Q1: இராமநாதபுரத்தை ஆட்சி செய்த 'செல்லமுத்து' மன்னரின் ஒரே மகள்? (6th New Book வேலுநாச்சியார்) (2023 TNUSRB SI)
a) ஜான்சிராணி
b) இராணி மங்கம்மாள்
c) வேலுநாச்சியார்
d) மீனாட்சியம்மை
Q2: "தென்திசைக் குமரி ஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்" என்னும் அடிகளில் பறவைகள் வலசை வந்த செய்தியைக் கூறியவர் யார்? (6th New Book சிறகின் ஓசை) (2023 TNUSRB SI)
a) சத்தி முத்தப் புலவர்
b) கபிலர்
c) பரணர்
d) ஒளவையார்
Q3: "துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிட வேணும் - நீ சோம்பலைக் - நீ கொல்லும் திறன் பெற்றிட வேணும்” இப்பாடல் வரிகளின் ஆசிரியர் யார்? (6th New Book துன்பத்தை வெல்லும் கல்வி) (2023 TNUSRB SI)
a) பாரதியார்
b) பாரதிதாசன்
c) பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
d) அழ. வள்ளியப்பா
Q4: பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இருப்பவை (6th New Book Back முதலெழுத்தும், சார்பெழுத்தும்) (2023 TNUSRB SI)
a) சுட்டு எழுத்துகள்
b) முதல் எழுத்துகள்
c) வினா எழுத்துக்கள்
d) சார்பெழுத்துகள்
Q5: "நீக்குதல்" என்னும் சொல்லின் எதிர்ச்சொல் சால்லின்? (6th New Book Back கணியனின் நண்பன்) (2023 TNUSRB SI)
a) போக்குதல்
b) தள்ளுதல்
c) அழித்தல்
d) சேர்த்தல்
Q6: Volunteer என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லை எழுதுக? (6th New Book Back பெயர்ச்சொல்) (2023 TNUSRB SI)
a) சீர்திருத்தவாதி
b) தொண்டன்
c) தன்னார்வலர்
d) சமூகவாதி
Q7: தமிழ் மொழியின் இலக்கண வகைகள் எத்தனை? (6th New Book தமிழ் எழுத்துகளின் வகை தொகை) (2023 TNUSRB SI)
a) 3
b) 2
c) 6
d) 5
Q8: "இந்திய தேசிய இராணுவம் - தமிழர் பங்கு" என்ற நூலுக்காகத் தமிழக அரசின் பரிசு பெற்றவர்? (6th New Book அறிவியல் ஆத்திசூடி) (2023 TNUSRB SI)
a) பேராசிரியர் மா.சு. அண்ணாமலை
b) பேராசிரியர் பெ.சு.மணி
c) பேராசிரியர் வீ. அரசு
d) பேராசிரியர் வ.சுப.மாணிக்கம்
Q9: கூற்று 1 : சிலப்பதிகாரம் முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்றெல்லாம் போற்றப்படுகிறது.
கூற்று 2 : சீவக சிந்தாமணியின் மையக்கருத்து இன்பங்களைத் துறந்து துறவு பூண வேண்டும் என்பதாகும்? (6th New Book சிலப்பதிகாரம்) (2023 TNUSRB SI)
a) கூற்று 1 சரி, 2 தவறு
b) கூற்று 1, 2 சரி
c) கூற்று 1, 2 தவறு
d) கூற்று 1 தவறு, 2 சரி
Q10: டாக்டர் இரா.அரங்கநாதன் விருது எந்தத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்குத் தரப்படுகிறது? (6th New Book நூலகம் நோக்கி) (2023 TNUSRB SI)
a) சிறந்த நூலகர்களுக்கு
b) சிறந்த கதாசிரியருக்கு
c) சிறந்த கவிதையாளருக்கு
d) சிறந்த நூலாசிரியருக்கு
Q11: சரியான தொடர் எது? (6th New Book மயங்கொலிகள்)
a) கதிரவன் மறையும் காலையில் உதித்து
மாலையில் b) மாலையில் காலையில் உதித்து மறையும் கதிரவன்
c) கதிரவன் காலையில் உதித்து மாலையில் மறையும்
d) மறையும் காலையில் கதிரவன் உதித்து மாலையில்
Q12: தவறான சொல்லைத் தேர்ந்தெடுக்கவும். (6th New Book இன எழுத்துக்கள்)
a) கண்டான்
b) வென்ரான்
c) நண்டு
d) வண்டு
Q13: சொல்லின் இடையில் மட்டுமே வரும் எழுத்து எது? (6th New Book Back மொழி முதல், இறுதி எழுத்துகள்)
a) மெய்
b) உயிர்மெய்
c) ஆய்தம்
d) உயிர்
Q14: கூற்று 1 - தமிழ் எழுத்துகளை முதலெழுத்து, சார்பெழுத்து என இருவகையாகப் பிரிப்பர்.
கூற்று 2 - உயிர் பன்னிரண்டு, மெய் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் சார்பெழுத்துகள் எனப்படும். (6th New Book முதலெழுத்தும், சார்பெழுத்தும்)
a) கூற்று 1 சரி, 2 தவறு
b) கூற்று 2 சரி, 1 தவறு
c) கூற்று 1, 2 சரி
d) கூற்று 1, 2 தவறு
Q15: கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகிய மும்பெருங் காவியங்களைப் படைத்தவர் (6th New Book காணி நிலம்)
a) நாமக்கல் கவிஞர்
b) பாரதிதாசன்
c) பாரதியார்
d) அழ. வள்ளியப்பா