Unit -8 Part -1

 

பெண்கள்

முத்துலட்சுமி ரெட்டி

1. மாநில சமூக நல ஆலோசனை குழுவின் முதல் பெண் தலைவராக நிமிக்கப்பட்டவர்

 1. அன்னிபெசனட்
 2. முத்துலட்சுமி
 3. கோவிந்தம்மாள்
 4. சுந்தராம்பாள்

2. சென்னை மாகாண சட்டமன்றத்தின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் யார்?

 1. முத்துலட்சுமி ரெட்டி
 2. சரோஜினி நாயுடு
 3. மூவலூர் ராமாமிர்தம்
 4. ஆனந்தி கோபால் ஜோஷி

3. டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ் ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி ரூ __________

 1. ரூ. 12,000
 2. ரூ. 15,000
 3. ரூ. 20,000
 4. ரூ. 25,000

4. டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டியைப் பொறுத்தவரை பின்வரும் கூற்றுகளில் எது உண்மையானது?

1. இந்தியாவில் மருத்துவத்தில் பட்டம் பெற்ற முதல் பெண் ஆவார்.
2. பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் சட்டமன்ற உறுப்பினராவன்.
3. மகாராஜ கல்லூரியில் சேர்ந்த முதல் பெண் மாணவியாவார்.
4. சட்ட சபையின் முதல் பெண் தலைவராவார்.
 1. 1, 2 மற்றும் 4
 2. 2, 3 மற்றும் 4
 3. 1, 3 மற்றும் 4
 4. 1, 2, 3 மற்றும் 4

5. மூவலூர் இராமாமிருதம் அம்மையார் கல்வி உதவித்தொகை பெறத் தகுதியான பயனாளிகள்

 1. அனைத்து ஆரம்பப்பள்ளி மாணவர்கள்
 2. 1 முதல் 5ம் வகுப்ப வரை பயிலும் மாணவியர்
 3. 6 முதல் 12ம் வகுப்பு வரை தமிழக அரசுப் பள்ளிகளில் பயின்ற இளம் பட்ட வகுப்பு வரை பயிலும் மாணவர்
 4. பள்ளிக்கல்வி பயிலும் முதல் தலைமுறை மாணவியர் மட்டும்

6. சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் பயனாளிகள்

1. வயது வரம்பு இல்லை
2. வருமான வரம்பு இல்லை
3. ஆதரவற்ற விதவை
4. பயனாளிகள் பெண் குழந்தை வைத்திருக்க வேண்டும்.
  பின்வருபவற்றில் எது சரியான விடை
 1. (1) மற்றும் (2)
 2. (3)
 3. (3) மற்றும் (4)
 4. (4)

7. பின்வருவனவற்றை பொருத்துக

திட்டம்பெயர்
a. ஏழை விதவை மகளின் திருமண உதவி1. சத்யா அம்மையார்
b. விதவை மறுமணம்2. ஈ.வெ.ரா. மணியம்மையார்
c. அரச அனாதை இல்லங்கள்3. சத்தியவானி முத்து அம்மையார்
d. தையல் இயந்திரம் இலவசம் வழங்கல்4. டாக்டர். தர்மாம்பாள் அம்மையார்

(a) (b) (c) (d)
A) 4 2 3 1
B) 2 4 1 3
C) 3 1 4 2
d) 1 3 2 4

8. டாக்டர்‌ முத்துலெட்சுமி எந்த சமுதாய தீமைக்கு எதிராக போராடினார்‌?

 1. குழந்தைத்திருமணம்‌
 2. தேவதாசி அமைப்பு
 3. வரதட்சணை அமைப்பு
 4. பலதார மணம்‌

9. 1927-ம்‌ ஆண்டு-நவம்பர்‌ 2 ம்‌ தேதி யாருடைய தலைமையின்‌ கீழ்‌ மணி மேகலை சங்கம்‌ தேவதாசி பெண்களின்‌ சங்கக்‌ கூட்டத்தை கோயமுத்தூரில்‌ ஏற்பாடு செய்தது? ..

 1. செளத்திரி. வி கோணம்‌ பால்‌
 2. டாக்டர்‌ முத்துலெட்சுமி ரெட்டி
 3. திருமதி. அன்னம்மா ராஜா
 4. திருமதி. அன்னிபெசன்ட்‌

மூவலூர்‌ இராமாமிர்தம்‌

1. மூவலூர்‌ இராமாமிர்தம்‌ ________ மாவட்டத்தில்‌ பிறந்தார்‌.

 1. கடலூர்
 2. மயிலாடுதுறை
 3. தஞ்சாவூர்‌
 4. கன்னியாகுமரி

2. 1937-40ல்‌ நடைபெற்ற முதல்‌ இந்தி எதிர்ப்புப்‌ போராட்டத்தில்‌ கலந்து கொண்டவர்‌ யார்‌ என்பதைத்‌ தேர்ந்தெடுத்து எழுதுக :

 1. பத்மாவதி ஆஷார்‌
 2. லீலாவதி
 3. ருக்மணி இலக்ஷ்மிபதி
 4. மூவலூர்‌ இராமமிர்தம்‌

ருக்மணி லட்சுமிபதி

1. தமிழ் நாட்டில் உப்பு சட்டங்களை மீறியதற்காக அபராதம் கட்டிய முதல் பெண் ___________ ஆவார். (Reapeated Question)

 1. ருக்மணி லட்சுமிபதி
 2. அம்புஜம்மாள்
 3. லட்சுமி செகஸ்
 4. மூவலூர் இராமாமிர்தம்

2. தமிழகத்தில்‌ சட்ட மறுப்பு இயக்கத்தின்‌ போது உப்புச்‌ சட்டங்களை மீறியதற்காக அபராதம்‌ கட்டிய முதல்‌ பெண்மணி யார்‌? (Reapeated Question)

 1. ருக்மணிலட்சுமிபதி
 2. முத்துலட்சுமி அம்மையார்‌
 3. மூவலூர்‌ இராமாமிர்தம்‌
 4. அன்னி பெசன்ட்‌

3. 1926 ஆம்‌ ஆண்டு நடைபெற்ற “அகில உலக பெண்கள்‌ வாக்குரிமை ஒன்றிய மாநாட்டில்‌” இந்தியாவின்‌ சார்பில்‌ பங்கேற்றவர்‌ யார்‌?

 1. அன்னிபெசன்ட்‌
 2. மணியம்மை
 3. ருக்மணி லட்சுமிபதி
 4. விஜய லட்சுமி பண்டிட்‌

பெண்கள் (பிற வினாக்கள்)

1. 1987ல் தொடங்கப்பட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிக்கான ஆதரவுத் திட்டம், யாருக்கான நலத்திட்டம்?

 1. இளைஞர்கள்
 2. பெண்கள்
 3. மாற்றத்திறனாளிகள்
 4. மாணவர்கள்

2. ஆர்யா மகிளா சபாவை ஸ்தாபிப்பதில் அதிக உதவி செய்த திறமையான மராட்டிய பெண்

 1. பண்டிட் ரமாபாய்
 2. முத்துலெட்சுமி ரெட்டி
 3. அம்புஜாம்மாள்
 4. லெட்சுமி

3. இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். அவரின் பெயர்

 1. மீனாட்சி அரோரா
 2. மேனகா குருசாமி
 3. சத்தியஸ்ரீ சர்மிளா
 4. சந்தியா இராதாகிருஷ்ணன்

4. பெண் புதின எழுத்தாளர்களின் முன்னோடி யார்?

 1. இந்துமதி
 2. வக்ஷ்மி
 3. வை.மு. கோதை நாயகி
 4. இராஜம் கிருஷ்ணன்

6. இந்தியாவின் எந்த மாநில அரசு பெண் குழந்தைகளுக்கான “வாடலி பேட்டி” திட்டத்தை துவங்கியுள்ளது.

 1. மத்திய பிரதேசம்
 2. உத்தர்காண்ட்
 3. ஜார்க்கண்ட்
 4. ஜம்மு & காஷ்மீர்

7. பெண் குழந்தைக்கான புதிய சேமிப்பு திட்டத்தின் சரியான பெயரை கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றிலிருந்து தேர்வு செய்:

 1. சுரக்சா சம்ரித்தி திட்டம்
 2. சுகன்யா சம்ரித்தி திட்டம்
 3. சுகன்யா பீமா திட்டம்
 4. சுரக்சா பீமா திட்டம்

8. 1934ம் ஆண்ட மெட்ராஸ் தொகுதியில் நடைபெற்ற ஒன்பதாவது பெண்கள் மாநாட்டுக்கு தலைமை தாங்கிய பெண்மணியின் பெயரைக் குறிப்பிடுக

 1. டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி
 2. திருமதி. மார்க்கெரட் கரின்ஸ்
 3. பேபகம் ஷரிஜா ஹமித் அலி
 4. திருமதி. அன்னிபெசன்ட்

10. இந்திய பெண்கள் சங்கத்தின் செய்திதாளின் பெயர்

 1. ஸ்திரீ தர்மம்
 2. மதர் இந்தியா
 3. பெண்களின் உரிமை
 4. தாய்நாடு

11. சர்வதேச மகளிர் தினம் 19-ம் தேதி மார்ச் மாதம் முதல் முறையாக எந்த வரும் கொண்டாப்பட்டது?

 1. 1911
 2. 1913
 3. 1916
 4. 1921

12. தமிழ்நாட்டில்‌ நகரமயமாதல்‌ —— நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது என்பதை கீழடி அகழாய்வு கூறுகின்றது.

 1. 8-ம்நூற்றாண்டு பொ.ஆ.மு.
 2. 4-ம்‌ நூற்றாண்டு பொ.ஆ.மு.
 3. 5-ம்‌ நூற்றாண்டு பொ.ஆ.மு.
 4. 6-ம்நூற்றாண்டு பொ.ஆ.மு.

13. பெண்கள்‌ மேம்பாடு குறித்துக்‌ கீழ்வருவனவற்றுள்‌ எது/எவை சரியானது/சரியானவை ?

I. முடிவெடுத்தலில்‌ பெண்களின்‌ ஈடுபாட்டினை அதிகரித்தல்‌
II. பெண்களைத்‌ தொழில்‌ முனைவோராக ஊக்குவித்தல்‌
III. முறைசாரா அமைப்புகளில்‌ பெண்களின்‌ பணிநிலையினை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத்‌ தொடங்குதல்‌
 1. I மட்டும்‌
 2. I மற்றும்‌ III ஆகியன மட்டும்‌
 3. I மற்றும்‌ II ஆகியன மட்டும்‌
 4. I, II மற்றும்‌ III ஆகியவை

14. பொருத்துக

திட்டம்பெயர்
a. மகப்பேறு நல உதவித்‌ திட்டம்‌1. அன்னை தெரசா
b. வளரிளம்‌ பெண்கள்‌ மேம்பாட்டுத்‌ திட்டம்‌2. சத்தியவாணி முத்து அம்மையார்‌
c. இலவச தையல்‌ இயந்திரம்‌ வழங்கும்‌ திட்டம்‌3. ராஜீவ்‌ காந்தி
d. ஆதரவற்ற பெண்களுக்கு திருமண நிதி உதவித்‌ திட்டம்‌4. இந்திரா காந்தி

(a) (b) (c) (d)
A) 1 3 2 4
B) 4 2 3 1
C) 1 4 2 3
d) 4 3 3 1

15. “பெண்‌ வேலை பங்கேற்பு விகிதம்‌” அதிகம்‌ கொண்ட மாவட்டம்‌

 1. காஞ்சிபுரம்‌
 2. சென்னை
 3. கோயம்புத்தூர்‌
 4. பெரம்பலூர்‌

16. யாருடைய தலைமையின்‌ கீழ்‌ நவம்பர்‌ 2-ம்‌ தேதி 1927, மணிமேகலை சங்கம்‌ என்கிற தேவதாசி பெண்களின்‌ சங்க கூட்டம்‌ ஏற்பாடு செய்யப்பட்டது ?

 1. செளத்திரி வி. கோனாம்பாள்‌
 2. டாக்டர்‌ முத்துலெட்சுமி
 3. திருமதி அன்னம்மா ராஜா
 4. திருமதி அன்னி பெசண்ட்‌

17. இந்தியாவில்‌ _________ மாநிலம்‌ முதலில்‌ மகளிர்‌ உயிர்த்‌ தொழில்நுட்பப்‌ பூங்காவை தொடங்கியது.

 1. தமிழ்நாடு
 2. கேரளா
 3. குஜராத்‌
 4. பஞ்சாப்‌

18. பெண்கள்‌. மேம்பாட்டிற்கான துர்காபாய்‌ தேஷ்முக்‌ விருத பின்வரும்‌. எந்த அமைப்பிற்கு வழங்கப்படுகிறது?

 1. பெண்கள்‌ மேம்பாட்டு அமைப்பு
 2. தன்னார்வ அமைப்பு
 3. மத்திய சமூக நல வாரியம்‌
 4. மாநில சமூக நல வாரியம்‌