6th Tamil Book 2022 TNTET Paper - 1A

Q1: அணி'' என்பது __________. [TNTET Paper -1 (14-10-2022 FN)]

(A) காரண கருத்தா பெயர்
(B) காரணச் சிறப்புப் பெயர்
(C) காரணப் பெயர்
(D) காரண பொதுப் பெயர்

Q2: தவறான சொல்லை வட்டமிடுக. [TNTET Paper -1 (14-10-2022 FN)]
(A) நண்டு
(B) கண்டான்
(C) வென்ரான்
(D) வண்டு

Q3: கூற்று 1: உயிர் எழுத்துகள் பன்னிரெண்டும் மொழிக்கு முதலில் வரும்.
கூற்று 2: மெய்யெழுத்துகள் பதினெட்டும் மொழிக்கு முதலில் வாரா. [TNTET Paper -1 (14-10-2022 FN)]
(A) கூற்று 1ம் கூற்று 2ம் தவறு
(B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
(C) கூற்று 1 தவறு கூற்று 2 சரி
(D) கூற்று 1ம், கூற்று 2ம் சரி

Q4: மனிதன் எப்போதும் உண்மையையே __________. [TNTET Paper -1 (14-10-2022 FN)]
(A) உழைக்கின்றான்
(B) உரைக்கின்றான்
(C) உறைகின்றான்
(D) உரைகின்றான்

Q5: கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்னும் பாடல் அடி இடம் பெற்றுள்ள நூல் __________.[TNTET Paper -1 (14-10-2022 FN)]
(A) மூதுரை
(B) நல்வழி
(C) ஆத்திச் சூடி
(D) கொன்றை வேந்தன்

Q6: காந்தியடிகளைக் கவர்ந்த நூல் : [TNTET Paper -1 (14-10-2022 AN)]
(A) சிலப்பதிகாரம்
(B) புறநானூறு
(C) திருக்குறள்
(D) கம்பராமாயணம்

Q7: அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டுத் தளங்களில் தமிழ் நூல்கள் உள்ள தளம் : [TNTET Paper -1 (14-10-2022 AN)]
(A) தரைத் தளம்
(B) இரண்டாவது தளம்
(C) ஐந்தாம் தளம்
(D) முதல் தளம்

Q8: வேலு நாச்சியார் __________ என்ற வீரமங்கைக்கு நடுகல் அமைத்து வணங்கினார். [TNTET Paper -1 (14-10-2022 AN)]
(A) ஜானகியம்மாள்
(B) குயிலி
(C) அஞ்சலையம்மாள்
(D) உமையாள்

Q9: ஓர் எழுவாய், பல பயனிலைகளைப் பெற்று வரும் போது, ஒவ்வொரு பயனிலையின் இறுதியிலும் குறிக்கப்படுவது : [TNTET Paper -1 (14-10-2022 AN)]
(A) காற்புள்ளி
(B) அரைப்புள்ளி
(C) முற்றுப்புள்ளி
(D) வினாக் குறி

Q10: கடல் நீர் முகந்த கமஞ் சூழ் எழிலி'' எனும் வரி இடம் பெற்ற நூல் : [TNTET Paper -1 (16-10-2022 AN)]
(A) தொல்காப்பியம்
(B) கார் நாற்பது
(C) திருக்குறள்
(D) நற்றிணை

Q11: திருவள்ளுவராண்டைக் குறிப்பிட நடைமுறை ஆண்டுடன் எத்தனை ஆண்டுகளைக் கூட்ட வேண்டும் ? [TNTET Paper -1 (16-10-2022 AN)]
(A) 33
(B) 30
(C) 31
(D) 34

Q12: சுதேசி நாவாய்ச் சங்கம்' – என்ற கப்பல் நிறுவனத்தை வ.உ.சி. பதிவு செய்த ஆண்டு __________. [TNTET Paper -1 (16-10-2022 AN)]
(A) 1906 ஆம் ஆண்டு டிசம்பர் 16
(B) 1906 ஆம் ஆண்டு அக்டோபர் 16
(C) 1906 ஆம் ஆண்டு செப்டம்பர் 16
(D) 1906 ஆம் ஆண்டு நவம்பர் 16

Q13: பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது : [TNTET Paper -1 (16-10-2022 AN)]
(A) உரிச் சொல்
(B) இடைச் சொல்
(C) ஆகுபெயர்
(D) வினைத்தொகை

Q14: அகர வரிசையில் அமைந்த சரியான விடையைக் காண்க : [TNTET Paper -1 (17-10-2022 FN)]
(A) பெண்கள், பையன், போக்குவரத்து, புதுமை
(B) புதுமை, பெண்கள், பையன், போக்குவரத்து
(C) பையன், பெண்கள், புதுமை, போக்குவரத்து
(D) போக்குவரத்து, பையன், புதுமை, பெண்கள்

Q15: சலீம் அலியின் வாழ்க்கை வரலாற்று நூலின் பெயர் __________. [TNTET Paper -1 (17-10-2022 FN)]
(A) சிட்டுக் குருவிகளின் வீழ்ச்சி
(B) சிட்டுக் குருவிகளின் வாழ்க்கை.
(C) பறவை மனிதரின் வாழ்க்கை.
(D) நானும் சிட்டுக் குருவியும்

Q16: வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி இடம்பெற்ற நூல் : [TNTET Paper -1 (17-10-2022 FN)]
(A) பதிற்றுப்பத்து
(B) திருவள்ளுவமாலை
(C) நற்றிணை
(D) முல்லைப்பாட்டு

Q17: திரவப் பொருள்களை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவைச் சுருக்க முடியாது' என்ற அறிவியல் கருத்தைத் தம் பாடலில் வைத்தவர் : [TNTET Paper -1 (17-10-2022 FN)]
(A) ஒளவையார்.
(B) கம்பர்
(C) திருவள்ளுவர்
(D) கபிலர்

Q18: கடைச்சங்கக் காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் : [TNTET Paper -1 (18-10-2022 FN)]
(A) வட்டெழுத்து
(B) ஒலி எழுத்து
(C) கண்ணெழுத்துகள்
(D) ஓவிய எழுத்து

Q19: பறவை, மரம் ஆகியவை முறையே __________. [TNTET Paper -1 (18-10-2022 FN)]
(A) காரணப் பொதுப் பெயர், இடுகுறிப் பொதுப் பெயர்
(B) இடுகுறிச் சிறப்புப் பெயர், காரணப் பொதுப் பெயர்
(C) காரணப் பொதுப் பெயர், காரணச் சிறப்புப் பெயர்
(D) இடுகுறிப் பொதுப் பெயர், இடுகுறிச் சிறப்புப் பெயர்

Q20: பூமியின் கிழக்கு வாசலாகத் திகழும் நாடு எது ? [TNTET Paper -1 (18-10-2022 FN)]
(A) சீனா
(B) இலங்கை
(C) இந்தியா
(D) பாகிஸ்தான்

Q21: ஆர்டிக் ஆலா – என்பது __________. [TNTET Paper -1 (18-10-2022 FN)]
(A) பயணிகள் கப்பல்
(B) கடல் வாழ் தாவரம்
(C) கடல் வாழ் விலங்கு
(D) ஒரு வகை பறவை

Q22: கீழ்க்கண்டவற்றுள் 'புறச்சுட்டு' க்குச் சான்று எது ? [TNTET Paper -1 (18-10-2022 FN)]
(A) அவன்
(B) இவன்
(C) அவர்
(D) அவ்வானம்.

Q23: இனவெழுத்து இல்லாத தமிழெழுத்து : [TNTET Paper -1 (18-10-2022 FN)]
(A) மெய்யெழுத்து
(B) ஆய்த எழுத்து.
(C) உயிரெழுத்து
(D) உயிர் மெய்யெழுத்து

Q24: வேலுநாச்சியாரின் அமைச்சர் __________. [TNTET Paper -1 (18-10-2022 FN)]
(A) குயிலி
(B) பெரிய மருது
(C) முத்துவடுகநாதன்
(D) தாண்டவராயர்

Q25: உபபாண்டவம்' என்ற நூலை எழுதியவர் __________. [TNTET Paper -1 (19-10-2022 FN)]
(A) எஸ். இராமகிருஷ்ணன்
(B) ஜெயகாந்தன்
(C) ஜெயமோகன்
(D) பிரான்சிஸ் கிருபா

Q26: உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் __________ என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். [TNTET Paper -1 (19-10-2022 FN)]
(A) அது
(B) ஓர்
(C) அஃது
(D) இது

Q27: மெலிந்து போதல்' – என்னும் பொருளைக் குறிக்கும் சொல் : [TNTET Paper -1 (19-10-2022 FN)]
(A) இலை
(B) இழை
(C) இளை
(D) குலை

Q28: உயிர் எழுத்து பன்னிரெண்டும், எதை இடமாக கொண்டு பிறக்கின்றது ? [TNTET Paper -1 (19-10-2022 FN)]
(A) மார்பு
(B) கழுத்து
(C) வாய்
(D) மூக்கு

Q29: மேல் பற்களின் அடியை நாக்கு தொடும் போது பிறக்கும் எழுத்து : [TNTET Paper -1 (19-10-2022 FN)]
(A) ழ
(B) ள
(C) ன
(D) ல

Q30: சிட்டுக் குருவி – பெயர்க்காரணம் பெற்றது : [TNTET Paper -1 (19-10-2022 FN)]
(A) சிறியதாக இருப்பதால்
(B) சிட்டென்று பறப்பதால்
(C) விரைவாக பறந்து செல்வதால்
(D) வீட்டில் கூடு கட்டுவதால்