6th tamil 2022 group 8

 Q1: ஆங்கிலேயரை எதிர்த்து ஆயும் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி (6th New வேலு நாச்சியார்) (2022 EO4)

(அ) ராணி மங்கம்மாள்
(ஆ) அஞ்சலை அம்மாள்
(இ) வேலு நாச்சியார்
(ஈ) மூவலூர் இராமாமிர்தம்

Q2: நாற்காலி என்பது எவ்வகைப் பெயர் என கண்டறிக: (6th New பெயர்ச்சொல்) (2022 EO4)
(அ) பொருட்பெயர்
(ஆ) சினைப்பெயர்
(இ) காலப்பெயர்
(ஈ) பண்புப்பெயர்

Q3: இந்திய நூலகவியலின் தந்தை எனப்போற்றப்படுபவர் (6th New நூலகம் நோக்கி) (2022 EO4)
(அ) டாக்டர்.அம்பேத்கர்
(ஆ) தேவ நேய பாவாணர்
(இ) முனைவர்.இரா.அரங்கநாதன்
(ஈ) இரா.பி.சேதுப்பிள்ளை

Q4: கால்நடைகளுக்கு ஊறு நேரா வண்ணம் வேலி கட்டிப் பாதுகாத்த இடங்களில் அமைந்த ஊர்கள் எவ்வாறு அழைக்கப்பெற்றன? (6th Old Book) (2022 EO4)
(அ) பாக்கம்
(ஆ) பட்டி
(இ) குறிச்சி
(ஈ) கரடு

Q5: “தமிழ் தாத்தா” என அழைக்கப்படுபவர் யார்? (6th Old Book) (2022 EO4)
(அ) உ.வே.சாமிநாதர்
(ஆ) பாரதியார்
(இ) கவிமணி தேசிய விநாயகம்
(ஈ) நாமக்கல் கவிஞர்

Q6: களைப்பு நீங்க வேலை செய்வோர் பாடுவது (6th Old Book) (2022 EO4)
(அ) குத்துப்பாடல்
(ஆ) தொழில் பாடல்
(இ) வரிப்பாடல்
(ஈ) தனிப்பாடல்