Unit -8 Part -3

 

தொடக்க கால கிளர்ச்சிகள்

1. சரியான இணைகளைத் தேர்க

1. ஒண்டிவீரன் – மருது சகோதரர்கள்
2. கோபால நாயக்கர் – திண்டுக்கல் கூட்டமைப்பு
3. குயிலி – புலித்தேவர்
4. முத்துவடுகநாதர் – காளையார் கோவில் போர்
  1. 1 மற்றும் 3 சரி
  2. 1 மற்றும் 2 சரி
  3. 2 மற்றும் 3 சரி
  4. 2 மற்றும் 4 சரி

2. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

i. பாளையக்காரர் முறை காக்கத்தியப் பேரரசின் நடைமுறையில் இருந்தது.
ii. கான் சாகிப்பின் இறப்பிற்கு பி்ன் புலித்தேவர் நெற்கட்டும் செவலை 1964-இல் மீண்டும் கைப்பற்றினார்.
iii. கம்பெனி நிர்வாகத்திற்குத் தகவல் அளிக்காமல் பாளையக்காரர்களே பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதால் யூசப்கான் துரோகி என்று குற்றம் சுமத்தப்பட்டு 1964இல் தூக்கிலிடப்பட்டார்.
iv. ஒண்டிவீரன் கட்டபொம்மனின் படைப்பிரிவுகளில் ஒன்றைத் தலமையேற்று வழி நடத்தினார்.
  1. i, ii மற்றும் iv ஆகியவை சரி
  2. i, ii மற்றும் iii ஆகியவை சரி
  3. iii மற்றும் iv ஆகியவை சரி
  4. i மற்றும் iv ஆகியவை சரி

3. கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளை கால வரிசைப்படுத்தக

1. புலித்தேவரின் இறப்பு
2. குயிலியின் இறப்பு
3. கட்டபொம்மனின் இறப்பு
4. மருதுசகோதரர்களின் இறப்பு
  1. 2, 3, 1, 4
  2. 1, 2, 3, 4
  3. 1, 3, 2, 4
  4. 3, 1, 4, 2

4. மருது பாண்டியனின் தலைமையிடம் எது?

  1. அறந்தாங்கி
  2. ஒக்கூர்
  3. பரமகுடி
  4. சிறுவாயல்

5. கீழ்கண்டவர்களில் திண்டுக்கல் கூட்டமைப்பை சாராதவர் யார்?

i. கோபால் நாயக்கர்
ii. மணப்பாறை லட்சுமி நாயக்கர்
iii. தனி எதுல் நாயக்கர்
iv. சிங்கம் செட்டி
  1. ii மட்டும்
  2. iii மட்டும்
  3. ii மற்றும் iii மட்டும்
  4. iv மட்டும்

6. முதல் கர்நாடகப் போரின் போது ஐரோப்பாவில் நடந்த போர் எது?

  1. ஏழாண்டுப்போர்
  2. ஆஸ்திரிய-பிரஸ்யப்போர்
  3. ரோஜாப்பூ போர்
  4. ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர்

7. கீழ்கண்டவற்றை கால வரிசைப்படுத்தி விடையை தேர்ந்தெடு

1. வேலூர் கலகம்
2. கட்டபொம்மனை தூக்கிடல்
3. பழனி சதித்திட்டம்
4. பாண்டிச்சேரி உடன்படிக்கை
  1. 1, 2, 3, 4
  2. 4, 3 2, 1
  3. 2, 3, 4, 1
  4. 4, 2, 3, 1

8. கீழ்கண்ட கூற்றுகளில் தீரன் சின்ன மலையை பற்றி தவறான கூற்று எது?

1. தீரன் சின்னமலை ஆங்கில மைசூர் போர்களில் கலந்து கொண்டார்
2. கொங்கு நாட்டு வீரர்களை அங்கிலேயருக்கு எதிராக ஒருங்கிணைத்தார்.
3. 1802ல் மேக்ஸ்வெல் என்ற தளபதி தீரன் சின்னமலை தோற்கடித்தார்.
4. இவர் சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்.
  1. 1 மட்டும் சரி 2, 3, 4 தவறானது
  2. 1, 2 சரியானது 3, தவறானது
  3. 1, 2, 4 சரியானது 3 மட்டும் தவறானது
  4. 1, 2, 3 சரியானது 4 மட்டும் தவறானது

9. கீழ்கண்டவற்றில் திருச்சி பிரகடனம் பற்றிய தவறான கூற்றை எழுதுக.

i. இப்பிரகடனம் மருபாண்டியர்களால் வெளியிடப்பட்டது.
ii. இப்பிரகடனம் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது.
iii. பிரகடனம் தேசிய சிந்தனையை வெளிப்படுத்துவதாக அமையவில்லை
iv. ஆற்காடு நவாப் மற்றும் முகமது அலியின் அரசியல் நடவடிக்கைகளை இப்பிரகடனம் கண்டித்தது
  1. i மட்டும்
  2. ii மட்டும்
  3. iii மட்டும்
  4. iv மட்டும்

10. சரியான விடையைத் தெரிவு செய்க

i. சிவகங்கையின் “இராணி” வேலு நாச்சியார் ஆவார்.
ii. காளையர் கோவில் போரில் கொல்லப்பட்ட முத்து வடுகநாதர் இராணி வேலு நாச்சியாரின் கணவராவார்.
iii. வேலு நாச்சியாரின் நம்பிக்கைகுரிய படைத் தளபதி குயிலை இவர் முதல் தற்கொலைப் படை வீரர் ஆவார்.
iv. மருது சகோதரர்களின் உதவியுடன் வேலு நாச்சியார் மீண்டும் இராணியாக முடி சூட்டிக் கொண்டார்.
  1. i, ii மற்றும் iv சரி
  2. i, iii மற்றும் iv சரி
  3. ii மற்றும் iii சரி
  4. அனைத்தும் சரி

11. இந்தியாவில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட முதல் பெண்ணரசி

  1. குயிலி
  2. வேலு நாச்சியார்
  3. ராணி மங்கம்மாள்
  4. ராணி இலட்சுமி பாய்

12.

கூற்று (A)வேலு நாச்சியார் ஹைதர் அலியிடம் 5000 காலட்படைகளும் 5000 குதிரைப் படைகளும் அனுப்பும் படி கடிதம் எழுதினார்
காரணம் (R)வேலு நாச்சியார் ஆங்கிலேயரோடு மோதுவதில் தீவிரமாக இருப்பதை தெரிவுப்படுத்தினார்.
  1. கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி எனினும் காரணம் (R) கூற்றை (A) சரியாக விளக்கவில்லை
  2. கூற்று (A) மற்றும் காரணம் (R) ஆகிய இரண்டுமே தவறானவை
  3. கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி காரணம் (R) கூற்றை (A) சரியாகவே விளக்குகிறது.
  4. கூற்று (A) தவறானது, காரணம் (R) சரியானது

13. அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட பொருட்களைத் தொடர்புடைய இடங

a. சிவசுப்ரமணியார்1. கயத்தாறு கோட்டை
b. கட்டபொம்மன்2. சங்ககிரி கோட்டை
c. மருது சகோதரர்கள்3. நாகலாபுரம்
d. தீரன் சின்னமலை4. திருப்பத்தூர் கோட்டை

(a) (b) (c) (d)
A) 3 1 4 2
B) 3 4 1 2
C) 3 1 2 4
D) 4 1 3 2

14. கட்டபொம்மனை தூக்கிலிட்டு கொலை செய்வதை நிறைவேற்றியவர்‌

  1. கர்னல்‌ ஹரான்‌
  2. மேஜர்‌ பானர்மென்‌
  3. எட்வர்ட்‌ கிளைவ்‌
  4. ஜான்‌ கிரடாக்‌

15. பூலித்தேவரின்‌ கட்டுப்பாட்டிற்குள்‌ இல்லாத கோட்டை ட… ஆகும்‌.

  1. நெற்கட்டும்செவல்‌
  2. வாசுதேவநல்லூர்‌
  3. பணையூர்‌
  4. சிவகிரி

16. எந்த பாளையக்காரர்‌ வீரபாண்டிய கட்டபொம்மனுடன்‌ கூட்டு வைத்துக்‌ கொள்ளவில்லை ?

  1. சாப்டூர்‌ பாளையக்காரர்‌
  2. ஏழாயிரம்‌ பண்ணை பாளையக்காரர்‌
  3. காடல்‌ குடி பாளையக்காரர்‌
  4. சிவகிரி பாளையக்காரர்‌

17. வேலூர்‌ கலகத்தின்‌ போது இந்திய ராணுவ வீரர்கள்‌ யாருடைய கொடியை ஏற்றினார்கள்‌?

  1. திப்பு சுல்தான்‌
  2. ஆற்காட்டு நவாப்‌
  3. மராத்தியர்கள்‌
  4. மருது பாண்டியர்கள்‌

18. கலெக்டர்‌ ஜாக்சன்‌ மற்றும்‌ வீரபாண்டிய கட்டபொம்மன்‌ ராமநாதபுரம்‌ சந்திப்பு நிகழ்வை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை குழுவில்‌ இடம்‌ பெற்றவர்கள்‌

I. வில்லியம்‌ பிரெளன்‌II. வில்லியம்‌ ஓர்ம்‌
III. ஜான்‌ காஸ்மேயர்‌IV. எஸ்‌.ஆர்‌. லஷ்ஷிங்டன்‌
  1. I, II மட்டும்‌
  2. II, III மட்டும்‌
  3. III, IV மட்டும்‌
  4. I, II மற்றும்‌ III மட்டும்‌

19. மருது பாண்டியர்கள்‌ தூக்கிலிடப்பட்ட இடம்‌ (Repeated Queston)

  1. விருபாட்சி
  2. காளையார்‌ கோவில்‌
  3. திருப்பத்தூர்‌
  4. கயத்தாறு

20. எந்த ஆங்கில படை அதிகாரி 1783-ல்‌ பாஞ்சாலங்‌ குறிச்சி கோட்டையை தாக்கினார்‌?

  1. வில்லியம்‌ பிளின்ட்‌
  2. வில்லியம்‌ புல்லர்டன்‌
  3. பானர்மேன்‌
  4. காலின்‌ மெக்காலே

21. மருதுபாண்டியன்‌ மற்றும்‌ வெள்ளை மருது தூக்கிலிடப்பட்ட கோட்டை (Repeated Queston)

  1. திருப்பத்தூர்‌
  2. வெள்ளைக்கோட்டை
  3. திருமயம்‌
  4. திண்டுக்கல்‌

22. சிவகங்கை வேலுநாச்சியாரின்‌ ‘உடையாள்‌ படைக்கு தலைமையேற்றவரின்‌ பெயரை குறிப்பிடுக.

  1. வெள்ளச்சி
  2. லஷ்மி
  3. குயிலி
  4. முத்தாத்தாள்‌

23. கி.பி. 1858-ல்‌ கானிங்‌ பிரபு எந்த இடத்தில்‌ மகாராணியார்‌ பிரகடனத்தை வெளியிட்டார்‌?

  1. அலகாபாத்‌
  2. டெல்லி
  3. வங்காளம்‌
  4. கான்பூர்‌

23.

1. வங்காளம்‌ மற்றும்‌ பீகாரில்‌ பிரிட்டிஷ்‌ ஆட்சி நிறுவப்பட்டதால்‌ உள்நாட்டுக்‌ கிளர்ச்சிகள்‌ தொடங்கின. மேலும்‌ அவை காலனித்துவ ஆட்சியில்‌ ஒன்றன்பின்‌ ஒன்றாக இணைக்கப்பட்டதால்‌ அவை நிகழ்ந்தன.
2. நூற்றுக்கணக்கான சிறிய கிளர்ச்சிகளைத்‌ தவிர நாற்பதுக்கும்‌ மேற்பட்ட பெரிய கிளர்ச்சிகள்‌ நடந்தன

மேலே காணப்படும்‌ கூற்றுகளில்‌ சரியானது / வை எது / எவை?

  1. 1 மட்டும்‌
  2. 2 மட்டும்‌
  3. 1மற்றும்‌ 2 ஆகியன
  4. மேற்கண்ட எவையுமில்லை

24. பின்வருவனவற்றுள்‌ எவை, 1806-ஆம்‌ ஆண்டு நடைபெற்ற வேலூர்‌ சிப்பாய்‌ கலகத்திற்கான காரணங்கள்‌ ஆகும்‌?

  1. மிருகங்களின்‌ கொழுப்பு பூசப்பட்ட தோட்டாக்கள்‌, குறைவான சம்பளம்‌, புதிய வகை தலைப்பாகை. சாதிக்குறியீடுகள்‌ மற்றும்‌ காதணிகள்‌,சுத்தமாக தாடையை மழித்தல்‌
  2. பதவி உயர்வின்மை, கடினமான தண்டனை, குறைவான சம்பளம்‌, புதியவகை தலைப்பாகை, சுத்தமாக தாடையை மழித்தல்‌
  3. மிருகங்களின்‌ கொழுப்பு பூசப்பட்ட தோட்டாக்கள்‌, பதவி உயர்வின்மை, புதிய வகை தலைப்பாகை, குறைவான சம்பளம்‌, சுத்தமாக தாடையை மழித்தல்‌
  4. பதவி உயர்வின்மை, குறைவான சம்பளம்‌, புதிய வகை தலைப்பாகை. சாதிக் குறியீடுகள்‌ மற்றும்‌ காதணிகள்‌, சுத்தமாக தாடையை மழித்தல்‌

25. பாஞ்சாலம்‌ குறிச்சி கோட்டையின்‌ மீது தாக்குதல்‌, தொடுத்தவர்‌ _________ ஆவார்‌.

  1. ஜாக்சன்‌
  2. மேஜர்‌ பேனர்மான்‌
  3. ஜென்ரல்‌ மலார்டிக்‌
  4. ஜெனரல்‌ பாஸ்காவென்‌

26. பின்வருவனவற்றுள் பிரிட்டிஷாருக்கு. எதிரான பழங்குடியினர்‌ கிளர்ச்சிக்கு முக்கிய காரணங்கள்‌ எவை?

i. பிரிட்டிஷாரின்‌ ஆட்சி அவர்களுடைய பகுதிகளில்‌ விரிவாக்கம்‌
ii. மற்றவர்களுடைய ஊடுருவலுக்கு பிரிட்டிஷ்‌ ஆதரவளித்தது
iii. உடல்‌ உழைப்பிற்கு தியில்லா தளன்‌ தேர்வு செய்தது
iv. பழங்குடியினரின்‌ தனித்திருக்கும்‌ தன்மை
  1. i மற்றும்‌ iv மட்டும்‌
  2. ii மற்றும்‌ iii மட்டும்‌
  3. i மற்றும்‌ iii மட்டும்‌
  4. i, ii மற்றும்‌ iii மட்டும்‌

27. கீழ்க்கண்ட கூற்றுகளில்‌ வீரபாண்டிய கட்டபொம்மன்‌ பற்றிய சரியான கூற்றுகள்‌ எவை?

1. கட்டபொம்மன்‌ திருவாங்கூர்‌ மன்னர்‌ ஆவார்‌
2. ஆங்கிலேயர்கள்‌ அவரைப்‌ பிடித்து தூக்கிலிட்டனர்‌
3. பாஞ்சாலங்‌ குறிச்சியின்‌ பாளையக்காரராக இருந்தார்‌
4. புரட்சிக்குப்பின்‌ அவருடைய ஆட்சிப்பகுதியை பெற்றுக்கொண்டார்‌
  1. 1 மற்றும்‌ 2
  2. 2 மற்றும்‌ 3
  3. 3 மற்றும்‌ 4
  4. 4 மற்றும்‌ 1

28. பின்வரும்‌ கூற்றை கவனி

1. நிலச்‌ சீர்த்திருத்தத்தில்‌. ஜமீன்தாரி முறையில்‌, நிலத்தை உழுபவரே அரசுக்கு வரி செலுத்துபவர்‌ ஆவார்‌.
2. ஜமீன்தாரி முறை (கார்ன்‌ வாலிஸ்‌ என்பவரால்‌ 1893 ஆண்டு துவங்கப்பட்டது.
3. ஜமீன்தார்‌ நிலத்தின்‌ சொந்தக்காரர் ஆவார்‌ ‘
4. ஜமீன்தாரி முறை வங்காளம்‌, பீகார், ஒரிசா மற்றும்‌ வாரனாசியில்‌ அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலே கண்டவற்றுள் எவை சரியான கூற்று?

  1. 1 மற்றும்‌ 2
  2. 3 மற்றும்‌ 4
  3. 2 மற்றும்‌ 3
  4. 1 மற்றும்‌ 4