்கப் பழந்தமிழர் பயன்படுத்திய முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ன. இவ்வூர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது.
46) இரட்டை நகரங்கள் எனப்படுபவை எவை?
A) திருநெல்வேலி, பாளையங்கோட்டை
B) திருநெல்வேலி, தூத்துக்குடி
C) திருநெல்வேலி, புதுக்கோட்டை
D) பாளையங்கோட்டை, தூத்துக்குடி
விளக்கம்: தாமிரபரணி ஆற்றில் மேற்குக் கரையில் திருநெல்வேலியும், கிழக்குக் கடற்கரையில் பாளையங்கோட்டையும் அமைந்துள்ளன. இவை ‘இரட்டை நகரங்கள்’ எனப்படுகின்றன.
47) தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு எனப்படுவது எது?
A) பாளையங்கோட்டை
B) திருநெல்வேலி
C) ஆதிச்சநல்லூர்
D) தூத்துக்குடி
விளக்கம்: பாளையங்கோட்டையில் அதிகளவில் கல்வி நிலையங்கள் இருப்பதால் இது “தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு” எனப்படுகிறது.
48) தவறானக் கூற்றைத் தேர்க.
A) பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறானை நெல்லை நகர மக்கள் வரவேற்ற இடம் பாண்டியாபுரம் எனப் பெயர் பெற்றது.
B) பாண்டிய மன்னனின் மனைவி மங்கையர்கரசியை மகளின் வரவேற்ற இடம் திருமங்கை நகர் எனப் பெயர் பெற்றது.
C) நாயக்க மன்னரின் தளவாயாக விளங்கிய ஆரியநாதரின் வழித் தோன்றல் வீரராகவர். இவரது பெயரில் அமைந்து ஊர் வீரராகவபுரம்.
D) வீரராகவரின் துணைவியார் பெயரில் அமைந்த ஊர் திருமங்கை நகர் விளக்கம்: வீரராகவரின் துணைவியார் பெயரில் அமைந்த ஊர் மீனாட்சிபுரம். துணைவியார் பெயர் மீனாட்சி அம்மையார்
49) குலசேகரப் பட்டினம் எங்கு உள்ளது?
A) திருநெல்வேலி
B) தூத்துக்குடி
C) கரூர்
D) திருச்சி
விளக்கம்: சேரன்மாதேவி, கங்கைகொண்டான், திருமலையப்புரம், வீரபாண்டியப்பட்டினம், குலசேகரப்பட்டினம் போன்ற ஊர்கள் பண்டைய வரலாற்றை நினைவூட்டும் வகையிலும், பாளையங்கோட்டை, உக்கிரன்கோட்டை,
செங்கோட்டை என்னும் பெயர்கள் திருநெல்வேலியில் கோட்டைகள் பல இருந்தமைக்கும் சான்றாக விளங்குகின்றன.
50) அகத்தியர் வாழ்ந்த மலை எது?
A) குற்றால மலை
B) திரகூட மலை
C) பொதிகை மலை
D) ஆனை மலை
விளக்கம்: அகத்தியர் பொதிகை மலையில் வாழ்ந்தார். சங்கப் புலவரான மாறோகத்தது நப்பசலையார், நம்மாழ்வார், பெரியாழ்வார், குமரகுருபரர், திரிகூடராசப்பக் கவிராயர், கவிராசப் பண்டிதர் ஆகியோர் திருநெல்வேலியில் பிறந்து தமிழுக்குச் செழுமை சேர்த்துள்ளனர்.
51) யாரை தமிழின்பால் ஈர்த்த பெருமைக்கு உரியது திருநெல்வேலி?
A) ஜி.யு.போப்
B) கால்டுவெல்
C) வீரமாமுனிவர்
D) அனைவரும்
விளக்கம்: ஜி.யு.போப், கால்டுவெல், வீராமுனிவர், போன்றோரை தமிழன்பால் ஈர்த்த பெருமைக்கு உரியது திருநெல்வேலி.
52) திருநெல்வேலி எந்த மன்னர்களோடு தொடர்புடையது?
A) சேர
B) சோழ
C) பாண்டிய
D) பல்லவ
விளக்கம்: திருநெல்வேலி பாண்டிய மன்னர்களோடு தொடர்புடையது. கொற்கை துறைமுக முத்து உலகப் புகழ் பெற்றது.
53) பொருத்துக.
அ. தண்பொருநை – 1. பொன் நாணயங்கள் உருவாக்கும் இடம்
ஆ. அக்கசாலை – 2. குற்றாலம்
இ. கொற்கை – 3. தாமிரபரணி
ஈ. திரிகூடமலை – 4. முத்துக்குளித்தல்
A) 3, 1, 4, 2
B) 3, 1, 2, 4
C) 1, 3, 4, 2
D) 1, 4, 2, 3
விளக்கம்: தன்பொருநை – தாமிரபணி
அக்கசாலை – பொன் நாணயங்கள் உருவாக்குமிடம்
கொற்கை – முத்துக்குளித்தல்
திரிகூடமலை – குற்றாலம்
54) காவற்புரை என்பதன் பொருள் என்ன?
A) காவல்காரன்
B) தானியம்
C) சிறைச்சாலை
D) குதிரைக்கொட்டில்
விளக்கம்: காவற்புரை – சிறைச்சாலை
கூலம் – தானியம்
55) தேசிகவிநாயகனார் தமிழை அழுத்தமாக ஆர்வத்தோடு கற்ற இடம் எது?
A) எட்டயபுரம்
B) திருநெல்வேலி
C) கன்னியாகுமரி
D) எதுவுமில்லை
விளக்கம்: தேசியகவிநாயகனார் கன்னியாகுமரிப் பக்கம் அதாவது நாஞ்சில் நாட்டில் பிறந்து வளர்ந்தவராய் இருந்தாலும் அவர் தமிழை அழுத்தமாகவும் ஆர்வத்தோடும் கற்ற இடம் திருநெல்வேலி. பாரதி பிறந்த இடம் எட்டையபுரம்.
56) வெங்கடேசுர எட்டப்ப ராஜாவைப் பற்றிப் பல பாடல்கள் பாடியவர் யார்?
A) பாரதியார்
B) பாரதிதாசன்
C) கடிகைமுத்துப் புலவர்
D) பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
விளக்கம்: கோயில்பட்டியிலிருந்து கிழக்கே எட்டு மைல் தூரத்தில்தான் எட்டையபுரம் இருக்கிறது. அங்கே சுமார் 200 வருஷங்களுக்கும் முன் இருந்தவர் கடிகைமுத்துப் புலவர். அவர் வெங்கடேசுர எட்டப்ப ராஜாவைப் பற்றி பல
பாடல்கள் பாடியுள்ளார்.
57) முக்கூடல் பள்ளு எந்த இடத்தைப் பற்றிய பிரபந்த நூல்?
A) திருநெல்வேலி
B) சீவலப்பேரி
C) எட்டையப்புரம்
D) தூத்துக்குடி
விளக்கம்: மணியாச்சியிலிருந்து ஏழெட்டு மைல் தூரத்தில் தாமிரபரணி நதியும் சிற்றாறும் கலக்கற இடம்தான் சீவலப்பேரி என்கிற முக்கூடல். முக்கூடல் பள்ளு என்னும் பிரபந்தம் முக்கூடலைப் பற்றியது தான்.
58) “ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்று தேகுறி
– மலையான மின்னல் ஈழ மின்னல் சூது மின்னதே” என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?
A) முத்தொள்ளாயிரம்
B) தேவாரம்
C) குற்றாலக் குறவஞ்சி
D) முக்கூடல் பள்ளு
விளக்கம்: சாராணமாக மழை பெய்யாத இடத்தில் மழை பெய்கிறது என்றால் குடியானவர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். குடியானவர்களுக்கு இடிமுழக்கம் தான் சங்கீதம், மின்னல் வீச்சுத்தான் நடனம் என்ற செய்தியைக் கூறுகிறது.
59) சுமார் எத்தனை ஆண்டுகளுக்கு முன் மதுரைப் பல்கலைக்கழகத்திலிருந்து பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் நெல்லைக்கு வந்தார்?
A) 100 ஆண்டுகள்
B) 200 ஆண்டுகள்
C) 300 ஆண்டுகள்
D) 400 ஆண்டுகள்
விளக்கம்: சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் மதுரைப் பக்கத்திலிரு;நது பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் நெல்லைக்கு வந்தார். நெல்லையப்பர் கோவிலில் எழுந்தருளியுள்ள காந்திமதித் தாயை தரிசித்தார். ரொம்ப் ரொம்ப உரிமைப் பாராட்டி, சுவாமிக்கு சிபாரிசு செய்ய வேண்டும் என்று முரண்டுகிறார்.
60) சீவைக் குண்டத்துப் பெருமாளைப் பற்றி பாடியவர் யார்?
A) கடிகைமுத்துப் புலவர்
B) பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
C) பிள்ளைப்பெருமாள்
D) நம்மாழ்வார்
விளக்கம்: திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்குப் போகிற மார்கத்திலே 18-வது மைலில் ஆற்றுக்கு வடகரையில் சீவைகுண்டம் இருக்கிறது. பிள்ளைப்பெருமாள் சீவைகுண்டத்துப் பெருமாளைப் பற்றிப் பாடியுள்ளார்.
61) தமது ஈடுபாட்டை 1000 தமிழ்பாட்டில் வெளியிட்ட ஆழ்வார் யார்?
A) பேயாழ்வார்
B) பூதத்தாழ்வார்
C) ஆண்டாள்
D) நம்மாழ்வார்
விளக்கம்: நம்மாழ்வாரின் அவதார ஸ்தலமான ஆழ்வார் திருநகரி பூர்வத்தில் திருக்குருகூர் எனப்பட்டது. நம்மாழ்வார் தமது ஈடுபாட்டை ஆயிரம் தமிழ்ப்பாட்டில் (திருவாய்மொழியில்) வெளியிட்டார். இது தமிழுக்குக் கிடைத்த யோகம்.
62) முத்தொள்ளாயிர ஆசிரியர் எத்தனை வருஷத்துக்கு முன்னிருந்த ஒரு பெருங்கவிஞர்?
A) சுமார் 200 வருடம்
B) சுமார் 300 வருடம்
C) சுமார் 2000 வருடம்
D) சுமார் 3000 வருடம்
விளக்கம்: சுமார் 2000 வருஷத்துக்கு முன்னிருந்து ஓரு பெருங்கடலின் முத்தொள்ளாயிர ஆசிரியர். அவர், மேற்கே ரோமாபுரி, கிரேக்கதேசம் முதல் கிழக்கே சைனா வரை கொற்கையிலிருந்து முத்து வணிகம் நடைபெற்ற செய்தியை பாடலாய் பாடினார்.
63) தமிழ்ப் புலவர்களுக்குப் பெருங்கொடை கொடுத்து வந்தவர் யார்?
A) உமறுப்புலவர்
B) சீதக்காதி
C) நமசிவாயப் புலவர்
D) கடிகைமுத்துப் புலவர்
விளக்கம்: காயல்பட்டணத்தில் 250 வருஷத்துக்கு முன் சீதக்காதி என்ற பெரிய வணிகர் இருந்தார். அவர் தமிழ்ப்புலவர்களுக்கு பெருங்கொடை கொடுத்து வந்தார்.
64) முற்காலத்திய திருநெல்வேலிக்கு_______என்னும் பெயர் இருந்துள்ளது?
A) வேணுவனம்
B) மூங்கில்காடு
C) நெல்லை
D) A மற்றும் B
விளக்கம்: முற்காலத்தில் திருநெல்வேலிக்கு வேணுவனம் என்னும் பெயரும் இருந்துள்ளது. மூங்கில்காடு என்பது அதன் பொருளாகும். மூங்கில் நெல் மிகுதியாக விளைந்தமையால் அப்பகுதிக்கு நெல்வேலி என்னும் பெயர் ஏற்பட்டருக்கலாம் எனவும் கருதுவர்.
65) “பூமாது இருந்தென் புவிமாது இருந்தென் இப்பூதலத்தில்” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
A) கடிகைமுத்துப்புலவர்
B) நமசிவாயப் புலவர்
C) சீதக்காசி
D) பிள்ளைப்பெருமாள்
விளக்கம்: புவலர்களுக்கு பெருங்கொடை கொடுத்து வந்த வள்ளல் சீதக்காதியின் இறப்பை அறிந்ததும் நமசிவாய புலவர் “பூமாது இருந்தென் புவிமாது இருந்தென் இப்பூதலத்தில் நாடாது இருந்தென்ன நாமும் இருந்தென்ன நாவலர்க்குக் கோமான் அழகமர் மால்சீதக் காதி கொடைக்கரத்துச் சீமான் இறந்திட்ட போதே புலமையும் செத்ததுவே” என்று அலறுகின்றார்.
66) “திருப்புகழ்”-யை பாடியவர் யார் ?
A) அருணகிரிநாதர்
B) அண்ணாமலையார்
C) அழகிய சொக்கநாதர்
D) திருஞான சம்பந்தர்
விளக்கம்: திருச்செந்தூரைச் சேர்ந்த அருணகிரிநாதர் திருப்புகழை பாடியுள்ளார். இவர் ஏரிநீர் நந்தவனங்களில் கட்டிக் கிடப்பதால் சேல்மீன்கள் துள்ளிக் குதிக்கவும் பூஞ்செடி கொடிகளையே அழிக்கவும் தலைப்பட்டன என்று பாடியுள்ளார்.
67) காவடிச் சிந்தை பாடியவர் யார்?
A) அருணகிரிநாதர்
B) அண்ணாமலையார்
C) அழகிய சொக்கநாதர்
D) திருஞான சம்பந்தர்
விளக்கம்: இக்காலத்தில் பாடுகிற காவடிபாட்டெல்லாம் கழுகுமலை முருகன் மேல் தான். இக்காவடிச் சிந்தைப் பாடியவர் அண்ணாமலையார். காவடிப்பாட்டைக் கேட்க வேண்டுமானால், பம்பை, மேளம், ஆட்டம் எல்லாவற்றோடும் கேட்டால்தான் ரஸமும், சக்தியும் தெரியும்.
68) “வாடா” என அழைத்து வாழ்வித்தால் அம்ம உனைக் கூடாதென் றார் தடுப்பார் கோமதித்தாய் ஈஸ்வரியே என்ற பாடலைப் பாடியவர் யார்?
A) அருணகிரிநாதர்
B) அண்ணாமலையார்
C) அழகிய சொக்கநாதர்
D) திருஞான சம்பந்தர்
விளக்கம்: கழுகு மலையிலிருந்து சுமார் 12 மைல் தொலைவில் சங்கரன் கோவில் உள்ளது. அங்குதான் கோமதி தாயைப் பற்றி உண்மையான பக்தியும் தமிழ்ப் பண்பும் வாய்ந்த ஒரு பாடல். அதைப் பாடியவர் திருநெல்வேலி அழகிய சொக்கநாதர்.
69) திருக்கருவை வெண்பா அந்தாதி என்ற நூலை எழுதியவர் யார்?
A) அருணகிரிநாதர்
B) அழகிய சொக்கநாதர்
C) அண்ணாமலையார்
D) ஆசிரியர் பெயர் தெரியவில்லை
விளக்கம்: சங்கரன் கோயிலுக்கு வடக்கே 8 மைல் தூரத்தில் கருவைநல்லூர் உள்ளது. இதற்குக் கரிவலம் வந்த நல்லூர் என்றும் பெயர். இத்திருத்தலத்தின் சிறப்பில் தோய்ந்த புலவர் ஒருவர் திருக்கருவை வெண்பா அந்தாதி, பதிற்றுப்பத்து அந்தாதி, கலித்துறை அந்தாதி என்ற 3 நூல்களைப் பாடியிருக்கிறார்
70) “நுண் துளி தூங்கும் குற்றாலம்” என்று பாடியவர் யார்?
A) அருணகிரிநாதர்
B) அழகிய சொக்கநாதர்
C) அண்ணாமலையார்
D) ஆசிரியர் பெயர் தெரியவில்லை
விளக்கம்: சுமார் 1300 வருஷங்களுக்கு முன் திருஞான சம்பந்தர் குற்றாலம் சென்றார். பின் “நுண் துளி தூங்கும் குற்றாலம்” என்று பாடினார்.
71) “உற்றாரை யான்வேண்டேன்” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
A) அப்பர்
B) சுந்தரர்
C) திருஞானசம்பந்தர்
D) மாணிக்கவாசகர்
விளக்கம்: “உற்றாரை யான்வேண்டேன் ஊர் வேண்டேன்” என்ற பாடலைப் பாடியவர் மாணிக்க வாசகர்.
72) “கயிலை எனும் வடமலைக்குத் தெற்கு மலை அம்மே” என்ற பாடலின் அசிரியர் யார்?
A) அப்பர்
B) மாணிக்கவாசகர்
C) நக்கீரர்
D) திரிகூடராசப்பக் கவிராயர்
விளக்கம்: “கயிலை எனும் வடமலைக்குத் தெற்குமலை அம்மே!
கனகமகா மேருவென நிற்கும்மலை அம்மே!
துயிலும் அவர் விழிப்பாகி அகிலம் எங்கும் தேடும்
துங்கர்திரி கூடமலை எங்கள்மலை அம்மே!”
இப்பாடலை திரிகூடராசப்பக் கவிராயர் பாடியுள்ளார். இப்பாடல் குற்றாலக் குறவஞ்சி நூலின் ஒரு பகுதியாகும். குற்றாலக் குறவஞ்சி. அஃது உண்மையான தமிழ்ப் பண்பும் கவிப்பண்பும் வாய்ந்தது. 250 ஆண்டுகளுக்கு முன் குற்றாலத்துக்கு வந்தவர் திரிகூட ராசப்பக் கவிராயர்.
73) திருநெல்வேலிச் சீமை எனப்படுவது எது?
A) திருநெல்வேலி
B) தூத்துக்குடி
C) A மற்றும் B
D) எதுவுமில்லை
விளக்கம்: திருநெல்வேலிச் சீமை என்று குறிப்பிடப்படுவது இன்றைய திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் இணைந்த பகுதியாகும்.
74) டி.கே. சிதம்பரநாதர் என்ன தொழில் செய்து வந்தார்?
A) காவலர்
B) சுபேதார்
C) வழக்கறிஞர்
D) நீதிபதி
விளக்கம்: டி.கே.சி என அழைக்கப்படும் டி.கே. சிதம்பரநாதர் வழக்கறிஞர் தொழில் செய்தவர். தமிழ் எழுத்தாளராகவும் திறனாய்வாளராகவும் புகழ் பெற்றவர்.
75) “இரசிகமணி” என்று சிறப்பிக்கப்பட்டவர் யார்?
A) அண்ணாமலையார்
B) டி.கே.சிதம்பரநாதர்
C) முடியரசன்
D) மோகனரங்கன்
விளக்கம்: டி. கே. சிதம்பரநாதர் “இரசிகமணி” எனச் சிறப்பிக்கப்பட்டார். இவரது இதய ஒலி என்னும் நூலில் இருந்தது. “திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்” என்னும் கட்டுரை எடுக்கப்பட்டது.
76) தமது வீட்டில் “வட்டத்தொட்டி” என்னும் பெயரில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வந்தவர் யார்?
A) அண்ணாமலையார்
B) டி.கே.சிதம்பரநாதர்
C) முடியரசன்
D) மோகனரங்கன்
விளக்கம்: தமது வீட்டில் “வட்டத்தொட்டி” என்னும் பெயரில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வந்தவர் டி.கே. சிதம்பரநாதர்
77) “குற்றால முனிவர்” என அழைக்கப்பட்டவர் யார்?
A) அண்ணாமலையார்
B) டி.கே.சிதம்பரநாதர்
C) முடியரசன்
D) மோகனரங்கன்
விளக்கம்: டி.கே.சிதம்பரநாதர், கடித இலக்கியத்தின் முன்னோடி, தமிழிசைக் காவலர், வளர்த்தமிழ் ஆர்வலர் குற்றால முனிவர் எனப் பலவாறாகப் புகழப்படுகிறார்.
78) ஒரு செய்யுளைச் சொல்லாலும் பொருளாலும் அழகு பெறச் செய்தலை எவ்வாறு அழைப்பார்?
A) உவமை அணி
B) எடுத்துக்காட்டு உவமை அணி
C) இல்பொருள் உவமை அணி
D) அணி
விளக்கம்: அணி என்னும் சொல்லுக்கு அழகு என்னும் பொருள். ஒரு செய்யுளைச் சொல்லாலும், பொருளாலும் அழகு பெறச் செய்தலை அணி என்பர்.
79) ஒரு தொடரில் வரும் “போல” “போன்ற” என்பதே________ஆகும்?
A) உவமானம்
B) உவமை
C) உவமேயம்
D) உமவ உருபுகள்
விளக்கம்: மயில் போல ஆடினாள்
மீன் போன்ற கண்
இத்தொடர்களில் நடனம் ஆடும் பெண்ணோடு மயிலையும் கண்ணுடன் மீனையும் ஒப்பிட்டுள்ளனர். இவ்வாறு ஒப்பிட்டுக் கூறப்படும் பொருளை(மயில், மீன்) உவமை அல்லது உவமானம் என்பர். உவமையால் விளக்கபடும் பொருளை உவமேயம் என்பர். ‘போல’, ‘போன்ற’ என்பவை உவம உருபுகள்
80) “அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வாரைப் பொறுத்தல் தலை” – இதில் பயின்று வந்துள்ள அணி என்ன?
A) உவமை அணி
B) எடுத்துகாட்டு உவமை அணி
C) இல்பொருள் உவமையணி
D) வஞ்சப்புகழ்ச்சி அணி
விளக்கம்: ஒரு பாடலில் உவமை, உவமேயம் வந்து உவம உருபு வெளிப்படையாக வந்தால் அது உவமை அணி எனப்படும். இக்குறளிலுள்ள உவமை – பூமி தன்னைத் தோண்டுபவரைப் பொறுத்துக் கொள்ளுதல்
உவமை – நாம் தம்மை இகழ்ந்து பேசுவரைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்
உவம உருபு – போல
81) உவம உருபுகளில் பொருந்தாததை தேர்க
A) போல, புரைய, அன்ன
B) இன்ன, அற்று, மான
C) கடுப்ப, ஒப்ப, உறழ
D) நனி, கூர், கழி
விளக்கம்: நனி, கூர், கழி, சால, தவ அகியவை உரிச்சொற்றொடரைக் குறிக்கும் சொற்கள்
போல, புரைய, அன்ன, இன்ன, அன்ன, அற்று, மான, கடுப்ப, ஒப்ப, உறழ போன்றவை உவம உருபுகளாகும்.
82) “தொட்டணைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றணைத்து ஊறும் அறிவு” – இதில் பயின்று வந்துள்ள அணி என்ன?
A) உவமை அணி
B) எடுத்துகாட்டு உவமை அணி
C) சொற்பொருள் பின்வருநிலை அணி
D) பொருள் பின்வருநிலை அணி
விளக்கம்: உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வந்தால் அது எடுத்துகாட்டு உவமை அணி.
இக்குறளிலுள்ள,
உவமை – தொட்டனைத்து ஊறும் மணற்கேணி
உவமேயம் – மாந்தர்க்கு கற்றனைத்து ஊறும் அறிவு
உவம உருபு – ‘அது போல’ என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது.
83) உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவது எவ்வகை அணி?
A) எடுத்துகாட்டு உவமை அணி
B) பின்வருநிலையணி
C) இல்பொருள் உவமையணி
D) உருவக அணி
விளக்கம்: காளை கொம்பு முளைத்த குதிரை போல் பாய்ந்து வந்தது. இத்தொடரில் ‘கொம்பு முளைத்த குதிரை போல்’ என்னும் உவமை வந்துள்ளன. உலகில் உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவது இல்பொருள்
உவமையணி ஆகும்.
84) “மலரன்ன பாதம்” – இத்தொடரைக் கொண்டு பின்வருவனவற்றுள் பொருந்தாததை தேர்க.
A) உவமை – மலர்
B) உவமேயம் – பாதம்
C) உவம உருபு – இன்ன
D) உவம உருபு – அன்ன
விளக்கம்: உவமை – மலர்
உவமேயம் – பாதம்
உவம உருபு – அன்ன
85) “தேன் போன்ற தமிழ்” – இதிலுள்ள உவமானம் எது?
A) தேன்
B) போன்ற
C) தமிழ்
D) தேன் போன்ற
விளக்கம்: உவமை – உவமானம் – தேன்
உவமேயம் – தமிழ்
உவம உருபு – போன்ற
86) “புலி போலப் பாய்ந்தான் சோழன்”- இதிலுள்ள உவம உருபு எது?
A) புலி
B) போல
C) பாய்ந்தான்
D) சோழன்
விளக்கம்: உவமை – புலி
உவமேயம் – பாய்ந்தான் சோழன்
உவம உருபு – போல
87) “மயிலொப்ப ஆடினாள் மாதவி”- இதிலுள்ள உவமேயம் எது?
A) மயில்
B) ஒப்ப
C) ஆடினாள்
D) மயிலொப்ப
விளக்கம்: உவமை – மயில்
உவமேயம் – ஆடினாள் மாதவி
உவம உருபு – ஒப்ப
88) பொருத்துக.
அ. பின்னலாடை நகரம் – 1. ஊட்டி
ஆ. மலைகளின் அரசி – 2. ஏற்காடு
இ. மலைக்கோட்டை நகரம் – 3. திருச்சி
ஈ. ஏழைகளின் ஊட்டி – 4. திருப்பூர்
A) 4, 3, 2, 1
B) 3, 2, 4, 1
C) 4, 1, 3, 2
D) 4, 1, 2, 3
விளக்கம்: பின்னலாடை நகரம் – திருப்பூர்
மலைகளின் அரசி – ஊட்டி
மலைக்கோட்டை – திருச்சி
ஏழைகளின் ஊட்டி – ஏற்காடு
89) பொருத்துக.
அ. தமிழகத்தின் தலைநகரம் – 1. திண்டுக்கல்
ஆ. நெற்களஞ்சியம் – 2. சிவகாசி
இ.பூட்டு நகரம் – 3. சென்னை
ஈ. பட்டாசு நகரம் – 4. தஞ்சாவூர்
A) 2, 1, 4, 3
B) 4, 3, 2, 1
C) 3, 4, 1, 2
D) 1, 2, 3, 4
விளக்கம்: தமிழகத்தின் தலைநகரம் – சென்னை
நெற்களஞ்சியம் – தஞசாவூர்
பூட்டு நகரம் – திண்டுக்கல்
பட்டாசு நகரம் – சிவகாசி
90) பொருத்துக.
அ. தேர் அழகு நகரம் – 1. கொடைக்கானல்
ஆ. தூங்கா நகரம் – 2. கன்னியாகுமரி
இ.தெற்கு எல்லை – 3. திருவாரூர்
ஈ. மலைகளின் இளவரசி – 4. மதுரை
A) 4, 3, 2, 1
B) 3, 4, 2, 1
C) 3, 4, 1, 2
D) 2, 3, 4, 1
விளக்கம்: தேர் அழகு நகரம் – திருவாரூர்
தூங்கா நகரம் – மதுரை
தெற்கு எல்லை – கன்னியாகுமரி
மலைகளின் இளவரசி – கொடைக்கானல்
91) பொருத்துக.
அ. புலிகள் காப்பகம் – 1. ஈரோடு
ஆ. கர்மவீரர் நகரம் – 2. முண்டந்துறை
இ.மாங்கனித் திருவிழா – 3. விருதுநகர்
ஈ. மஞ்சள் மாநகரம் – 4. காரைக்கால்
A) 3, 4, 2, 1
B) 2, 3, 1, 4
C) 3, 2, 4, 1
D) 2, 3, 4, 1
விளக்கம்: புலிகள் காப்பகம் – முண்டந்துறை
கர்மவீரர் நகரம் – விருதுநகர்
மாங்கனித் திருவிழா – காரைக்கால்
மஞ்சள் மாநகரம் – ஈரோடு
92) எனது தாயார் என்னை_________காத்து வந்தார்?
A) கண்னை இமை காப்பது போல
B) தாயைக் கண்ட சேயைப் போல
C) இஞ்சி தின்ற குரங்கு போல
D) உள்ளங்கை நெல்லிக்கனி போல
விளக்கம்: என் தாயார் என்னை கண்ணை இமை காப்பது போல் காத்து வளர்த்தார்.
93) நானும் என் தோழியும்_______இணைந்து இருப்போம்.
A) தாயைக் கண்ட சேயைப் போல
B) நகமும் சதையும் போல
C) இஞ்சி தின்ற குரங்கு போல
D) எலியும் பூனையும் போல
விளக்கம்: நானும் என் தோழியும் நகமும் சதையும் போல இணைந்து இருப்போம்.
94) திருவள்ளுவரின் புகழை_________உலகமே அறிந்துள்ளது.
A) பசுமரத்தாணி போல்
B) உள்ளங்கை நெல்லிக்கனி போல
C) குன்றின் மேலிட்ட விளக்கு போல
D) நகமும் சதையும் போல
விளக்கம்: திருவள்ளவரின் புகழை உள்ளங்கை நெல்லிக்கனி போல உலகமே அறிந்துள்ளது.
95) அப்துல் கலாமின் புகழ்____________உலகெங்கும் பரவியது?
A) குடத்துக்குள் இட்ட விளக்கு போல
B) உள்ளங்கை நெல்லிக்கனி போல
C) குன்றின்மேலிட்ட விளக்கு போல
D) எலியும் பூனையும் போல
விளக்கம்: அப்துல் கலாமின் புகழ் குன்றின் மேலிட்ட விளக்கு போல உலகெங்கும் பரவியது.
96) சிறு வயதில் நாம் பார்த்த நிகழ்ச்சிகள் _________என மனதில் பதிந்தன.
A) கிணற்றுத் தவளை போல
B) பசுமரத்தாணி போல
C) உள்ளங்கை நெல்லிக்கனி போல
D) குன்றின்மேலிட்ட விளக்கு போல
விளக்கம்: சிறு வயதில் நாம் பார்த்த நிகழ்ச்சிகள் பசுமரத்தாணி போல மனதில் பதிந்தன.
97) பொருத்துக.
அ. உள்ளங்கை நெல்லிக்கனிபோல – 1. இணைதல்
ஆ. குன்றின்மேலிட்ட விளக்கு போல – 2. எதிர்ப்பு
இ. எலியும் பூனையும் போல – 3. பரவுதல்
ஈ. நகமும் சதையும் போல – 4. தெளிவு
A) 1, 2, 3, 4
B) 3, 4, 2, 1
C) 1, 3, 4, 2
D) 4, 3, 2, 1
விளக்கம்: உள்ளங்கை நெல்லிக்கனிபோல – தெளிவு
குன்றின்மேலிட்ட விளக்கு போல – பரவுதல்
எலியும் பூனையும் போல – எதிர்ப்பு
நகமும் சதையும் போல – இணைதல்
98) பொருத்துக.
அ. நாகரீகம் – 1. Irrigation
ஆ. நாட்டுப்புறவியல் – 2. Harvest
இ. அறுவடை – 3. Folklore
ஈ. நீர்ப்பாசனம் – 4. Civilization
A) 4, 3, 2, 1
B) 4, 3, 1, 2
C) 4, 3, 1, 2
D) 4, 3, 2, 1
விளக்கம்: நாகரீகம் – Civilization
நாட்டுப்புறவியல் – Folklore
அறுவடை – Harvest
நீர்ப்பாசனம் – Irrigation
99) பொருத்துக.
அ. அயல்நாட்டினர் – 1. Poet
ஆ. வேளாண்மை – 2. Foreigner
இ. கவிஞர் – 3. Agriculture
A) 2, 3, 1
B) 3, 2, 1
C) 1, 3, 2
D) 1, 2, 3
விளக்கம்: அயல்நாட்டினர் – Foreigner
வேளாண்மை – Agriculture
கவிஞர் – Poet
100) பொருத்துக.
அ. நெற்பயிர் – 1. Agronomy
ஆ. பயிரிடுதல் – 2. Cultivation
இ. உழவியல் – 3. Paddy
A) 1, 3, 2
B) 2, 1, 3
C) 2, 3, 1
D) 3, 2, 1
விளக்கம்: நெற்பயிர் – Paddy
பயிரிடுதல் – Cultivation
உழவியல் – Agronomy