6th Tamil 2022 Group 2

 

Q1: அறுவடைத் திருநாளுக்கு பொருந்தாச் சொல்? (6th New தமிழர் பெருவிழா ) (2022 Gr 2)
A) மகரசங்கராந்தி
B) லோரி
C) போகி
D) உத்தராயன்

Q2: பொருத்துக (6th New பெயர்ச்சொல்) (2022 Gr 2)
a) பொருட்பெயர் - 1. மாலை, இரவு
b) இடப்பெயர் - 2. முகம், கை
c) காலப்பெயர் - 3. நாற்காலி, புத்தகம்
d) சினைப்பெயர் - 4. வேலூர், நாமக்கல்
A. 2 3 4 1
B. 3 4 1 2
C. 4 1 2 3
D. 4 3 2 1

Q3: பொருத்துக (6th New பெயர்ச்சொல்)
a) இடுகுறிப் பொதுப்பெயர் - 1. மரங்கொத்தி
b) இடுகுறிச் சிறப்புப்பெயர் - 2. பறவை
c) காரணப் பொதுப்பெயர் - 3. காடு
d) காரணச் சிறப்புப்பெயர் - 4. பனை
A. 2 3 1 4
B. 4 1 2 3
C. 3 4 2 1
D. 2 3 4 1

Q4: திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப் பெற்றவர் ? (6th New நானிலம் படைத்தவன்) (2022 Gr 2)
A) மு.மேத்தா
B) முடியரசன்
C) கண்ணதாசன்
D) மருதகாசி

Q5: துரை மாணிக்கம் – என்பது இவரது இயற்பெயராகும் (6th New தமிழ்க்கும்மி) (2022 Gr 2)
A) சுரதா
B) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
C) முடியரசன்
D) பாரதிதாசன்

Q6: காமராசரைக் கல்விக் கண் திறந்தவர் என்று மனதாரப் பாராட்டியவர் (6th New கல்விக்கண் திறந்தவர்) (2022 Gr 2)
A) அறிஞர் அண்ணா
B) மனிதருள் மாணிக்கம் நேரு
C) மூதறிஞர் இராஜாஜி
D) தந்தை பெரியார்

Q7: சரியான விடையைத் தேர்ந்தெடு? (6th Old Book) (2022 Gr 2)
கீழ்க்கண்டவற்றுள் உ.வே.சா பற்றிய சரியான தொடரைத் தேர்ந்தெடு
1. உ.வே.சாவின் இயற்பெயர் வேங்கடரத்தினம், இவரின் ஆசிரியர் மீனாட்சி சுந்தரம்
2. குறிஞ்சிப்பாட்டு என்னும் ஓலைச் சுவடியை அச்சில் பதிப்பித்தார்.
3. உ.வே.சா மூன்றாம் தமிழ்ச்சங்கத்தின் தலைவர்
A) 1 மட்டும் சரி
B) 1 மற்றும் 2 சரி
C) 1 மற்றும் 3 சரி
D) 2 மற்றும் 3 சரி

Q8: நந்தவனத்தின் ஓர் ஆண்டி – அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி – எனும் பாடலைப் பாடிய சித்தர் (6th Old Book) (2022 Gr 2)
A) பாம்பாட்டிச் சித்தர்
B) கடுவெளிச் சித்தர்
C) பட்டினத்தடிகள்
D) திருமூலர்