Q1: முடியரசன் இயற்றாத நூல் எது ? [2022 G4] (6th New நானிலம் படைத்தவன்)
A) பூங்கொடி
B) நீலமேகம்
C) வீரகாவியம்
D) காவியப்பாவை
Q2: பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்? [2022 G4] (6th New கல்விக்கண் திறந்தவர்)
A) எம்.ஜி.இராமச்சந்திரன்
B) மூதறிஞர் இராஜாஜி
C) பெருந்தலைவர் காமராசர்
D) கலைஞர் கருணாநிதி
Q3: ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்த வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு எது? [2022 G4] (6th New வேலுநாச்சியார்)
A) கி.பி.1730
B) கி.பி.1880
C) கி.பி.1865
D) கி.பி.1800
Q4: சரியான அகரவரிசையைத் தேர்க? [2022 G4] (6th New சுட்டெழுத்துக்கள் வினா, எழுத்துகள்)
A) மரகதம், மாணிக்கம், முத்து, கோமேதகம்
B) கோமேதகம், மரகதம், மாணிக்கம், முத்து
C) முத்து, மாணிக்கம், மரகதம், கோமேதகம்
D) மரகதம், முத்து, மாணிக்கம், கோமேதகம்
Q5: பெயர்ச்சொற்களை அகரவரிசையில் எழுதுக? [2022 G4] (6th New பெயர்ச்சொல்)
A) கிளி, தேனீ, தையல், பழம், மான், ஓணான், ஆசிரியர்
B) ஆசிரியர், ஓணான், கிளி, தேனீ, தையல், பழம், மான்
C) தேனீ, தையல், பழம், மான், ஓணான், ஆசிரியர், கிளி
D) ஆசிரியர், கிளி, தேனீ, தையல், பழம், மான், ஓணான்.
Q6: பெயர்ச்சொற்களைப் பொருத்துக? [2022 G4] (6th New பெயர்ச்சொல்)
a) மல்லிகை – 1. சினைப்பெயர்
b) பள்ளி – 2. பண்புப்பெயர்
c) கிளை – 3. இடப்பெயர்
d) இனிமை – 4. பொருள்பெயர்
A) 4 3 1 2
B) 3 4 2 1
C) 4 3 2 1
D) 2 3 1 4
Q7: பொருத்தமற்ற பெயர்ச்சொற்களை எடுத்து எழுதுக? [2022 G4] (6th New பெயர்ச்சொல் )
a) காலப்பெயர் – செம்மை
b) சினைப்பெயர் – கண்
c) பண்புப்பெயர் – ஆண்டு
d) தொழிற்பெயர் – ஆடுதல்
A) (a), (c)
B) (a), (b)
C) (c), (d)
D) (a), (d)
Q8: “மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன் – இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்? [2022 G4] (6th New மூதுரை)
A) ஆத்திச்சூடி
B) கொன்றை வேந்தன்
C) நல்வழி
D) மூதுரை
Q9: ‘மரமும் பழைய குடையும்’ – ஆசிரியர் (6th Old Tamil Book)
A. பாரதிதாசன்
B. அழகிய சொக்கநாதப் புலவர்
C. காளமேகப் புலவர்.
D. புதுமைப்பித்தன்
Q10: பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய இரண்டு தொகுதிகளையும் அச்சிட்டு வெளியிட்டவர்? (6th Old Tamil Book)
A) மெய்யப்பர்
B) உ.வே.சாமிநாதர்
C) இலக்குவனார்
D) மீனாட்சி சுந்தரனார்